Advertisment

News Highlights: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப். 1 முதல் தடுப்பூசி

ஐந்து மாநில தேர்தல்கள் குறித்த கள நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Coronavirus vaccine on march 1 all above 60 45 plus with comorbidities Tamil News

Coronavirus vaccine on March 1

தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றியை உறுதி செய்யப் போவது யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்த நிலையில் புதிய தலைமுறை நடத்திய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : தமிழக முதல்வர் யார்? புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு

தஞ்சையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா

தஞ்சையில் இதுவரை 180 பள்ளி மாணவர்கள் மற்றும் 13 கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐந்து மாநில தேர்தல்கள் குறித்த கள நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



  • 21:22 (IST) 23 Mar 2021
    கொரோனா பாதிப்பு பகுதிகளில் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வல்லுநர் குழு - தமிழக அரசு

    கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வல்லுநர் குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • 21:19 (IST) 23 Mar 2021
    பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் - தமிழக அரசு

    பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 20:52 (IST) 23 Mar 2021
    ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காததற்கு ஸ்டாலின் கண்டனம்

    ஐ.நா மனித உரிமைகல் மன்றத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 20:51 (IST) 23 Mar 2021
    ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காததற்கு ஸ்டாலின் கண்டனம்

    ஐ.நா மனித உரிமைகல் மன்றத்தில் கொண்டுவரப்பட்ட

    இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 20:51 (IST) 23 Mar 2021
    ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காததற்கு ஸ்டாலின் கண்டனம்

    ஐ.நா மனித உரிமைகல் மன்றத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 20:48 (IST) 23 Mar 2021
    அதிமுக ராஜ்ய சபா எம்.பி முகமது ஜான் மரணம்; ஆளுநர் இரங்கல்

    அதிமுக மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் மறைவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 20:22 (IST) 23 Mar 2021
    ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு கொரோனா பாதிப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல். கொரோனா தொற்று உறுதியானதால் மாதவராவ் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்.



  • 19:21 (IST) 23 Mar 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா தொற்று - 9 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 19:18 (IST) 23 Mar 2021
    சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் 5-ம் தேதி வரை சென்னையிலிருந்து கூடுதலாக 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:16 (IST) 23 Mar 2021
    ஏப்ரல் 6, 7 தேதிகளில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னை வர ஏதுவாக 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:54 (IST) 23 Mar 2021
    அதிமுக ராஜ்ய சபா எம்.பி முகமது ஜான் மரணம்

    அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பால் காலமானார்.



  • 16:39 (IST) 23 Mar 2021
    இலங்கைக்கு எதிராக நடந்த ஐ.நா. வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை!

    போர் குற்ற விவகாரம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட சோதனை வாக்கெடுப்பில் இந்திய பிரதிநிதி கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது



  • 16:21 (IST) 23 Mar 2021
    'விருதுகள் ஊக்கப்படுத்ததானே தவிர...’ தேசிய திரைப்பட விருதுகள் குறித்து வெற்றிமாறன் கருத்து

    ’அசுரன்’ படத்திற்கு சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது குறித்து அந்த படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ’’விருதுகள் ஒரு அடி முன்னால் செல்வதற்கு நம்மை ஊக்கப்படுத்துவதற்கான ஓர் முக்கியமான விஷயம். தவிர, அசுரன் போன்ற திரைப்படத்தின் முக்கியத்துவமே ஓர் சமூகம் குறித்த விழிப்புணர்வை அதிக மக்களிடம் கொண்டுசெல்வதுதான்’’ என்று கூறியுள்ளார்.



  • 16:16 (IST) 23 Mar 2021
    தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 81% பதிவு!

    மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் தினசரி கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 40,715. இதில், இந்த 6 மாநிலங்களில் மட்டும் 80.90% பதிவாகியுள்ளது.



  • 15:38 (IST) 23 Mar 2021
    ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி !

    அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.



  • 15:17 (IST) 23 Mar 2021
    முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமின்!

    நீதிபதிகளை அவதூறாக விமர்சித்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோல் செய்ய மாட்டேன் என கர்ணன் உத்தரவாதம் அளித்ததை ஏற்று அவருக்கு இந்த நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது



  • 15:00 (IST) 23 Mar 2021
    செங்கல்பட்டு அருகே 80 கிலோ தங்கம் பறிமுதல்

    செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் சுங்கச்சாவடியில் சுமார் 80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை தங்க நகை மாளிகையில் இருந்து செங்கல்பட்டுக்கு கொண்டு செல்வதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.



  • 14:19 (IST) 23 Mar 2021
    தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் விஜயகாந்த்!

    நாளையிலிருந்து 5 நாட்களுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.



  • 13:42 (IST) 23 Mar 2021
    நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு முதல் அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 13:37 (IST) 23 Mar 2021
    பிரச்சாரங்களில் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

    பிரசாரங்களில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் அதிகாரத்தை பயன்படுத்துவதைத் தடுக்க கடும் விதிகளை வகுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 13:35 (IST) 23 Mar 2021
    சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்

    கிருஷ்ணகிரி திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.



  • 12:19 (IST) 23 Mar 2021
    பாலியல் புகார் வழக்கை 8 வாரத்திற்குள் முடித்துவிடுவோம்

    சிறப்பு டி.ஜி.பிக்கு எதிராக பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் வழக்கை 8 வாரத்திற்குள் முடித்துவிடுவோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



  • 12:16 (IST) 23 Mar 2021
    நீட் தேர்வை தடுக்க முடியவில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு

    காவிரி உரிமையை மீட்கவோ, நீட் தேர்வை தடுக்கவோ முடியவில்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று முக ஸ்டாலின் பிரச்சாரம்



  • 11:40 (IST) 23 Mar 2021
    கொரோனா பரவல் தடுப்பு பணி குறித்து ஆலோசனை

    கொரோனா பரவல் தடுப்பு பணி குறித்து தலைமை செயலாளர் மருத்துவ நிபுணர் குழுவுடன் சென்னையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். நோய் தடுப்பு பணி, தடுப்பூசி போடும் பணியை மேலும் வேகப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 10:56 (IST) 23 Mar 2021
    வாகன சோதனையில் நேர்மையே கிடைக்கும்

    திருச்சி திருவெறும்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வாகனங்களை சோதனையிட்டால் நேர்மையும் வேர்வையும் தான் கிடைக்கும். அதை தவிர தேநீர் சாப்பிட வைத்திருக்கும் காசு தான் இருக்கும். கடந்த தேர்தலில் ஒருவர் வீட்டில் கட்டு கட்டாக பணம் எடுக்கப்பட்டதே அவரிடம் இது வரை கேள்வியே கேட்கப்படவில்லை என்றார் கமல்



  • 10:52 (IST) 23 Mar 2021
    எனக்கு 'சிவசாமி' கதாபாத்திரம் வழங்கியதற்காக வெற்றிமாறனுக்கு நன்றி

    தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெற்றி மாறனுக்கு நன்றி கூறி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை வெல்வது ஒரு கனவு, தேசிய விருதை 2 முறை வென்றது மிகவும் ஆசீர்வாதத்திற்குரிய விஷயம் என்று ட்விட்டரில் மகிழ்ச்சி



  • 10:41 (IST) 23 Mar 2021
    தென்காசி - விருதுநகர் மாவட்டங்களில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

    திமுக இளைஞரணி செயலாளர் இன்று விருதுநகரின் திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் பகுதிகளிலும் தென்காசியில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் ஆலங்குளம் பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.



  • 10:39 (IST) 23 Mar 2021
    தேசிய விருது பெரும் அனைவரையும் வாழ்த்துகிறேன் - முக ஸ்டாலின்

    கடந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் முக ஸ்டாலின்

    தேசிய விருது பெறும் @dhanushkraja @VijaySethuOffl @rparthiepan @immancomposer ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!



    அசுரன் @VetriMaaran-க்கு அன்புநிறை வாழ்த்துகள்!



    அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்!



    மென்மேலும் சிறப்புகளைப் பெறுக! pic.twitter.com/1tFK3RPkRC

    — M.K.Stalin (@mkstalin) March 23, 2021


  • 10:10 (IST) 23 Mar 2021
    கனிமொழி பிரச்சாரம்

    திமுக எம்.பி. கனிமொழி இன்று அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்காக திருவெரும்பூரில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

    Dravida Munnetra Kazhagam (DMK) MP Kanimozhi campaigns for party candidate Anbil Mahesh Poyyamozhi in Thiruverumbur. tamilnaduelections pic.twitter.com/G7NAgqADM6

    — ANI (@ANI) March 23, 2021


  • 10:05 (IST) 23 Mar 2021
    ஒரே நாளில் 40 ஆயிரத்து 715 நபர்களுக்கு கொரோனா

    இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 40715 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 199 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,16,86,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,11,81,253 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 10:01 (IST) 23 Mar 2021
    ஜெர்மனியில் ஊரடங்கு

    ஜெர்மனியில் ஏப்ரல் 18ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் விடுமுறைகளில் 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார்.



  • 10:00 (IST) 23 Mar 2021
    இலங்கை கடற்கொள்ளையர்கள்

    கோடியக்கரை அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார்.



  • 09:33 (IST) 23 Mar 2021
    வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிய பாமக

    புதுவை தேர்தலில் பாஜக, என்.ஆர். கான்ங்கிரஸ், அதிமுக கூட்டணியினான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றிருந்தது. என்.ஆர். காங்கிரஸிற்கு 16 தொகுதிகளும் பாஜகவுக்கு 9 தொகுதிகளும் அதிமுகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் புதுச்சேரியில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக கூறி வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று பாமக வேட்பாளர்கள் 10 பேரும் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.



Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment