Advertisment

News Highlights: தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

ஐந்து மாநில தேர்தல் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வரும் நிலையில் இன்று முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து இறுதி நேரத்தில் பிரிந்த தேமுதிக தற்போது அமமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அக்கூட்டணியில் இக்கட்சி மொத்தம் 60 இடங்களில் போட்டியிட உள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதியில் தொடங்கி திருத்தணி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார் விஜயகாந்த்.

Advertisment

மேலும் படிக்க : கருணாநிதி நாவலரை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றினாரா? பழனிசாமி கூறுவது என்ன?

தஞ்சையில் தீவிரமாக பரவும் கொரோனா

தஞ்சை பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது இரண்டு பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருப்பனந்தாள் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 மாணவர்களுக்கும் திருவையாறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:56 (IST) 24 Mar 2021
    நடிகை குஷ்புக்கு ஆதரவாக சுந்தர்.சி பிரச்சாரம்

    தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். இதனால் மனைவிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவரது கணவரும் பிரபல இயக்குநருமான சுந்தர்.சி கூறுகையில், இது குஷ்புவின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அவர் களத்தில் இறங்கியுள்ளார். அதற்கு இந்த தேர்தல் அவருக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • 19:35 (IST) 24 Mar 2021
    வேளச்சேரி தொகுதியில் ராகுல்காந்தி பிரச்சாரம்

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 28-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேளச்சசேரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்



  • 18:49 (IST) 24 Mar 2021
    நாளை முதல் தபால் ஓட்டுக்கள் பெறப்படும் என அறிவிப்பு

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,நாளை முதல் தபால் ஓட்டுக்கள் பெறப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் அறிவிக்கப்பட்டு்ள்ளது.



  • 17:30 (IST) 24 Mar 2021
    நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மாற்றம்

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் துறைமுகம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி துறைமுகம் தொகுதியில் அகமது பாசில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் வைகுண்டமாரி போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்



  • 16:35 (IST) 24 Mar 2021
    ஏப்ரல் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு!

    சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் ஏப்ரல் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது



  • 16:24 (IST) 24 Mar 2021
    ஜெய்சங்கர் பதவி விலக ப.சிதம்பரம் வலியுறுத்தல்!

    ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "மத்திய அரசின் வற்புறுத்தலால் ஐ.நாவில் வாக்களிக்காமல் இருந்தால் ஜெய்சங்கர் பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.



  • 16:17 (IST) 24 Mar 2021
    விஜய் 65 படத்தின் முக்கிய அறிவிப்பு!

    விஜய் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



  • 16:14 (IST) 24 Mar 2021
    கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் இடமாற்றம்!

    தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. புதிய ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்க உள்ளார். அதே போல் புதிய காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 16:10 (IST) 24 Mar 2021
    இந்தியாவின் 18 மாநிலங்களில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு - மத்திய அரசு

    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை உருவாகியுள்ள நிலையில், 18 மாநிலங்களில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.



  • 15:31 (IST) 24 Mar 2021
    "பாரதிய ஜனதா கட்சி, வெளியில் இருந்து வந்தேறிகளை அழைத்து வருகிறது” - மம்தா பானர்ஜி

    "உத்தர பிரதேசத்தில் இருந்து காவி உடை அணிந்த, பாக்குகளை மென்றுகொண்டு வருவோரை, பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மேற்குவங்கத்திற்கு அனுப்பி வருகிறது. அத்தகைய வெளியாட்கள் எங்கள் கலாச்சாரத்தையே அளிக்கிறார்கள்" என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.



  • 15:06 (IST) 24 Mar 2021
    வித்தியாச முறையில் வாக்கு சேகரிப்பு

    நெல் நடவு செய்தபடியே வாக்குகளை சேகரித்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.



  • 13:45 (IST) 24 Mar 2021
    பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்

    தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அதன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.



  • 13:44 (IST) 24 Mar 2021
    கரூரில் 487 தேர்தல் விதிமீறல் புகார்கள் - சத்யபிரதா சாகு

    தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் அதிகளவு 487 புகார்கள் பதிவு ஆகியிருக்கிறது என்றும் அவற்றில் 440 புகார்கள் உண்மைத்தன்மை உடையவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.



  • 12:36 (IST) 24 Mar 2021
    மேற்கு வங்கத்தின் வளர்ச்சியே பாஜகவின் குறிக்கோள்

    மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும்  தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தின் வளர்ச்சியே பாஜகவின் குறிக்கோள் என்றும், அம்மாநிலத்தின் எதிர்காலத்திற்காக உழைக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். 



  • 12:35 (IST) 24 Mar 2021
    ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவிட இயலாது

    வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டால், ஒப்புகை சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் அனுமதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.



  • 11:41 (IST) 24 Mar 2021
    தமிழகத்தை சீரமைக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது - கமல் ஹாசன்

    தமிழகத்தை சீரமைக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். தற்போது கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அவர்.



  • 11:37 (IST) 24 Mar 2021
    உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் 50 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்க பதக்கம் வென்றார்.



  • 11:36 (IST) 24 Mar 2021
    உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயர் பரிந்துரை

    உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயரை பரிந்துரை செய்து எஸ்.ஏ. போப்டே மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஏப்ரல் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார்.



  • 10:47 (IST) 24 Mar 2021
    சிறப்பு பேருந்துகள்

    சட்டமன்ற தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் 5 வரை 3090 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை, பெங்களூர், திருப்பூர், சேலம் பகுதிகளில் இருந்து 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 3 தேதி வரை கோயம்பேட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.



  • 10:45 (IST) 24 Mar 2021
    தலைவன் பேச்சை கேட்டு வளர்ந்தவன் நான் - முதல்வர்

    தலைவன் பேச்சை கேட்டு வளர்ந்தவன் இங்கு மக்கள் தான் முதல்வர். அதிமுகவின் ஆட்சியை கவிழ்க்க திமுக பக்கத்திற்கு சென்றவர் செந்தில் பாலாஜி என்று முதல்வர் பிரச்சாரம். அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.



  • 10:12 (IST) 24 Mar 2021
    தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை உருவாகியுள்ளது

    தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை உருவாகியுள்ளது எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.



  • 09:50 (IST) 24 Mar 2021
    மிரட்டும் கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 23,907 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 275 பேர் உயிரிழப்பு



  • 09:24 (IST) 24 Mar 2021
    சேலம் பொதுக்கூட்டத்தில் முக ஸ்டாலின், ராகுல் பேச்சு

    வரும் 28ம் தேதி அன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, அந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.



  • 09:09 (IST) 24 Mar 2021
    தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வருகிறார் ப்ரியங்கா காந்தி

    தமிழகம் மற்றும் புதுவை தேர்தல்களில் நட்சத்திர பரப்புரையாளர்களாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகர்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எப்போது இவர்களின் பிரச்சாரம் துவங்கும் என்று தெடியவில்லை.



  • 09:06 (IST) 24 Mar 2021
    தேர்தல் பணிகள் குறித்து முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

    தேர்தல் பணிகள் குறித்து சேலத்தில் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று எடப்பாடி தொகுதியில் அதிமுகவிற்காக வாக்கு சேகரிக்க உள்ளார் துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.



  • 09:04 (IST) 24 Mar 2021
    கோவையில் வங்கி மூடல்

    கொரோனா பரவல் காரணமாக கோவை பீளமேடு அருகே அமைந்திருக்கும் செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மூடப்பட்டது. ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • 08:46 (IST) 24 Mar 2021
    மீண்டும் விறகு அடுப்பு தான்

    அதிக விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கே.என். நேருவை ஆதரித்து திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி , டெல்லியில் அடகு வைக்கப்பட்ட நலனை மீட்க திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். கலைஞர் உங்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டவ் வழங்கினார். ஆனால் தற்போதைய ஆட்சியில் மீண்டும் விறகு அடுப்பிற்கே செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று அவர் கூறினார்.



  • 08:43 (IST) 24 Mar 2021
    வன்னியர் இடஒதுக்கீடு தற்காலிகமானது

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது என்றும் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கூறினார்.



  • 08:41 (IST) 24 Mar 2021
    24 நாட்களுக்கு பிறகு குறைந்த பெட்ரோல் டீசல் விலை

    கடந்த 24 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீச்ல விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் குறைந்து 92.95க்கும், டீசல் விலை 16 காசுகள் குறைந்து 86.29க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • 08:41 (IST) 24 Mar 2021
    பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ. 1 கோடி

    பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் ஒரு சாக்குமூட்டையில் ஒரு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.



Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment