Advertisment

News Highlights: திமுக கூட்டணியில் இன்று தொகுதிகள் முடிவு?

Tamil News : சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன

author-image
WebDesk
New Update
News Highlights: திமுக கூட்டணியில் இன்று தொகுதிகள் முடிவு?

Tamil Nadu News Updates: திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. உதயசூரியன் சின்னம் 185 இடங்களுக்கு மேல் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இன்று தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisment

சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 1,500 ரூபாய் குடும்பத் தலைவியிடம் வழங்கப்படும், குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று அஇஅதிமுக நேற்று அறிவித்தது.

முன்னதாக, திருச்சி – சிறுகனூரில் நடைபெற்ற ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம் என்று திமுக தலைவர் மு. க ஸ்டாலின்  அறிவித்திருந்தார்.



வரும் 12-ந்தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பா பழனிசாமி கூறினார். வேட்பாளர் பட்டியிலில் இழுபறி என்று ஊடகங்களில் வரும் தகவலை முற்றிலும் மறுத்தார்.

இதற்கிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணியில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.






























22:10 (IST)09 Mar 2021












































பெண் எஸ்.பி.யை மிரட்டிய புகாரில் எஸ்.பி. கண்ணன் சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்து மிரட்டிய புகாரில், செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

21:29 (IST)09 Mar 2021












































தமிழகம் முழுவதும் பரவலாக தொகுதிகளை கேட்டிருக்கிறோம் - கே.எஸ்.அழகிரி பேட்டி

திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தமிழகம் முழுவதும் பரவலாக தொகுதிகளை கேட்டிருக்கிறோம். நாளை நண்பகல் 12 மணிக்கு தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்” என்று தெரிவித்தார்.

20:29 (IST)09 Mar 2021












































புதுச்சேரியில் தனித்து போட்டியிட பாமக முடிவு

புதுச்சேரியில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் 3 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு உரிய பிரதிநிதித்துவம், உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் புதுச்சேரியில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என பாமக செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

19:24 (IST)09 Mar 2021












































திமுக கூட்டணியில் கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தெந்த தொகுதிகள் என்பது நாளை மாலைக்குள் முடிவாகும் என தகவல் 

18:33 (IST)09 Mar 2021












































அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஓவைசி

அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் கூட்டத்தில் ஓவைசி பங்கேற்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னையில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஓவைசி கலந்து கொள்கிறார். அமமுக கூட்டணியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

18:20 (IST)09 Mar 2021












































மநீம கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவு

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்பாடு நிறைவடைந்தது. மநீம -154, சமக - 40, ஐஜேகே - 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

18:17 (IST)09 Mar 2021












































நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்துள்ளது - ஐ.யூ.எம்.எல் காதர் மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், “நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்துள்ளன; போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

18:14 (IST)09 Mar 2021












































மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் -  கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: “மநீமவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

18:12 (IST)09 Mar 2021












































அமமுகவுடன் கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம் கூட்டணி

அமமுகவுடன் கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம் கூட்டணி ஒப்பந்தம் உறுதியானது. கோகுல மக்கள் கட்சிக்கு தளி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருதுசேனை சங்கத்திற்கு திருமங்கலம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

18:11 (IST)09 Mar 2021












































கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

18:09 (IST)09 Mar 2021












































என் மீது இந்துத்துவாவைத் திணிக்கும் முயற்சியை பாஜக கைவிட வேண்டும் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “என் மீது இந்துத்துவாவைத் திணிக்கும் முயற்சியை பாஜக கைவிட வேண்டும். நான் 100 சதவீத இந்துப் பெண்ணாக இருந்தாலும் அனைத்து மக்களையும் நேசிக்கிறேன்” என்று தெரித்துள்ளார்.

18:08 (IST)09 Mar 2021












































தேமுதிக முடிவு வருத்தமளிக்கிறது; மறு பரிசீலனை செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், “தேமுதிக முடிவு வருத்தமளிக்கிறது; முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

17:24 (IST)09 Mar 2021












































தேமுதிகவுக்கு பொன்ராஜ் அழைப்பு; செய்தியில் பார்த்துதான் தெரியும் - கமல்ஹாசன்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் பொன்ராஜ் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தேமுதிகவை மநீம கூட்டணியில் இணைய பொன்ராஜ் அழைப்பு விடுத்ததை செய்தியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

17:20 (IST)09 Mar 2021












































தேமுதிகவுக்கு சரத்குமார் மறைமுக அழைப்பு

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள சமக தலைவர் சரத்குமார், “நல்லவர்களையும் வல்லவர்களையும் நம்மவர் வரவேற்பார்” என்று கூறி தேமுதிகவுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

17:18 (IST)09 Mar 2021












































எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் தேமுதிகவுடன் மநீம பேச்சுவார்த்தை நடத்தியதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என்று கூறினார்.

17:16 (IST)09 Mar 2021












































செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் வணிக குற்றப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்ததாக எஸ்.பி கண்ணன் மீது எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

16:55 (IST)09 Mar 2021












































உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் ராஜினாமா

உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார் . பாஜக உட்கட்சி பூசல் காரணமாக ராஜினாமா என தகவல் வெளியாகி உள்ளது. 

16:43 (IST)09 Mar 2021












































பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம் - வானதி சீனிவாசன்

பெண்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதோடு மட்டுமல்லாமல், கல்வி வேலை வாய்ப்பு பாதுகாப்பு உத்திரவாத்தம் அளிக்க வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

15:19 (IST)09 Mar 2021












































“திமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறேன்- கருணாஸ்

அதிமுகவுடன் கூட்டணி முறிவை அறிவித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த நிலையில், இன்று திடீரென ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

15:16 (IST)09 Mar 2021












































தே.மு.தி.கவுடன் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம் - அமைச்சர் ஜெயக்குமார்

தே.மு.தி.கவுடன் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம் என்று தெரிவித்துள்ள அமை்ச்சர் ஜெயக்குமார் "நன்றி மறந்து தே.மு.தி.கவினர் பேசக் கூடாது என்றுமு், "தே.மு.தி.கவுக்கு அங்கீகாரம் கிடைக்கக் செய்தது அதிமுகதான் என்று அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

15:14 (IST)09 Mar 2021












































மக்கள் நீதி மய்யம் தேமுதிகவிற்கு அழைப்பு

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை தொடர்ந்து, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்து்ளளது.

14:15 (IST)09 Mar 2021












































அதிமுக டெபாசிட் இழக்கும் - எல்.கே.சுதீஷ்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை தொடர்ந்து பெரும் சலசலப்பு நிலவி வரும் நிலையில், "அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்"என தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

14:15 (IST)09 Mar 2021












































தேமுதிக விலகல் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வைகைச்செல்வன்

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை தொடர்ந்து பெரும் சலசலப்பு நிலவி வரும் நிலையில், தேமுதிக விலகல் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

14:00 (IST)09 Mar 2021












































தலையே போனாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் - - விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அதிரடி

"தலையே போனாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம், அதிமுகவுக்கு இனி இறங்குமுகம்தான், மற்றும் சாணக்கியனாக இருந்தது போதும் இனி சத்திரியனாக இருக்க வேண்டும்" என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆவேசமாக பேசியுள்ளார்.

13:45 (IST)09 Mar 2021












































அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் - தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ்

"அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும், கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார். மற்றும் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம்' என்று  தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். 

13:37 (IST)09 Mar 2021












































அதிமுக அணியில் இருந்து விலகியது தேமுதிக; விஜயகாந்த் அறிவிப்பு

அதிமுக மற்றும் பாஜவுடனான தொகுதி பங்கீட்டில் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டவில்லை என்பதால் அந்த அணியில் இருந்து தேமுதிக விளகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

12:56 (IST)09 Mar 2021












































பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் நீது கபூர் தெரிவித்துள்ளார். 

12:53 (IST)09 Mar 2021












































கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின்

 திமுக தலைவர் ஸ்டாலின் காவேரி மருத்துவமையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

12:36 (IST)09 Mar 2021












































"வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

வன்னியர்களுக்காக10.5% சதவீத இட ஒதுக்கீட்டை முதல்வர் பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு அளிப்பட்டது. அதில் இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக இயற்றப்பட்டு உள்ளது எனவும், 10.5 % வன்னியர்களுக்கு கொடுத்தால் மற்ற சாதியினருக்கு பாதிக்கப்படுவர் எனவும் இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.

 

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் "போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. மற்றும்  மனுவுக்கு 8 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு" உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

12:23 (IST)09 Mar 2021












































தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

பிரதமர் பொதுவானவர் என்பதால் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை முடிவு காலம் வரும் மே மாதத்துடனே முடிவுக்கு வரவுள்ளது என்று கூறி தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் தாக்கல் செய்த மனுவை  தள்ளுபடி செய்ததுள்ளது. 

11:37 (IST)09 Mar 2021












































மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க அவசர ஆலோசனை

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தேமுதிக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அவசர கூட்டம் தொடங்கியது. அ.தி.மு.க ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது குறித்து கருத்து கேட்பட்டிருக்கிறது. ஆலோசனைக்கு பிறகு, அ.தி.மு.க உடன் தே.மு.தி.க தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும்.

11:32 (IST)09 Mar 2021












































பொன். ராதாகிருஷ்ணன்- செய்தியாளர் சந்திப்பு

"மக்கள் மத்தியில் துணை முதலமைச்சருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது என்றும் வரும் தேர்தலில் அ.தி.மு.க-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

11:20 (IST)09 Mar 2021












































தி.மு.க உடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனை

தி.மு.க உடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஐயூஎம்எல்-க்கு கடையநல்லூர் தொகுதி உறுதியானது.

10:48 (IST)09 Mar 2021












































அதிமுக - த.மா.கா இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு

அதிமுக - த.மா.கா இடையே இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 10.30 மணிக்கு அதிமுக - தமாகா இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

10:47 (IST)09 Mar 2021












































புதுச்சேரி திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

10:46 (IST)09 Mar 2021












































பாமக இன்று அவசர ஆலோசனை

வருகிற சட்டமன்ற தேர்தலில் பாமக - அதிமுகவுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் பாமக இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் காணொலி மூலம் இந்த ஆலோசனை நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருக்கிறார். 

10:22 (IST)09 Mar 2021












































குடியரசு தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயண முழு விவரங்கள் இங்கே

மாண்புமிகு இந்திய ஜனாதிபதி (09.03.2021) முதல் (11.03.2021) சென்னை வரவுள்ளார்.

09.03.2021

மாலை 4: 25 மணி முதல் 7: 05 மணி வரை,

IAF BBJ சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து சென்னை வருகிறார்.

ராஜ்பவனில் இரவு தங்குகிறார்.

10.03.2021

09: 20 மணிக்கு, சென்னை விமான நிலையத்திலிருந்து வேலூருக்கு (IAF M-17) ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார்.

10: 15 மணி முதல் 11: 20 மணி வரை

திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர், 16 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்

12: 30 மணி முதல்மாலை  4: 40 மணி வரை,

ஸ்ரீ மகாலட்சுமி பொற்கோயில் செல்கிறார்

மாலை 4: 55 மணி முதல் 5: 45 மணி வரை,

ஸ்ரீபுரம் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.

ராஜ்பவனில் இரவு தங்குகிறார்.

(11.03.2021)

10: 50 மணி முதல் 12: 00 மணி வரை,

அண்ணா பல்கலைக்கழக கிண்டி, 41-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

12: 00 மணி முதல் 12: 20 மணி வரை,

அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார்.

12 : 30 மணிக்கு IAF BBJ சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு புறப்படுகிறார்.

09:33 (IST)09 Mar 2021












































நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று முதல் வழக்கம்போல் நடைபெறும்

நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் இன்று முதல் வழக்கம்போல் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    

09:21 (IST)09 Mar 2021












































துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபமும் இரங்கலும் - ராமநாத் கோவிந்த்

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிட மோசமான தீ விபத்து வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபமும் இரங்கலும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் என குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.    

09:17 (IST)09 Mar 2021












































ஒவ்வொரு 6 மாதமும் என் செயல்பாட்டு அறிக்கையை மக்களிடம் சமர்ப்பிக்கிறேன் - பழனிவேல் தியாகராஜன்

2016ம் ஆண்டு நானளித்த வாக்குறுதியின்படி ஒவ்வொரு 6 மாதமும் என் செயல்பாட்டு அறிக்கையை மக்களிடம் சமர்ப்பிக்கிறேன். COVID19 காரணத்தால் தாமதமானாலும் 48 மாதங்கள் நிறைவுற்ற அறிக்கை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றடையும் வண்ணம் விநியோகிக்கப்பட்டுள்ளது என மதுரை மத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.     

09:14 (IST)09 Mar 2021












































இந்தியா – பங்களாதேஷ் மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார்

இந்தியா – பங்களாதேஷ் இடையே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

09:13 (IST)09 Mar 2021












































எல்லையற்ற போருக்கு நாம் தயாராக வேண்டும் - ராகுல் காந்தி.

இந்திய பாதுகாப்புப் படைகள் 2.5 துருவ போரை நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. இது, தற்சமயம் தேவையற்ற ஒன்றாதாகிவிட்டது.

எல்லையற்ற போருக்கு நாம் தயாராக வேண்டும்.

இது, கடந்தகால நடைமுறைகள்,மரபு ரீதியான விசயங்களைப் பற்றியது அல்ல. நம் எண்ணங்களில் ஏற்பட வேண்டிய மாற்றத்தையும், ஒரு தேசமாக நாம் செய்ய வேண்டிய செயலைப் பற்றியது என ராகுல் காந்தி தெரிவித்தார்.  

08:59 (IST)09 Mar 2021












































கொல்கத்தா ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து - 9 பேர் பலி

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். தீ விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு  ரயில்வேதுறை  உத்தரவிட்டது.  

08:46 (IST)09 Mar 2021












































3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இன்று வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். நாளை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 41 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தாலைவர் கலந்து கொள்கிறார்.  

Tamil Nadu Tamilnadu Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment