Advertisment

Tamil Nadu News updates : பிரதமர் மோடி உரையை கேட்க விருப்பமான மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்: எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

Chennai petrol diesel price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.70க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ. 71.27க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu breaking news today updates : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. சுதந்திர இந்தியாவில் ஜவஹர்லால் நேரு குல்சாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ராஜீவ் காந்தி , பி. வி. நரசிம்ம ராவ் ஜீன், மன்மோகன் சிங் ஆகியோர் காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள் அவார்கள்.

Advertisment

சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் : உ.பி.யில் மட்டும் 1100க்கும் அதிகமானோர் கைது!

தமிழகத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டம் வரும் திங்கட்கிழமை நடக்கிறது. வாக்குகள் வரும் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர்புற தேர்தல் நடைபெறும் வரை, ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டுமென சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும், இது போன்ற முக்கிய செய்திகளுக்கு இந்த லைவ்  ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

Live Blog

Tamil Nadu News Today Updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:07 (IST)28 Dec 2019

    புதுக்கோட்டை மீனவர்கள் 13 இலங்கை கடற்படையினரால் கைது

    நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட 13 மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    19:58 (IST)28 Dec 2019

    இலவச மடிக்கணினி பெறாத மாணவர்கள் ஜனவரி 11-க்குள் உரிய சான்றிதழை ஒப்படைக்க வேண்டும்

    2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் இலவச மடிக்கணினி பெறாத மாணவர்கள் ஜன. 11 தேதிக்குள் உரிய சான்றிதழை தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

    18:13 (IST)28 Dec 2019

    முஷரப் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திருப்பி அனுப்பியது லாகூர் நீதிமன்றம்

    மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, லாகூர் உயர்நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.

    17:23 (IST)28 Dec 2019

    2ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது

    தமிழகத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை மறுநாள் நடைபெறும் 2ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. நேற்று முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    16:58 (IST)28 Dec 2019

    மாணவிகள் மது அருந்திய வீடியோ; மது தாராளமாக கிடைப்பதுதான் காரணம் - ராமதாஸ் டுவீட்

    பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், 1. தருமபுரம் ஆதீன கல்லூரி மாணவிகள் 4 பேர் மது அருந்திய காணொலி வெளியானதும், அதற்காக அவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் வருங்காலத் தூண்களை மது எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை! திரும்பிய திசையெல்லாம் மது தாராளமாக கிடைப்பது தான் மாணவிகள் மது அருந்துவதற்கு காரணம் ஆகும். சிறுவர்கள் கூட சீரழிவதற்கு தெருவெங்கும் மதுக்கடைகள் இருப்பது தான் காரணம். நாட்டையும், வீட்டையும், உடல்நலத்தையும் காக்க தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே தீர்வு” என்று குறிப்பிட்டுள்ளார்.

    15:11 (IST)28 Dec 2019

    அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் 10,000 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

    டிசம்பர் 15 ம் தேதி குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் 10,000 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மீதான வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டம் வழக்கு (ஐபிசி), குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம், 1932, மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம், 1984 ஆகியவற்றின் கீழ் வழக்கு  போடப்பட்டுள்ளது 

    13:11 (IST)28 Dec 2019

    ஒலிம்பிக் குத்துச் சண்டை தகுதி சுற்று போட்டிக்கு செல்கிறார் மேரி கோம்

    சீனாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச் சண்டை போட்டியில்  கலந்து கொள்வதற்காக நடத்தப்படும்  போட்டியில்  மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார். 51 கிலோ எடைப்பிரிவில் இன்று நடந்த குத்துச் சண்டை போட்டியில் நிகாத் ஸரீனை தோற்கடித்தார் மேரி கோம். 

    13:04 (IST)28 Dec 2019

    விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் - முதல்வர் பழனிசாமி

    வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பாரதப் பிரதமர் அவர்களின் உரையை பார்க்க வேண்டுமென்று விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதாகவும், ஜனவரி 16ம் தேதி  மாணவர்கள் பள்ளிக்கு வருவது  கட்டாயம் அல்ல என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.  

    13:01 (IST)28 Dec 2019

    இந்தச் செயலை மத்திய அரசு திரும்பப் பெறுவதை உறுதி செய்வோம் - தமிமுன் அன்சாரி

    செய்தியாளர்களிடம் பேசிய மனிதநாயய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்  தமிமுன் அன்சாரி, சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் . "இந்தியா மற்றொரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. இந்தச் செயலை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது. எங்கள் ஆதார் மற்றும் CAA அல்லது NPR க்குத் தேவையான பிற விவரங்களைச் சரிபார்க்க எந்தவொரு அதிகாரத்தையும் நாங்கள் எங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்கம், கேரளா, மற்றும் மற்ற மாநிலங்கள் தாங்கள் தங்கள் பிராந்தியத்தில் CAA ஐ அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளன, அதேபோல் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிலும் அதை அனுமதிக்கக் கூடாது. இந்தச் செயலை மத்திய அரசு திரும்பப் பெறுவதை உறுதி செய்வோம், காத்திருந்து பாருங்கள், "என்றார். 

    12:57 (IST)28 Dec 2019

    தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சென்னையில் மிகப்பெரிய பேரணி

    குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இன்று மிகப் பெரிய கண்டனப் பேரணியை நடத்தி வருகின்றனர். கவர்னர் மாளிகையை நோக்கி திட்டமிடப் பட்டிருந்த இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆலந்தூர் பகுதியில் பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய மக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை வெளிபடுத்தி வருகின்றனர். பேரணிக்கு தேவையான அனைத்து முனேற்பாடு வசதிகளும் (குடிநீர், அவசர சிகிச்சை ) செய்யப்பட்டுள்ளன.        

    12:17 (IST)28 Dec 2019

    அவர்களை பாகிஸ்தான் செல்ல சொல்லுங்கள் - யு.பி போலிஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு

    கடந்த டிசம்பர் 20 ம் தேதி குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, உத்தர பிரேதச மாநிலத்தில் மீரட் நகரத்தில்  ஒரு உயர் போலீஸ் அதிகாரி   போராடும் மக்களைப் பார்த்து "பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்" என்ற பேச்சு தற்போது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அந்த வீடியோவில்,  நீங்கள் இங்கே சாப்பிடுகிறீர்கள், ஆனால் வேறொரு இடத்தைப் புகழ்ந்து பாடுகின்றீர்கள் … நீங்கள் வாழும் இடம் எனக்கு நன்கு பழக்கப்பட்ட ஒன்று . நான் உங்கள் உங்கள் மூதாதையரைக்  கூட தேடி புடிக்க  முடியும் என்று கூறுகிறார். 

    12:00 (IST)28 Dec 2019

    விராலிமலை ஒன்றியம் 15வது வார்டுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு

    விராலிமலை ஒன்றியம் 15ஆவது வார்டுக்கு உட்பட்ட 13 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிப்பு     

    11:55 (IST)28 Dec 2019

    தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்

    நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தார். மேலும், பொங்கல் மறுநாள் பிரதமரின் உரையைக் கேட்க, தொலைக்காட்சி இல்லாத விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தான் சுற்றறிக்கை தெரிவித்தாதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

    சென்சஸ் 1872 ஆண்டு முதல் ஆரமிக்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு 10 ஆண்டுகளும் நடைபெறுவது வழக்கம் தான். 2003ம் ஆண்டில்(திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது ) குடியுரிமை சட்டத்தை திருத்தி தான் தேசிய மக்கள் பதிவேடு (என்.பி.ஆர்) கொண்டு வரப்பட்டது.

    2010-ல் முதல் முதலாக இந்த மக்கள் தொகை பதிவேடு நடைமுறை படுத்தப்பட்டது (திமுக மாநில அரசு ). தற்போது என்.பி.ஆர்- ஐ திமுக எதிர்ப்பது திட்டமிட்ட செயல் என்றும் கூறினார்.

    11:39 (IST)28 Dec 2019

    இன்றைய சூழலில் காங்கிரஸிடம் உத்வேகம் எதிர்பார்க்க முடியுமா ?

    இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் அடையாளங்களாக இருப்பது இரண்டே விஷயங்கள் தான். ஒன்று, 15 பைசா அஞ்சலட்டை மற்றொன்று ஒரு காங்கிரஸ் தொண்டன். 1950 களில் வாழ்ந்த காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரான வி.ஆர் காட்கில் இந்த கருத்தை அடிக்கடி சொல்லி மகிழ்ந்தார் . அந்த முதல் அஞ்சலட்டை இன்னும் நமது கிராமத்தின் அடையாளமாகத் தான் உள்ளது, ஆனால், அந்த காங்கிரஸ் தொண்டன் தொலைக்கப்பட்ட கணவாய் போனது.

    ஒரு அரசியல் கட்சி  வெகுஜன ஆதரவை தனது நிர்வாகத்திறமையால் இணைக்க வேண்டும். அப்படி இருக்கையில் தான், புதிதாய் தோன்றும்  குழுக்கள் மற்றும் கோரிக்கைகளின் பிரதிநிதித்துவத்தை கட்சிக்குள் கொண்டு வர முடியும் .....

    மேலும், படிக்க இன்றைய சூழலில் காங்கிரஸிடம் உத்வேகம் எதிர்பார்க்க முடியுமா ?  

    11:32 (IST)28 Dec 2019

    காங்கிரஸ் கட்சிக்கு இன்னொரு காமராஜர் தேவை - காமராஜர் திட்டம் என்றால் என்ன ?

    நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுக்கு நேரு-காந்தி குடும்பம் அல்லாத தலைவரை ராகுல்காந்தி பரிந்துரைத்தார். இது காமராஜர் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். ஆனால், இந்த மாற்றத்துக்கு வழிகாட்ட காங்கிரஸில் ஒரு காமராஜர் இருக்கிறாரா ?

    மேலும், படிக்க - ‘கே’ பிளானை நினைவு கூறும் காங்கிரஸ்: வழிகாட்ட இன்னொரு 'காமராஜர்' இருக்கிறாரா? 

    11:22 (IST)28 Dec 2019

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏ.ஐ.சி.சி தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.  ராகுல் காந்தி, அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும், மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் கொடியேற்றி வருகின்றனர்.    

    Tamil Nadu News Today Updates : நேற்று நடந்த வாக்குப்பதிவின்போது திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

    புதுக்கோட்டை அருகே காவலர்களை தள்ளிவிட்டு பின்பக்கக் கதவின் மூலம் மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த வாக்குப்பெட்டி உடைக்கப்படுவதற்குள், அதனை பத்திரமாக போலீஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment