Advertisment

Tamil Nadu Budget 2023: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு- தமிழ்நாடு பட்ஜெட் ஹைலைட்ஸ் இங்கே

வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu

Tamil Nadu Budget 2023 highlights

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக அரசு எடுத்த முயற்சியின் காரணமாக முன்னேற்றம் கண்டு வருகிறோம். வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக அவர் கூறினார்

Advertisment

சோழப் பேரரசை போற்றுவதற்கு தஞ்சாவூரில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படும்

தமிழறிஞர்கள் 591 பேருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும்

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு

அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்

4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கான நவீன விடுதிகள் மதுரை, கோவை, திருச்சி மற்றும் நீலகிரியில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும்

வரும் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும்

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்த்திட ரூ. 5 கோடி நிதி

சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும்

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 40 கோடி நிதி

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கான கருணைத்தொகை ரூ. 40 லட்சமாக உயர்வு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வரும் நிதியாண்டில் ரூ. 30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 ஆயிரம் வழங்க ரூ. 389 கோடி நிதி ஒதுக்கீடு

மரக்காணத்தில் ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்

கோவையில் ரூ. 43 கோடியில் செம்மொழி பூங்கா, 2 கட்டங்களாக அமைக்கப்படும்

அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில்  திட்டம் செயல்படுத்தப்படும்

வரும் காலங்களில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்வதற்கும், கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ரூ.320 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்

தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை ரூ. 521 கோடியில் 4 வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படும்

முதற்கட்டமாக ரூ.1,200 கோடி செலவில் வடபழனி, வியாசர்பாடி பேருந்து  பணிமனைகள் நவீனமயமாக்கப்படும்

மதுரையில் ரூ.8,500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்

சேலத்தில் ரூ.850 கோடி செலவில் 119 ஏக்கரில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்

கோவையில் ரூ.9,000 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்

தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி ரூ.1,000 வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு

புதிய சிப்காட் தொழிற்பேட்டை ரூ. 410 கோடி மதிப்பில் அமைக்கப்படும்

உலக முதலீட்டாளர் மாநாடுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment