Advertisment

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி: திரையுலகினரின் கருத்து என்ன?

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அரசானை பிறப்பித்தது. 

author-image
WebDesk
New Update
Tamil Cinema News, Director Mysskin

திரையரங்கில் மிஷ்கின்

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு ஜனவரி 4ம்  தேதி (இன்று) அரசானை பிறப்பித்தது.

Advertisment

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து திரை அரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. முதன் முறையாக கடந்த, அக்டோபர் 15ம் தேதி முதல் 50 % பார்வையாளர்களுடன் மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் 50 % பார்வையாளர்களுடன் திரை அரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசு டிசம்பர் 31ம் தேதி வெளியிட்ட பொது ஊரடங்கு அரசாணையிலும்,  31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை 50 சதவிகித இருக்கைகளுடன் திரை அரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் பேசும் பொருளாகி உள்ளது.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தகவல் மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, "  திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார் .

சிவகார்த்திகேயன்: 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில், " திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ் சினிமா மீண்டும் சிறப்பாக இயங்கிட வழிவகுத்த தமிழக அரசிற்கு நன்றி. பொங்கலுக்கு வரும் மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு படங்களும் பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டார்.

நடிகர் சிம்பு : 

நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பதிவில், " எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி"  என்று பதிவிட்டார்.

தமிழக அரசின் அறிவிப்பு வருவதற்கு முன்பு, திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என நடிகர் சிம்பு தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அந்த அறிக்கையில்,  “இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்.

"ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான்.

திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.

அதற்காகத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல.

இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும், மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை.

அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள்.

அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள்.

என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்.

திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும்.

விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும்.

அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன்.

கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன. திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது.

வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால் மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என சிம்பு குரிப்பிட்டிருந்தார்.

நடிகை கஸ்தூரி:  பள்ளிகள் செயல்பட்ட அனுமதி வழங்கப்படாத போது, இளைஞர்களை திரை அரங்குகள் மூலம் கொரோனா  பாதிப்புக்கு உள்ளாக்குவது சரியா?   கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில நாட்கள் தான் உள்ளன. அதுவரை, நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாதா? நம்மள பத்தி யாரும் கவலைப்படலை, நாமதான் ஜாக்கிரதையாக இருக்கணும். ஹூம்! என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

நடிகை குஷ்பு:  100% இருக்கைகளுடன் திரைஅரங்கம்  இயக்குவது குறித்து மாற்றுக் கருத்தை கொண்டவர்களுக்கு, ஒரு விஷயம் தெரிவிக்க விரும்புகிறேன். அச்ச உணர்வு இருந்தால் திரை அரங்கிற்கு செல்ல வேண்டாம். யாரும் யாரையும் வற்புறுத்தவில்லை என்று குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment