திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெறும் சாரணா் இயக்க வைர விழா, கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி (ஜம்போரி) நிறைவு விழாவில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று நண்பகல் திருச்சி வருகை தந்தார்.
24 மாநிலங்கள், 4 நாடுகளைச் சோ்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரணா்கள் பங்கேற்பில் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28 தொடங்கி பிப்ரவரி 3 வரை நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்க வைர விழா, கருணாநிதி நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியான ஜம்போரியின் நிறைவு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
/indian-express-tamil/media/post_attachments/28c5ec0f-105.jpg)
இதில் பங்கேற்க சென்னையிலிருந்து திருச்சிக்கு நண்பகல் 12.20 மணிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். முதல்வருக்கு விமான நிலையத்தில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி எம்.பி துரை வைகோ ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.,வினர் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/554dac66-efe.jpg)
இதைத் தொடா்ந்து, டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்கும் முதல்வர் மாலையில் மணப்பாறைக்குச் சென்று ஜம்போரி நிகழ்விடத்தில் நிறைவுரையாற்றுகிறார். நிகழ்ச்சி நிறைவுக்கு பின் திருச்சி வரும் முதல்வர் இன்று இரவு 8 மணி அளவில் மீண்டும் விமான மூலம் சென்னை செல்கிறார்.
/indian-express-tamil/media/post_attachments/d4a6d4b3-9e8.jpg)
ட்ரோன்களுக்கு தடை: இதையொட்டி மாவட்டத்தில் முதல்வர் பயணம் செய்யும் சாலைகள் மற்றும் விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் எச்சரித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/e8b56c97-fca.jpg)
கட்சியினர் வரவேற்பு: திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க, வடக்கு மாவட்ட தி.மு.க, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், விமான நிலையம் தொடங்கி மணப்பாறை வரை ஆங்காங்கே முதல்வருக்கு சாலையின் இருபுறமும் கட்சியினரும், பொதுமக்களும் மேள, தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். சில இடங்களில் நடந்து செல்லும் முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர, மாவட்டக் காவல்துறை இணைந்து 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்