scorecardresearch

தமிழகத்தில் 11 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு: செந்தில் பாலாஜி

மார்ச் மாதத்தில் தேவை 18,100 மெகாவாட்டாகவும், ஏப்ரலில் 18,500 மெகாவாட்டாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 11 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு: செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “கடந்த ஆண்டு இதே நேரத்தில் 1.83 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள ஐந்து அனல் ஆலைகளுக்கும் 7.99 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. தற்போதைய இருப்பு 11 நாட்கள் அதிகமாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4.4 மடங்கு அதிக நிலக்கரி கையிருப்பில் உள்ளதால், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சிறந்த நிலையில் உள்ளது என, கோடை காலத்திற்கான தயார்நிலை குறித்து (TANGEDCO) அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அமைச்சர் கூறினார்.

12 பெரிய கப்பல்களில் நிலக்கரியை இருப்பு வைத்து பராமரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். கோடை காலத்தில் சந்தையில் ஒரு யூனிட் விலை 20 ஆக உயரும் என்பதால், மார்ச் முதல் மே வரை ஒரு யூனிட்டுக்கு 8.50 என்ற விலையில் 1,562 மெகாவாட் மின்சாரம் வாங்க குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது”, என்று செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழகத்தின் மின் தேவை கடந்த சில வாரங்களில் 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாகவும், மார்ச் 4 ஆம் தேதி (17,584 மெகாவாட்) எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது சுமையில்லாமல் நிர்வகிக்கப்பட்டதாகவும், மின்வெட்டு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். மார்ச் மாதத்தில் தேவை 18,100 மெகாவாட்டாகவும், ஏப்ரலில் 18,500 மெகாவாட்டாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu coal stock increased minister senthil balaji

Best of Express