Advertisment

தமிழகத்தில் ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா; 80 பேர் பலி

Tamilnadu corona virus data tracker : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,980 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 80 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
tamil nadu daily coronavirus report, today covid-19 positive cases, new coronavirus cases, tamil nadu total coronavirus deaths, கொரோனா வைரஸ், தமிழ்நாடு, தமிழகத்தில் இன்று 5956 பேருக்கு கொரோனா தொற்று, கொரோனா பாதிப்பல் 91 பேர் பலி, tn coronavirus deaths, today covid-19 deaths 61, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7000ஐ தாண்டியது, latest tamil nadu coronavirus report, latest coronavirus news

tamil nadu news today : கொரோனா தொற்று

புதிய பாதிப்புகள்: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,980 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

குணமடைவோர் விகிதம்: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும்  5,603 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,13,680-பேர் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சையால் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, விரைவாக குணமடைவதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  முன்னதாக தெரிவித்திருந்தார்.

கொரோனா உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பெருந்தொற்றால் 80 பேர் உயிரிழந்தனர். இதுநாள் வரையில், தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,420-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை நிலவரம்: சென்னையில் இன்று மட்டும் அதிகபட்சமாக 1,294 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம், சென்னை மாநகராட்சியின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,071-ஆக அதிகரித்தது.

 

சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,287 ஆக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment