scorecardresearch

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தின்டிவனம் ராமமூர்த்தி மரணம்

Tamilnadu News Update : தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தின்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தின்டிவனம் ராமமூர்த்தி மரணம்

Tamilnadu Politician Tindivanam Ramamoorthy Death: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தின்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

1981முதல் 84-வரை தமிழக சட்டசப்பேரவை எதிர்கட்சி தலைவராக இருந்த தின்டிவனம் ராமமூர்த்தி, 1984 முதல் 90- மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பதவி வகித்தார். தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பல பொறுப்புகளை வகித்த அவர், 2011-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது தனிகட்சி தொடங்கினார். அனால் அதற்கடுத்த சில மாதங்களில் கட்சியை கலைவிட்ட இவர், சரத்பாவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து அக்கட்சியில் தமிழக தலைவராக பொறுப்பு வகித்த இவர், கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவரது உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu congress politician tindivanam ramamurthy passed away