Advertisment

தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா; சென்னையில் நோய் தொற்று அதிகரிப்பு

மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 27,743ஆக அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Covid19 vaccination daily Report Chennais caseload crosses 10,000

Tamil Nadu Covid19 vaccination daily report : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 27,743ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

சென்னையில் நேற்று 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டியில் 390 நபர்களுக்கும், கோவையில் 332 நபர்களுக்கும், திருவள்ளூரில் 208 நபர்களுக்கும், திருப்பூரில் 141 நபர்களுக்கும், தஞ்சையில் 108 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் 96 நபர்களுக்கும், திண்டுக்களில் 94 நபர்களுக்கும், திருச்சியில் 91 நபர்களுக்கும், சேலத்தில் 90 நபர்களுக்கும், கூடலூரில் 70 நபர்களுக்கும், வேலூரில் 68 நபர்களுக்கும், விழுப்புரத்தில் 52 நபர்களுக்கும், ராணிப்பேட்டையில் 41 நபர்களுக்கும், திருவண்ணாமலையில் 38 நபர்களுக்கும், திருப்பத்தூரில் 25 நபர்களுக்கும் கள்ளக்குறிச்சியில் 24 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமே 10க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பதிவாகிய்ய்ள்ளது.

நேற்று உயிரிழந்த 17 நபர்களில் சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டில் இரண்டு பேரும், கோவை, மதுரை, நாகை, சேலம், தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் திருச்சியில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். கோவையில் சேர்க்கப்பட்டிருந்த 36 வயது பெண்ணிற்கு இணை நோய் இருந்தது கண்டறியப்பட்டது. ஏப்ரல் 4ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அடுத்த நாள் சுவாசக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

எத்தனை பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது?

புதன்கிழமை அன்று 65,764 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. 32251 நபர்கள் அதில் 45 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்கள். 30,113 மூத்த குடிமக்களுக்கு நேற்று தடுப்பூசி வழங்கப்பட்டது. 4114 கட்டங்களில் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளன. 65,764 நபர்களில் 1,603 நபர்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றும் நபர்கள், 1423 நபர்கள் முன்கள பணியாளர்கள், 27,825 நபர்கள் அதில் இணை நோய் உடைய 45 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்கள். 26136 மூத்த குடிமக்கள் கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை பெற்றனர். 253 சுகாதாரத்துறையினர், 121 முன்கள பணியாளர்கள், 3977 நபர்கள் கோவாக்ஸினை பெற்றனர்.

புதுவையில் நிலைமை என்ன?

புதுவையில் நேற்று புதிதாக 173 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களின் தாக்கத்தால் உயிரிழந்தார். புதுவையில் இதுவரை 687 நபர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். புதுவை (554), காரைக்கால் (77), ஏனாம் (45), மாஹே (11). நேற்று பதிவான புதிய வழக்குகளில் 173-ல் 168 வழக்குகள் புதுவையிலும், 5 காரைக்காலிலும் பதிவானவை. மாஹே மற்றும் ஏனாமில் நேற்று புதிய நோய் தொற்று பதிவாகவில்லை. புதுவையில் 1820 நபர்கள் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1367 நபர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment