Advertisment

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆன்லைனில் திருத்தம் கோருவது எப்படி?

சென்னை மாவட்டத்தில் 39.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இது மாநிலத்தின் 37 மாவட்டங்களை விட அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Election Commission

திருத்தத்தைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் திங்களன்று வெளியிட்ட வரைவு பட்டியல்களின்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.10 கோடியாக உள்ளனர். இதில் 3.09 கோடி பெண்கள், 3.01 கோடி ஆண்கள், 6,385 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

Rasi Palan 17th November 2020: இன்றைய ராசிபலன்

சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி 6.55 லட்சம் நபர்களைக் கொண்ட தமிழகத்தின் மிகப் பெரிய தொகுது. அதே நேரத்தில் கீழ்வேலூர் 1.73 லட்சம் நபர்களுடன் கூடிய சிறிய தொகுதியாக உள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ள சுமார் 13.75 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2.08 லட்சம் பேர், முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் 39.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இது மாநிலத்தின் 37 மாவட்டங்களை விட அதிகம்.

வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்தார். நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நியமிக்கப்பட்ட இடங்களில் (பொதுவாக வாக்குச் சாவடிகள்) சிறப்பு பிரச்சாரங்கள் நடத்தப்படும். "வாக்காளர் பட்டியலில் விஷயங்களை சேர்ப்பது / நீக்குவது / மாற்றுவது ஆகியவற்றிற்கான படிவங்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் கிடைக்கும். படிவங்களில் நிரப்பப்பட்டவைகளை அங்கு சமர்ப்பிக்கலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Www.nvsp.in, https://voterportal.eci.gov.in மற்றும் VOTER HELPLINE Mobile App ஆகியவற்றின் மூலமும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். 01.01.2021 அன்று 18 வயதை நிறைவு செய்யும் நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் படிவம் 6-ஐ விண்ணப்பிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் பட நடிகர்; சூரி உதவி

ஒரு நபர் தனது வசிப்பிடத்தை அவர் ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்திருந்த தொகுதிக்கு வெளியே மாற்றினால், அவர் படிவம் 6-ஐ விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நபர் தனது வசிப்பிடத்தை ஒரே தொகுதியில்,  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றினால், விண்ணப்ப படிவம் 8A-வை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள ஒரு நபரின் விவரங்களைத் திருத்துவதற்கு, படிவம்-8-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.

"மாற்றுதல் / திருத்தம் / இழப்பு / அழித்தல் ஆகிய மாற்றங்களுக்கு ஈபிஐசி பெற, தாலுகா / மண்டல அலுவலகத்தில் படிவம் -001-ஐ விண்ணப்பிக்க வேண்டும்” என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment