Advertisment

இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் உயிரிழப்பு; தொடரும் துயரம்!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த மத்திய அரசும் மாநில அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

author-image
Balaji E
New Update
tamil nadu fisherman killed, fisherman killed in sri lankan navy attack, கோட்டைப்பட்டினம், தமிழக மீனவர் உயிரிழப்பு, இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் மரணம், srilanka, tamil nadu fishermen

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், இலங்கை கடற்படையினர் தாக்குதலில் மீனவர்கள் உயிரிழப்பதும் நடந்து வருகிறது. 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு மீது கப்பலை மோதவிட்டு இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்ந்தார். இந்த சம்பவம் கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் சுமார் 3,500 பேர் மீன் பிடி தொழிலையே முக்கிய தொழிலாக நம்பியுள்ளனர். நேற்று (அக்டோபர் 18) கோட்டைப்பட்டினத்தில் இருந்து 118 விடைப்படகுகளில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில், சுரேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி படகில் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகியோர் 19 கடல் மைல் நாட்டிகல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் ரோந்து கப்பலை மீனவர்களின் மீது படகு மீது மோதவிட்டுள்ளனர். இதில் விசை படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. விசைப் படகில் இருந்த தமிழக மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 மீனவர்களும் கடலில் மூழ்கினர். இதையடுத்து, கடலில் மூழ்கிய மீனவர்களில் சுகந்தன், சேவியர் ஆகிய 2 மீனவர்களை மட்டும் மீட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 2 பேரையும் காங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், கடலில் மூழ்கிய மற்றொரு மீனவர் ராஜ்கிரணை கடற்படையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில், தற்போது அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை கடற்படையினர் தாக்குதலில் 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் இலங்கை கடற்படை தாக்கியதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்திருப்பது தமிழக மீனவர்கள் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த மத்திய அரசும் மாநில அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்ததையடுத்து, கோட்டைப்பட்டினம் மீனவ கிராமம் பரபரப்பாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Sri Lanka Fishermen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment