Advertisment

எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கத்திற்கு எதிரான மனு : தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம்

Tamilnadu News : வங்கி கணக்கு முடக்கத்திற்கு எதிராக எஸ்பி வேலுமணியின் உறவினர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கத்திற்கு எதிரான மனு : தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம்

Formar Minister SP Velumani Issue : வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர் தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமனி மீது முறைகேடாக டெண்டர் எடுத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்பி வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் வீடுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகராரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அவர்களுக்கு சொந்தமான 80 நிறுவனங்கள் வேலுமணி மற்றும் அவரது உறவினர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

இந்நிலையில் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிரான எஸ்பி வேலுமணியின் உறவினர் பிஎஸ் லோகநாதன் சென்னை சிறப்ப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  மிஸ்  மெட்ராஸ் இன்ஃப்ரா நிறுவனத்தில் தான் ஒரு பங்குதாரராக இருப்பதாகவும், ஊழல் தடுப்பு மற்றும் லஞ:ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்தின் உத்தரவின் பேரில், தனது வங்கி கணக்கு மற்றும் நிலையான வைப்புத்தொகை முடக்கப்பட்டதாக, கோவையில் உள்ள வங்கியில் இருந்து செப்டம்பர் மாதம் தகவல் கிடைத்தது.

தனது சேமிப்புக் கணக்கில் ரூ.3.9 கோடியும், நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.65 லட்சமும் முறையான ஆதாரங்களுடன் வந்தவை என்றும், அமைச்சருக்கு எதிரான வழக்கில் தனக்கு தொடர்பில்லை என்றும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகரிகள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து மனுதாரர் செயல்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் கூறியுள்னர். மேலும் கடந்த  ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தியது. இது தொடாபாக 80 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வங்கிக் கணக்குகளை நெருக்கமாக தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறையிடம் கேட்டிருந்தோம்.

இதில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆய்வுக்கு உட்பட்டவர்கள்" என்று ஊழல் தடுப்புபிரிவு  வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். மேலும் 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மனுதாரரின் மனைவி சந்திரபிரகாஷின் சகோதரியின் வங்கிக் கணக்கில் ரூ.69.67 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்த வங்கிக் கணக்கு 2017 இல் தொடங்கப்பட்டது என்று  தெரிவித்துள்ளது.

மேலும் "மனுதாரர் எந்த முன் அனுபவமும் இல்லாமல் சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பணி டெண்டர்களை பெற்றுள்ளார். மனுதாரரின் நிறுவனம் மற்றும் அவரது மனைவி உரிமையாளராக உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு பணி டெண்டர்கள் ஒதுக்கீடு செய்தது விசாரணையில் உள்ளது" என்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. .

இந்த முனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ் இடைக்கால உத்தரவில் மனுவை தள்ளுபடி செய்தார். மனுதாரரின் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட முறை விசாரணையில் இருப்பதால், மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment