Advertisment

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மீன், கோழி, இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க சனிக்கிழமையும் மீன், இறைச்சிக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
coronavirus, fish market will closed, tamil nadu govt order, கொரோனா வைரஸ், மீன் இறைச்சி கடைகளை மூட உத்தரவு, தமிழக அரசு உத்தரவு, meat shops closed, covid 19, tamil nadu govt

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழகத்தில் ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமையும் மீன், இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மாநிலத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதித்தது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கொரோனா ஊரடங்கை வலியுறுத்தியது. மேலும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக அரசு மாநிலத்தில் சனிக்கிழமையும் மீன், கோழி, இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிப்பதாவது: “பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளின்படியும் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியும், கடந்த மார்ச் 31ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஏப்ரல் 30ம் தேதி வரை மாநில அளவில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

மாநில முழுவதும் பரவலாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடந்த வாரம், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏப்ரல் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலிபடுத்தப்படு என்று அறிவிக்கப்பட்டதால், அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமைய மீன், இறைச்சி கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் திக அளவில் மக்கள் கூட்டம் திரண்டு காணப்பட்டது. இதனால், கொரோனா தொற்று பரவும் ஆபத்து அதிகமாக்கிறது. எனவே, மீன் இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க சனிக்கிழமையும் மீன், இறைச்சிக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Lockdown Coronaviurs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment