தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என்று பலராலும் அறியப்பட்ட ஹரி நாடார், நெல்லை மாவட்டம் இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள அவர், பனங்காட்டுப்படை என்ற கட்சியில் முக்கிய பதவி வகித்து வருகிறார். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பெற்றார்.
இந்நிலையில், வட்டி தொழில் செய்து வந்த ஹரி நாடார், சமீபத்தில் பட தயாரிப்பில் புகுந்தார். அவரே நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்திற்கு பூஜை போட்ட நிலையில், பெங்களூரை சேர்ந்த வெங்கடராமன் சாஸ்திரி உள்ளிட்டோரிடம் கடன் தருவதாக 16 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பெங்களூர் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரி நாடார் பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபபட்டார்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாக புகார் அளித்திருந்தார். தற்போது இந்த புகாரை கையில் எடுத்துள்ள திருவான்மியூர் போலீசார், பெங்களூருவில் சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்ய கர்நாடக போலீசாருக்கு கடிதம் எழுதினர்.
இதற்கு கர்நாடக போலீசார் ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து பெங்களூர் சென்ற திருவான்மியூர் போலீசார் பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்த ஹரி நாடாரை கைது செய்து சென்னை அழைத்து வந்ததை தொடர்ந்து இன்று அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஹரி நாடாருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்.
— Bala vetrivel ந (@vetrivel1996) January 20, 2022
கைது செய்யப்பட்ட பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவு. @PTTVOnlineNews#Harinadar pic.twitter.com/jNdGrEMMv2
தமிழகத்தில் அனைவராலும் நடமாடும் நகைக்கடை என்று அறியப்பட்டவ ஹரி நாடார் பொதுவெளியில் தனது கை மற்றும் கழுத்தில் கிலோ கணக்கில் நகைகள் அணிந்தபடியே இதுவரை வந்துள்ளார். ஆனால் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அவர், எவ்வித நகைகளும் இல்லாமல் ஒரு சாதாரண மனிதனை போல் வந்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil