Advertisment

தமிழக அரசியல்வாதிகளின் சர்ச்சை பேச்சுக்கள் 2019

Tamil nadu politicians controversial speech 2019 : தமிழக அரசியலில், 2019ம் ஆண்டு ஒரு சாதாரண ஆண்டாக கடந்துவிடவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கூறிய நிகழ்வு, தேசிய அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amil nadu, chennai, admk, congress, bjp, makkal needhi maiam, naam tamilar katchi, controversial speerch, duglak, gurumoorthy, minister jayaykumar, minister rajendra balaji, hindu terrorist, godse, kamalhaasan, seeman

tamil nadu, chennai, admk, congress, bjp, makkal needhi maiam, naam tamilar katchi, controversial speerch, duglak, gurumoorthy, minister jayaykumar, minister rajendra balaji, hindu terrorist, godse, kamalhaasan, seeman, தமிழ்நாடு, அரசியல்வாதிகள், சர்ச்சை பேச்சு, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன், சீமான், ராஜிவ் காந்தி படுகொலை, விடுதலைப்புலிகள், இந்து தீவிரவாதி, கோட்சே

தமிழக அரசியலில், 2019ம் ஆண்டு ஒரு சாதாரண ஆண்டாக கடந்துவிடவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கூறிய நிகழ்வு, தேசிய அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

2019ம் ஆண்டில், தமிழக அரசியல்வாதிகள் கூறிய சர்ச்சை கருத்துகளும், அதன் விளைவாக ஏற்பட்ட பரபரப்பு குறித்த வீடியோக்களை இந்த கட்டுரையில் காண்போம்....

துணை முதல்வர் பன்னீர்செல்வம் குறித்து குருமூர்த்தி சர்ச்சை பேச்சு

துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறிய கருத்து தமிழக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குருமூர்த்தி ஆம்பளையா? : அமைச்சர் ஜெயக்குமார் சர்ச்சை கருத்து

துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினரை துக்ளக் நிர்வாக ஆசிரியர் குருமூர்த்தி ஆண்மையற்றவர்கள் என்று கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தி ஆம்பளையா என்று கேட்ட நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் கோட்சே - கமல்ஹாசன்

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தான், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் வரும் 19ம் தேதி, சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் அந்த தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நடிகரும், அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது கமல் பேசிய கருத்து, பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் எம்பி மாணிக் தாகூரை ஒருமையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசிய நிகழ்வு, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து கோயில்கள் - திருமாவளவன் சர்ச்சை பேச்சு

அயோத்தி தீர்ப்பு வந்திருந்த நிலையில் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சொன்ன கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன்பிறகு அவர் மன்னிப்பு கோரியிருந்தார்.

ராஜிவ் கொலை குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு...

ராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பிரிவுகளின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி போலீஸ் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர்.

இவ்வாறாக, 2019ம் ஆண்டு கடந்து சென்றுவிட்டது. இனி பிறக்கப்போகும் 2020ம் ஆண்டிலாவது தமிழக அரசியல்வாதிகள் மக்கள் நலன்சார்ந்த நிகழ்வுகளில் ஈடபாடு செலுத்தி மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைப்பார்கள் என்று நம்புவோமாக...

Tamil Nadu Admk Makkal Needhi Maiam Tamil Nadu Politics All India Congress Minister Jayakumar Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment