Advertisment

Tamil News : கன்னியாகுமரியில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Highlights: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Nadu live updates weather : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக குறைக்க வேண்டும் என்று கேரளா கோரிக்கை வைக்கிறது. ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் சீர்குலையக் கூடாது எனவே நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு வேண்டிக் கொள்கிறது. இந்நிலையில் பேபி அணையை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கேரள அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது.

Advertisment

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பலவீனமானது என ஐ.நா அறிக்கை அளித்துள்ளதாக கேரள அரசு கூறியுள்ளது. முல்லை பெரியாறு குறித்து ஐநா அறிக்கை வெளியிடவில்லை. தவறான தகவல்களை அளித்து அதனை மிகைப்படுத்தி வருகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

முல்லைப் பெரியாரில் மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரளா அனுமதி மறுத்தது ஏன்?

சமையல் எரிவாயு விலையேற்றம் - என்ன நினைக்கிறார்கள் தமிழக மக்கள்?

இயல்பைக் காட்டிலும் 5% கூடுதல் மழை

சென்னை இயல்பைக் காட்டிலும் 5 மடங்கு கூடுதலாக மழைப் பொழிவைப் பெற்றுள்ளது. எப்போதும் இந்த காலத்தில் 8 செ.மீ மழையை மட்டுமே பெறும். ஆனால் இம்முறை 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை கிட்டத்தட்ட 81 செ.மீ மழைப் பொழிவைப் பெற்றுள்ளது சென்னை. இது இயல்பைக் காட்டிலும் 85% கூடுதலான மழைப்பொழிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 464 குழந்தைகள் உட்பட 2,888 நபர்கள் சென்னையில் உள்ள 44 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை; அதி கனமழைக்கு வாய்ப்பு உண்டு- எச்சரிக்கும் ஐ.எம்.டி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 19:46 (IST) 13 Nov 2021
    பள்ளி மாணவி தற்கொலை : காவல்துறை துணை ஆணையர் எச்சரிக்கை

    ஆசிரியரின் பாலியல தொலையை தாங்கிக்கொள்ள முடியாமல் கோவையில் பள்ளி மாணவி தறகொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக வேறு யாரும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை நிச்சயம் என்று காவல்துறை துணை ஆணையர் கூறியுள்ளார்.



  • 18:42 (IST) 13 Nov 2021
    ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனையை உறுதிசெய்ய வேண்டும் - சீமான்

    ஆசிரியரின் பாலியல தொலையை தாங்கிக்கொள்ள முடியாமல் கோவையில் பள்ளி மாணவி தறகொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,

    கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன்.

    கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதுசெய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனையை உறுதிசெய்ய வேண்டும்

    மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.



  • 18:38 (IST) 13 Nov 2021
    ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது - டாக்டர் ராமதாஸ்

    ஆசிரியரின் பாலியல தொலையை தாங்கிக்கொள்ள முடியாமல் கோவையில் பள்ளி மாணவி தறகொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ள டாக்டர் ராமதாஸ், தனது ட்விட்டர் பதிவில்,

    கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்

    மாணவி தற்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமானதல்ல. அவரின் பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.



  • 18:22 (IST) 13 Nov 2021
    மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்

    கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!



  • 17:38 (IST) 13 Nov 2021
    தேசிய செய்திகள்அசாம் ரைபிள்ஸ் படையினர் மீதான தாக்குதல் கோழைத்தனமானது: ராஜ்நாத் சிங் கண்டனம்

    "அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. இந்த தாக்குதல் மிகுந்த வேதனை அளிக்கிறது. கண்டனத்திற்குரியது. துணிச்சல் மிக்க வீரர்கள் 5 பேரையும் குடும்ப உறுப்பினர்கள் 2 பேரையும் இந்த தேசம் இழந்து இருக்கிறது” என்று , எனப் பதிவிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்



  • 17:32 (IST) 13 Nov 2021
    மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலி

    மணிப்பூர் - மியான்மர் எல்லைக்கு அருகே உள்ள சுராசந்த்பூரில் ராணுவ வாகனங்கள் மீது கண்ணிவெடி மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகன் மற்றும் மேலும் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    மணிப்பூரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடத்தியது எந்த பயங்கரவாத இயக்கம் என்பது தற்போது வரை தெரியவில்லை.



  • 17:17 (IST) 13 Nov 2021
    விஜய்-லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விஜய் 67’ படத்தை தயாரிக்கும் தாணு?

    லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையும் ‘விஜய் 67’ படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்யின் 64 வது படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் பட்டாளமே நடித்திருந்தனர்.



  • 17:07 (IST) 13 Nov 2021
    தண்ணீரில் மிதக்கும் கன்னியாகுமரி: பேரிடர் மீட்பு படை விரைவு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்ததாலும், மண் சரிவு காரணமாகவும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழு குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளனர்.



  • 16:56 (IST) 13 Nov 2021
    தங்க மகனுக்கு கவுரவம்!

    ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்.



  • 16:54 (IST) 13 Nov 2021
    தண்ணீரில் மிதக்கும் கன்னியாகுமரி: பேரிடர் மீட்பு படை விரைவு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்ததாலும், மண் சரிவு காரணமாகவும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழு குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளனர்.



  • 16:41 (IST) 13 Nov 2021
    ”மாணவியின் மீதே பழி சுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலாக்கிய பள்ளி மீது நடவடிக்கை தேவை”: சீமான்

    கோவை மாவட்டத்தில் 17 வயது மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சீமான், ”கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். அண்மைக்காலமாக வெளிப்பட்டு வரும் கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நலவாழ்வு, அவர்களது சமூகப்பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலையை ஏற்படுத்துகின்றன. மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதுசெய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனையை உறுதிசெய்ய வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 16:29 (IST) 13 Nov 2021
    தமிழக அரசிடம் மழை நீரை சேமிக்கும் தொலைநோக்கு திட்டம் இல்லை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

    சென்னை அம்பத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்கூட்டியே தூர்வாரியிருந்தால் மழை நீர் தேங்காமல் கடலுக்கு சென்றிருக்கும் எனக் கூறினார். மேலும், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.



  • 16:17 (IST) 13 Nov 2021
    "சென்னை மழையால் பாதிக்கப்பட்ட 5,987 பேரை மீட்டுள்ளோம்" - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

    சென்னையில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 6 ஆயிரம் பேரை காவல்துறையினர் மீட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:13 (IST) 13 Nov 2021
    ஆன்லைன் ரம்மி தடை; தமிழக அரசு மேல்முறையீடு!

    ஆன்லைன் ரம்மியை தடை செய்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.



  • 15:54 (IST) 13 Nov 2021
    மாணவி தற்கொலை விவகாரம்; சின்மயா பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு!

    கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சின்மயா பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை பற்றி மாணவி புகார் அளித்தபோதும் பள்ளி முதல்வராக இருந்த மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுப்பட்டுள்ளது.



  • 15:51 (IST) 13 Nov 2021
    ஜே.பி.நட்டா தமிழகம் வருகை...!

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 24ஆம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகை தரவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 15:15 (IST) 13 Nov 2021
    சென்னை விம்கோ நகர்- திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் வழித்தடத் தண்டவாளத்தில் விரிசல்

    விம்கோ நகர்- திருவொற்றியூர் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, நண்பகல் 12 மணி முதல் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் தடத்தில் ஒரு வழிப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுகிறது



  • 14:56 (IST) 13 Nov 2021
    ராணுவ அதிகாரி வாகனம் மீது கண்ணிவெடி தாக்குதல் - 6 பேர் பலி

    மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.



  • 14:13 (IST) 13 Nov 2021
    மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல். முருகன் நிதியுதவி

    சென்னை போரூரில் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.



  • 13:50 (IST) 13 Nov 2021
    கன்னியாகுமரி, நெல்லையில் மிக கனமழை

    கன்னியாகுமரி, நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.



  • 13:27 (IST) 13 Nov 2021
    கோவை 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்

    கோவையில், தனியார் பள்ளி ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



  • 13:08 (IST) 13 Nov 2021
    பள்ளிக்கு செல்ல மாணவர்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது - உயர் நீதிமன்றம் கருத்து

    கிராமபுறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரிய வழக்கில், பள்ளிக்கு செல்ல மாணவர்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், வேலையிழப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பியவர்களின் குழந்தைகள் படித்த அரசு பள்ளிகளில் மாற்றுச்சான்று பெறுவதில் சிக்கல் உள்ளது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மாணவர்களின் கல்வி தொடர்பாக வேறு பிரச்சினைகள் உள்ளனவா என தெரிவிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



  • 12:48 (IST) 13 Nov 2021
    மழை பாதிப்பு; மயிலாடுதுறையில் முதல்வர் ஆய்வு

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மற்றும் இருக்கூர் பகுதிகளுக்கு உட்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்



  • 12:33 (IST) 13 Nov 2021
    கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 11:50 (IST) 13 Nov 2021
    அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்

    தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது, இது நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 11:38 (IST) 13 Nov 2021
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய அப்பலோ மருத்துவமனை மனு மீதான விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது



  • 11:26 (IST) 13 Nov 2021
    சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் சிறப்பு ரயில் ரத்து

    சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் சிறப்பு ரயில், நாளை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே அறிவித்துள்ளது.



  • 11:24 (IST) 13 Nov 2021
    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது உபரி நீர் வெளியேற்றம் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில் நாளை மேட்டூர் அணை முழுக் கொள்ளளவையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • 10:24 (IST) 13 Nov 2021
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 264 அதிகரித்து ரூ. 37,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,655 ஆக உள்ளது



  • 10:22 (IST) 13 Nov 2021
    வைகையில் நீர் திறப்பு

    வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மலர் தூவி அணையை திறந்து வைத்தனர்.



  • 10:04 (IST) 13 Nov 2021
    நாங்கள் படகில் சென்றதால் தான் கொளத்தூரில் பணிகள் முடக்கிவிடப்பட்டது - அண்ணாமலை

    நாங்கள் படகில் சென்றதால் தான் கொளத்தூரில் பணிகள் முடக்கிவிடப்பட்டது - அண்ணாமலை

    படகில் நாங்கள் சென்று வந்ததை செய்தியாக்கியதால் கொளத்தூரில் பணிகள் முடுக்கிவிடப்பட்டது.



    உண்மை நிலையை முன்பே எடுத்து சொல்லி இருந்தால் பணிகள் விரைந்து முடிந்திருக்கும்.



    நாங்களும் கொளத்தூருக்குள் படகில் சென்றிருக்க மாட்டோம்!



    மாநில தலைவர் திரு.@annamalai_kbjp4chennaifloodrelief pic.twitter.com/QIKj28w4UK

    — BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 13, 2021


  • 09:58 (IST) 13 Nov 2021
    ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு

    சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசாணையை வெளியீட்டது தமிழக அரசு



  • 09:49 (IST) 13 Nov 2021
    புறநகர் ரயில்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

    சென்னை புறநகர் ரயில்களில் வரும் 15-ம் தேதி முதல் பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகள் தளர்வு என்று அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே சென்னை மண்டலம். பயணிகள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • 09:40 (IST) 13 Nov 2021
    குமரியில் கனமழை

    குமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 20 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணை அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது



  • 09:31 (IST) 13 Nov 2021
    கடலூரில் முதல்வர்

    கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 08:53 (IST) 13 Nov 2021
    பெட்ரோல் டீசல் விலை

    சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨101.40-க்கும், டீசல் லிட்டர் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • 08:53 (IST) 13 Nov 2021
    வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு விடுமுறை

    வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அறிவித்துள்ளார் ஆட்சியர் விஷ்ணு



Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment