Advertisment

துணை முதல்வர் ஆவாரா உதயநிதி? தர்காவில் அமைச்சர் தலைமையில் பிரார்த்தனை

Tamilnadu News Update : உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக நிகழ்ச்சிகளுக்கு கட்சி நிர்வாகிககள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
துணை முதல்வர் ஆவாரா உதயநிதி? தர்காவில் அமைச்சர் தலைமையில் பிரார்த்தனை

Tamil Nadu MLA Udhayanidhi Stalin Birthday Celebration Update: சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக நிர்வாகிகள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகினறனர்.

Advertisment

நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக அமைச்சரவையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அவர் தற்போது கைவசம் படங்கள் அதிகம் வைத்திருப்பதால், அமைச்சரவை மாற்றயமைக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனாலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் கட்சியில் அவரின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்து அவர்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக நிகழ்ச்சிகளுக்கு கட்சி நிர்வாகிககள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் 27-ந் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்தநாளில் அமைச்சர்க்ள பலரும் அவரின் வீட்டிற்கே சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிய நிலையில், திமுக எம்பி மக்களவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார். மேலும் இந்த பிறந்த நாள விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக நிர்வாகிகள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அவரின் பிறந்தநாள் முடிந்து 2 வாரங்கள் முடிந்தாலும் தற்போதுவரை நலத்திடட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழக சிறுபான்மையினத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை மவுண்ட் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வெற்றிகரமான அரசியல் வாழ்ககைக்காக சென்னையில் உள்ள ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதேரி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் அமைச்சர் கே.எஸ். மஸ்தான், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக தமிழக சிறுபான்மையின துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கூறுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன், உதயநிதி ஸ்டாலின், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்தோம். அவரின் காலம் விரைவில் வரும். அவரது அரசியல் வாழ்கை நல்ல வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தர்காவின் அறங்காவலர் சையத் மானுரூதீன் கூறுகையில், உதயநிதி தற்போது தமிழகத்தில் பிரபலமான பிரமுகராக உள்ளார். விரைவில் அவர் தமிழகத்தின் துணை முதல்வராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாக கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment