Advertisment

ஆளுநர் மூலம் மாநில அரசை மிரட்ட முயற்சியா? : கலவையான விமர்சனங்களை பெறும் ஆளுநர் நியமனம்

Tamilnadu News Update : தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது குறித்து தமிழக அரசியல் பிரபங்கள் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
திருக்குறளின் ஆன்மீக பகுதியை அரசியலுக்காக சுருக்க கூடாது; ஆளுநர் ஆர்.என்.ரவி

Tamil Nadu New Governor RN Ravi : தமிழகத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு கேரளாவை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஒரு சில மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் மற்றும் புதிய ஆளுநர்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜவின் மூத்த்தலைவராக இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்-க்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டு தமிழகத்தில் புதிய ஆளுநராக கேரள முன்னாள் கேபிர் ஐபிஎஸ் அதிகாரி ஆர் என் ரவி நிமயமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் தலைவர் பாட்னாவில் பிறந்த ரவீந்திர நாராயண் ரவி, இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடக்கத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்றிய அவர், அதன்பிறகு ஐபிஎஸ் அதிகரியாக தேர்ச்சி பெற்றார்.  அதன்பிறகு நாகாலாந்து ராஜ் பவனின் அதிகாரப்பூர்வ போர்டல், கேரளா-கேடர் ஐபிஎஸ் அதிகாரி "பயங்கரவாதம் மற்றும் உளவுத்துறை பகிர்வுக்கு இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பின் வடிவமைப்பாளர்" என பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்த அவர், நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிகாட்டினார். அவர் 2014 ல் நாகா அமைதி பேச்சுவார்த்தைக்கான மையத்தின் உரையாசிரியராகவும், 2018 இல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், 2019 இல் நாகாலாந்து ஆளுநராகவும் நியமிக்கப்பட்ட இவர் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் வட்டத்தில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆளுநராக ஆர்.என.ரவி நியமிக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றாலும்,, தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக புதிய ஆளுநரைப் பயன்படுத்தி மாநில அரசை மிரட்ட முயற்சிப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டினார். மற்றொரு திமுக கூட்டணி கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், உளவுத்துறை பணியகத்தில் பணியாற்றிய புதிய ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் குறித்து ராஷ்டிரபதி பவன் அறிவிப்பு வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ஆளுநருக்கு  வாழ்த்து தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் தனது பதிவில், உங்கள் வருகை மாநிலத்தின் வளர்ச்சியையும் வளத்தையும் வளர்க்கட்டும். தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது, என பதிவிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், நாகாலாந்து  அமைதிப் பேச்சுவார்த்தையில் ரவியின் நினைவுகூர்ந்து, மாநிலத்தின் வளர்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் உயர்த்துவார் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநரை வரவேற்பதாகவும், குறிப்பிட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, 1976-பேச் ஐபிஎஸ் அதிகாரி பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டவர் மற்றும் பிரச்சனைகளை முழுவதுமாக கையாண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஆளுநர் நியமனம் குறித்து விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரி, “பாஜக தமிழகத்தில் அரசியல் நடவடிக்கைகளை சீர்குலைத்து, ஜனநாயக விரோத வழிமுறைகள் மூலம் மாநிலத்தில் தங்களது கட்சியை வளர்க்க முயற்சிக்கிறது. கட்சியின் இந்த நடவடிக்கைக்கு ரவியை பகடைக்காயாகப் பயன்படுத்த மோடி அரசு முயல்கிறது என்ற குற்றச்சாட்டு 100% நியாயமானது என்று நான் நினைக்கிறேன்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு புதுச்சேரியில், நாராயணசாமி தலைமையிலான அரசின் பல்வேறு நலத்திட்டங்களை புதுச்சேரி முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி குறுக்கிட்டதாக குற்றம் சாட்டிய அழகிரி, இதுபோன்ற முயற்சிகள் தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என்று கூறினார். தமிழகத்தில் ஜனநாயகத்தை கொலை செய்ய ரவியை பயன்படுத்த மத்திய அரசு முயன்றால் அரசியல் கட்சிக்கள் மற்றும் பிர அமைப்புகளை ஒன்றுதிரட்டிபோராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தொழில்கள், பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, கல்வி, தமிழ் நாகரிகம் மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு முனைகளில் தமிழக அரசின் முயற்சிகளை புதிய ஆளுநர் ஆதரிக்க வேண்டும் என்றும், கேரளாவில் நீண்ட காலம் பணியாற்றினார், தமிழ்நாட்டை நன்கு அறிந்திருப்பார் என்றும்"குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment