Advertisment

திருச்சி, மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்வோருக்கு 7 நாட்கள் குவாரன்டின்; சென்னையில் இருந்து செல்பவர்களுக்கு இல்லை!

From Trichy and Madurai to Singapore fliers have to undergo the quarantine; not for the Chennai fliers Tamil News: திருச்சி, மதுரை விமான தளங்களில் இருந்து சிங்கப்பூர் செல்ல குறைவான விமானங்கள் தான் உள்ளது என்றும், இங்கிருந்து பயணிப்போருக்கு மட்டும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu news in tamil: 7 day quarantine for Madurai, Trichy fliers to Singapore; not Chennai

Tamil Nadu news in tamil: சீனாவின் உகான் நகரில் இருந்து பரவி கொரோனா தொற்று உலகையே உலுக்கியது. இந்த பெருந்தொற்றல் பல நாடுகள் லட்சக்கணக்கான உயிர்சேதங்களையும், பல கோடி மதிப்பிலான பொருளாதார சேதங்களையும் சந்தித்தன. மேலும், சில நாடுகளில் பரவிய கொரோனா வைரஸில் திரிபு ஏற்பட்டு 2ம் அலை உருவெடுத்தது.

Advertisment

கொரோனா தொற்றின் போது இந்தியாவில் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி திரும்பினர். தற்போது கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ள நிலையில் மீண்டும் அவர்கள் வேலை அல்லது வசித்த இடம் நோக்கி பயணித்து வருகின்றனர். நாட்டில் அனைத்து மாநிலங்களும் தங்கள் எல்லைகளை திறந்துள்ளன. அயல் நாடுகளில் சில தங்கள் நாட்டிற்குள் வர இதுவரை அனுமதிக்கவில்லை. அதேவேளையில் சில நாடுகள் பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளன.

அந்த வகையில், அண்டை நாடான சிங்கப்பூர் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தற்போது தமிழத்தின் திருச்சி மற்றும் மதுரையில் இருந்து பயணிப்போர் அதிக இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விரு விமான தளங்களில் இருந்து சிங்கப்பூர் செல்ல குறைவான விமானங்கள் தான் உள்ளது என்றும், இங்கிருந்து பயணிப்போருக்கு மட்டும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 29 முதல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் தடுப்பூசி பயண பாதை (VTL - Vaccinated Travel Lane) விமானங்களைத் தொடங்கியுள்ளது. இந்த விமானத்திற்கு 125 சிங்கப்பூர் டாலர்களை செலுத்தி அனுமதி பெறுபவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலின்றி அந்த நாட்டிற்குள் நுழைய முடியும். இருப்பினும், திருச்சி மற்றும் மதுரையில் இருந்து மற்ற விமானங்களில் பயணிப்பவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

publive-image

பயணிகள் தனிமைப்படுத்தப்படுதலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து புறப்படும் விமானத்திற்கு அதிக மக்கள் அனுமதி பெற விரும்புகிறார்கள். இதனால் அந்த விமானத்திற்கு அதிக தேவை ஏற்படுட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"பிற நகரங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து செல்லும் விமானத்தில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். ஏனெனில் அவர்கள் விலையுயர்ந்த தனிமைப்படுத்தலைத் தவிர்க்கலாம் என நினைக்கிறார்கள். தேவை அதிகமாக இருப்பதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் டிசம்பர் முதல் வாரத்தில் பயணிக்க, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு வழிக் கட்டணமாக ரூ.19,000 செலுத்த வேண்டும்." என யுனைடெட் டிராவல்ஸ் அருள் லாசரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையம் கொரோனா தொற்றின் போது சிங்கப்பூருக்கு சென்ற மற்றும் அங்கிருந்து வந்த சுமார் 80,000 பயணிகளைக் கையாண்டது. மற்ற விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது அதிகபட்சமாக பயணிகளை கொண்ட விமான நிலைய பட்டியலில் திருச்சி சேர்க்கப்படவில்லை. இந்த தளத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு 4 விமானங்களை இயக்கி வருகிறது. ஸ்கூட் ஏர் தனது வாராந்திர 5 சேவைகளையும், இண்டிகோ தினசரி சேவையையும் இந்த விமான தளத்தில் மீண்டும் தொடங்க உள்ளது.

publive-image

“சேவைகள் சேர்க்கப்படும் போது, ​​திருச்சியில் இருந்து சிங்கப்பூர் பயணம் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும். இருப்பினும், திருச்சி விமான நிலையத்தைத் தேர்வு செய்யும் பயணிகள் சிங்கப்பூருக்குத் திரும்பிச் செல்ல விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் அவர்களின் திட்டங்களை கடுமையாகப் பாதிக்கும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழியாக வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை மற்றும் பிற விமானங்கள் மூலம் வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்குப் பின்னால் எந்த தர்க்கமும் இல்லை. இதனால், தொற்றுநோய்களின் போது வந்து சிங்கப்பூருக்குப் பறக்கக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படும். ”என்று சிங்கப்பூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிபுணர் கே மைதிலி கூறியுள்ளார்.

அல் பர்வேஸ் இன்டர்நேஷனல் ஏர் டிராவல்ஸ் அண்ட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நர்கிஸ் பெஹாம் கூறுகையில், திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க உள்ள நூற்றுக்கணக்கானோரை VTL அனுமதி பாதிக்கும். சிங்கப்பூர் வாழ்மக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் தவிர, VTL ஐ தேர்வு செய்யும் மற்ற பயணிகள் தங்கள் பதிவுக்கு ஒப்புதல் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

publive-image

"VTL அனுமதியில் விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இங்கு கட்டணம் அதிகம். தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணிக்கின்றனர். போதுமான விமானங்கள் இருப்பதையும், கட்டணம் குறைவாக இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்"என அருள் லாசரன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Tamilnadu News Update Tamilnadu News Latest Singapore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment