Tamil Nadu news in tamil: மூன்றாம் ஆண்டு படித்து வரும் 20 வயதான கல்லூரி மாணவி செங்கப்பட்டை அடுத்த வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். சமூக வலைத்தள பக்கங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ளும் இந்த மாணவி, தனது பபுகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வந்துள்ளார். இவரை பின்தொடரும் சில மர்ம நபர்கள் இவரின் புகைப்படங்களை சிலவற்றை மார்ப்ட் செய்து மற்ற இணைய பக்கங்களில் பதிவேற்றியுள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள மற்றொரு நபர் மாணவியொடு சேர்ந்து பயிலுபவர் என்று கூறியுள்ள போலீஸ் வட்டாரம், இதுகுறித்து மாணவி அந்த மாணவரை கேட்டபோது தான் அந்த புகைப்படங்களை பதிவேற்றவில்லை எனவும், வேறு சிலரின் சதி வேலை தான் இது எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதள பக்கங்களில் புகைடபடங்களை பதிவிடக்கூடாது என குடும்பத்தினர் அந்த மாணவியை ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், இந்த சம்பவத்தால் மாணவி கலக்கமடைந்துள்ளார். மேலும் இது தனது குடும்பத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சியுள்ளார். அதோடு இந்த புகைப்படம் குறித்து மாணவியின் நண்பர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளனர் என விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் மிகவும் விரக்தியடைந்த மாணவி ஞாயிற்றுக்கிழமை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அவரை குடும்ப உறுபினர்கள் தேடியதில் பாழடைந்த கிணற்றில் இறந்து கிடந்துள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த இளைஞர்களுடனான முதற்கட்ட விசாரணையில் அவர்களின் நண்பர்களில் யாரோ சிலர் தான் வேண்டுமென்றே அதைச் செய்ததாக தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு தாலுகா போலீசார் நான்கு வெவ்வேறு சமூக ஊடக அடையாளங்களை கண்டுபிடித்துள்ளனர், அதில் இருந்து தான் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும் "சமூக வலைதள பக்கங்களில் ஒரு படம் மற்றும் இரண்டு ஐடிகளை ஏற்கனவே பதிவிட்ட நபர் நீக்கியுள்ளார். மற்ற இருவரையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம், ”என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“