Advertisment

ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட திட்டம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!

Tamil Nadu health minister ma subramanian press conference Tamil News: ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்குடன் தமிழகம் கிட்டத்தட்ட 10,000 தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu news in tamil: TN to organise 10,000 COVID-19 vaccination camps in a single day

Tamil Nadu news in tamil: கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசின் சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் இலக்குடன் தமிழகம் கிட்டத்தட்ட 10,000 தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Advertisment

இது குறித்து சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 10,000 சிறப்பு முகாம்களை நடத்த முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, செப்டம்பர் 12 அன்று இந்த முகாம்களை ஏற்பாடு செய்ய நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் சுகாதார சேவைகளின் துணை இயக்குநர்களுடன் தேவையான ஏற்பாடுகள் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது.

இதே நாளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் தொடங்கி ஐந்து முதல் ஆறு கேரள எல்லை மாவட்டங்களுக்கு சென்று இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளைச் சரிபார்க்க உள்ளோம்.

நேற்று மாநிலத்தில் மொத்த தடுப்பூசி செலுத்திய நபர்களின் எண்ணிக்கை 3,50,20,070 ஐ எட்டியது. இது ஒரு மைல்கல். மேலும் நேற்று, 6,20,255 நபர்கள் தடுப்பூசி போடப்பட்டதால், ஜனவரி 16 முதல் அதாவது தடுப்பூசி போடப்பட்டதிலிருந்து ஒரே நாளில் அதிக தடுப்பூசியை செலுத்திய மைல்கலையும் அடைந்தோம் அதோடு இது எட்டு முதல் ஒன்பது மாதங்களில் ஒரே நாளில் அதிகபட்சமாகும்.

கடந்த வாரம், தினசரி தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிகை ஐந்து லட்சத்தை தாண்டியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசிடமிருந்து தமிழகம் மிகப்பெரிய அளவில் தடுப்பூசிகளைப் பெறத் தயாராக உள்ளது. மேலும்19,22,080 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் மூலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சருடனான சந்திப்பின் போது கேரளாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒன்பது மாவட்டங்களின் மக்கள்தொகைக்கு கூடுதல் தடுப்பூசிகளின் தேவையை நாங்கள் உறுதிப்படுத்தினோம்.

இந்த ஒன்பது எல்லை மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி போடுவது கேரளாவில் கோவிட் -19 வழக்குகளின் அதிகரிப்பை சமாளிக்க உதவும். இந்த பகுதிகளில் ஒரு நாளைக்கு 25,000 முதல் 30,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு இந்த பெரிய அளவிலான தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. தற்போது 14.47 லட்சம் டோஸ் உள்ளது. இந்த பெரிய சப்ளை அதன் பங்கு நிலையை கிட்டத்தட்ட 33 லட்சம் டோஸ்களுக்கு எடுத்துச் செல்லும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Covid 19 Vaccine Tamilnadu Tamilnadu News Update Tamilnadu News Latest Covid Vaccine Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment