Advertisment

Tamil Nadu Assembly Election Live Updates: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

Tamil Breaking news : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை திமுக இன்று வெளியிடுகிறது

author-image
WebDesk
New Update
Tamil Nadu Assembly Election Live Updates: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

Tamil Nadu Assembly Election Live UpdatesTo live heading please

Advertisment

Tamil Nadu Assembly Election Live Updates: 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. துரை சந்திரசேகர் பொன்னேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

publive-image

Tamilnadu Assembly Election 2021 Congress List

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை திமுக இன்று வெளியிடுகிறது. .முன்னதாக தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். மு.க ஸ்டாலின் மூன்றாவது முறையாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்

publive-image

இதனிடையே, மிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிஜேபி திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், கோயம்புத்தூர் தெற்கு, உதகை, திருநெல்வேலி உள்ளிட்ட 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்களின் முதலாவது பட்டியலை நேற்று டிடிவி தினகரன் வெளியிட்டார். 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பொதுக்கூட்டங்களில் கோவிட்-19-க்கான நெறிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாஹு கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil



  • 20:56 (IST) 13 Mar 2021
    அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் - ஸ்டாலின்

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 20:18 (IST) 13 Mar 2021
    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

    இந்தியாவில் கடந்த 2 வாரமாக 60 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.



  • 18:38 (IST) 13 Mar 2021
    முதல்வர் பழனிச்சாமி 17 தொகுதிகளில் 2 நாட்கள் பிரச்சாரம்

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்வர் பழனிச்சாமி 17 தொகுதிகளில் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 16-ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக விராலிமலை தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர், 17-ந் தேதி திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.



  • 18:24 (IST) 13 Mar 2021
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

    வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:04 (IST) 13 Mar 2021
    தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

    தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், "அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் கருணாநிதி தான்" என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 16:19 (IST) 13 Mar 2021
    முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

    ”ஸ்டாலினுக்கு என்ன ஜோசியமா தெரியும்; கருத்து கணிப்புகளை பொய்யாக்குவோம்” என்று முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



  • 16:17 (IST) 13 Mar 2021
    காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேட்டி

    நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.



  • 16:16 (IST) 13 Mar 2021
    தேமுதிக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

    தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து்ளளது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியான நிலையில், 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு்ள்ளது.



  • 15:52 (IST) 13 Mar 2021
    திமுக எம்.பி.,டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

    ஆளும் கட்சி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அனைத்து மதத்தை சார்ந்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் திமுக ஆட்சி அமைந்த பிறகு சில விஷயங்கள் செய்வோம் என திமுக எம்.பி.,டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.



  • 14:20 (IST) 13 Mar 2021
    புதுவையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது - முதல்வர்

    பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், புதுவை தொகுதிப்பங்கீடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.



  • 13:37 (IST) 13 Mar 2021
    நீட் ரத்து செய்ய சட்டம்

    பேறுகால உதவித்தொகை ரூ. 24 ஆயிரமாக உயர்த்தப்படும். நீட் தேர்வினை ரத்து செய்ய, ஆட்சி அமைந்தவுடன் சட்டம் இயற்றப்படும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலங்கள் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும்.

    அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தொழில் நிறுவனங்களில் 75% வேலைகள் தமிழர்களுக்கே என்று சட்டம் கொண்டு வரப்படும். வேலையில்லா பட்டதாரிகள் தொழில் துவங்க 20 லட்சம் கடன் வழங்கப்படும்.



  • 13:33 (IST) 13 Mar 2021
    ரூ. 10 ஆயிரம் மானியம்

    ஊட்டச்சத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவுக்கூடை திட்டம் உருவாக்கப்படும். பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் நலன் காக்க ஆணையம் உருவாக்கப்படும். பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப நிவாரண நிதி உயர்த்தப்படும். சிறுகுறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க ரூ. 10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். ஆட்டோ ஓட்டூநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ. 10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்.



  • 13:22 (IST) 13 Mar 2021
    தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம்

    சத்துணவுக்கூடம் மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றும் நபர்கள் அரசு பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள். கலைஞர் காப்பீடு மற்றும் வருமுன் காக்கும் திட்டம் ஆகியவற்றை மேம்படுத்துவோம்.

    தமிழக ஆறுகளை மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும், புகையில்லா பேருந்துகள் தமிழக பெருநகரங்களில் அறிமுகம் செய்யப்படும்.

    கொரோனா தொற்று காலத்தில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்று முன்கள பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். பணிகாலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்படும்.



  • 13:17 (IST) 13 Mar 2021
    500 இடங்களில் கலைஞர் உணவகம்

    ஏழை மக்கள் பசியாற முதற்கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும். சாலையோரங்களில் வாழும் மக்களுக்கு இரவில் தங்க காப்பகங்கள் அமைக்கப்படும்.



  • 13:13 (IST) 13 Mar 2021
    ஆதரவற்ற பெண்களுக்கு நிதி உதவி

    32 லட்சம் ஆதரவற்ற பெண்கள், 50 வயதுக்கு மேல் மணம் ஆகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஆகியோருக்கு மாதம் ரூ. 1500 நிதி உதவி வழங்கப்படும்.



  • 13:09 (IST) 13 Mar 2021
    கேபிள் கார் வசதி

    முக்கியமான மலைக் கோவில்களுக்கு செல்ல கேபிள் கார் வசதி ஏற்படுத்தப்படும். கிராமப்புற பூசாரிகளின் ஊதியம் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும். இந்து கோவில்களின் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு பணிக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கப்படும். மசூதி மற்றும் தேவலாயங்களை புனரமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கு பணி வழங்கப்படும்.



  • 13:06 (IST) 13 Mar 2021
    கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம்

    குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டுவசதி திட்டம் கொண்டு வரப்படும். நகர்புறங்களில் ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிக்கும் நபர்களுக்கு பட்டா வழங்கப்படும்.



  • 13:05 (IST) 13 Mar 2021
    அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு

    அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீட்டில் இருந்து உயர்த்தி 40% இட ஒதுக்கீடு வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரிக்க சைபர் காவல்நிலையங்கள் உருவாக்கப்படும்.



  • 13:04 (IST) 13 Mar 2021
    விலைவாசி குறைக்கப்படும்

    ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 5 மற்றும் ரூ. 4 முறையே குறைக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும். பெரிய மாவட்டங்களில் பறக்கும் சாலைகள் அமைக்கப்படும்.



  • 13:04 (IST) 13 Mar 2021
    சொத்து வரி உயர்த்தப்படாது

    கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வரை சொத்துவரி அதிகரிக்கப்படாது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 4000 நிதி வழங்கப்படும்.



  • 12:57 (IST) 13 Mar 2021
    அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு

    அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீட்டில் இருந்து உயர்த்தி 40% இட ஒதுக்கீடு வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரிக்க சைபர் காவல்நிலையங்கள் உருவாக்கப்படும்.



  • 12:55 (IST) 13 Mar 2021
    பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் குழாய் மூலம் குடிநீர் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். குடிசை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும்.



  • 12:52 (IST) 13 Mar 2021
    திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு நேரலை

    https://www.youtube.com/embed/n8b2fSYjyJs

    திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு நேரலை



  • 12:51 (IST) 13 Mar 2021
    தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார் முக ஸ்டாலின்
    தேர்தல் களத்தின் கதாநாயகனாம் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - நேரலை https://t.co/zkhxAbzkg4

    — M.K.Stalin (@mkstalin) March 13, 2021


  • 12:48 (IST) 13 Mar 2021
    தற்காலிக ஊழியர்கள் முறைப்படுத்தப்படுவார்கள் - மு. க ஸ்டாலின்

    அரசு துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் அனைவரும் முறைப்படுத்தப்படுவார்கள்.



  • 12:47 (IST) 13 Mar 2021
    திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்துவோம்

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். ஊழல் விசாரிக்க தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்படும். பொங்கல் திருநாள் மாநில பண்பாட்டு தினமாக கொண்டாடப்படும். மாதம் ஒருமுறை மின்கட்டனம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும், பணியின் போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் .



  • 12:41 (IST) 13 Mar 2021
    தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முக ஸ்டாலின்

    2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.



  • 11:53 (IST) 13 Mar 2021
    சிறப்பு டிஜிபி விசாரணைக் குழுவின் முன் ஆஜரானார்

    பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி விசாரணைக் குழுவின் முன் ஆஜரானார் . வாகன ஓட்டுநர், மூத்த ஐ.ஜி., டி.ஐ.ஜி தரவரிசை அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்பையில் சிறப்பு டிஜிபி கைது செய்யப்படலாம் (அ) நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



  • 11:49 (IST) 13 Mar 2021
    புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் முதலாவது பட்டியலை திமுக வெளியிட்டது

    புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் முதலாவது பட்டியலை திமுக வெளியிட்டது. 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரியில் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக



  • 11:00 (IST) 13 Mar 2021
    தேர்தல் அறிக்கை வெளியீடு -
    தேர்தல் அறிக்கை வெளியீடு - பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை. https://t.co/WWc8XeeOJ1

    — M.K.Stalin (@mkstalin) March 13, 2021

    தேர்தல் அறிக்கை வெளியீடுவதற்கு முன்பு, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மு. க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.



  • 10:46 (IST) 13 Mar 2021
    தேர்தலில் தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது - தன்ராஜ் பேட்டி

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு போதிய தொகுதிகளை அளிக்க பாஜக முன்வரவில்லை என்றும், அதன் காரணமாக தேர்தலில் தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளதாகவும் அக்கட்சியின் மாநில அமைப்பாளர் தன்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



  • 10:09 (IST) 13 Mar 2021
    சுப.கருப்பையா இன்று திமுகவில் இணைந்தார்

    முக ஸ்டாலின் முன்னிலையில், சிவகங்கை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் சுப.கருப்பையா இன்று திமுகவில் இணைந்தார்.



  • 10:03 (IST) 13 Mar 2021
    கமல்ஹாசன் வாழ்த்து செய்தி

    இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் வாழ்வை அவர்களின் மொழியிலேயே படம் பிடித்துக் காட்டியவர். சமூகநீதிக்கான உரையாடல்களில் ஓங்கி ஒலிக்கும் குரல் அவருடையது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.



  • 10:00 (IST) 13 Mar 2021
    தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்

    தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே டி ராகவன் தெரிவித்துள்ளார்.



  • 09:59 (IST) 13 Mar 2021
    எழுத்தாளர் இமையத்துக்கு துணை முதல்வர் வாழ்த்து

    25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தடம்பதித்து வரும் எழுத்தாளர் இமையம் அவர்களின் "செல்லாத பணம்" படைப்பிற்கு, "2020-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது" கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.



  • 09:21 (IST) 13 Mar 2021
    பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயம் ஆக்காதே- தொல். திருமாவளவன்

    வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவளிப்பதாக தொல். திருமாவளவன் தெரிவித்தார்.



  • 09:17 (IST) 13 Mar 2021
    2021 பிப்ரவரி மாதத்துக்கான நுகர்வோர் விலை குறையீடு

    2012=100 அடிப்படை மீதான அகில இந்திய நுகர்வோர் விலை குறையீடு மற்றும் 2021 பிப்ரவரி மாதத்துக்கான (தற்காலிக) ஊரக, நகர்ப்புறம் மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறீயிட்டை புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டது.

    சேகரிக்கப்பட்ட விலை விவரங்கள்.



  • 09:17 (IST) 13 Mar 2021
    அகில இந்திய நுகர்வோர் விலை குறையீடு வெளியானது

    2012=100 அடிப்படை மீதான அகில இந்திய நுகர்வோர் விலை குறையீடு மற்றும் 2021 பிப்ரவரி மாதத்துக்கான (தற்காலிக) ஊரக, நகர்ப்புறம் மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறீயிட்டை புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டது.

    சேகரிக்கப்பட்ட விலை விவரங்கள்.



  • 09:10 (IST) 13 Mar 2021
    பூர்வா கார்க் பா.ஜ.க.வின் டிவிட்டர் பதிவை மறு டிவிட்டர் செய்தார் - புதுச்சேரி சிபிஐ(எம்)

    புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி அர்னாப் டிவியை பரப்புகிறது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பூர்வா கார்க் பா.ஜ.க.வின் டிவிட்டர் பதிவை மறு டிவிட்டர் செய்தார். அதுவும் ஆதார பூர்வமாக கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை என புதுச்சேரி சிபிஐ(எம்) குற்றம் சாட்டியது.



  • 08:56 (IST) 13 Mar 2021
    திமுக தொண்டர்களுக்கு மு. க ஸ்டாலின் கடிதம்

    நேற்று, அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத திமுக நிர்வாகிகளுக்கு மு. க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், " அனைத்துத் தொகுதிகளிலும் நமது வேட்பாளர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். வெற்றியன்றி வேறில்லை என்கிற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். மாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும் வெற்றியை தலைவர் கலைஞர் நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்" என்று தெரிவித்தார்.



Mk Stalin Dmk Stalin Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment