Advertisment

Tamil News Today : ‘ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை’ - தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : ‘ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை’ - தெற்கு ரயில்வே விளக்கம்

Tamil News Today:  மறைந்த குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் -க்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதுமுள்ள அனைத்து கட்டிடங்களிலும் தேசிய கொடி  அரை கம்பத்தில் பறக்கும்.  இன்று, எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

ஹத்ராஸ் கூட்டு வல்லுறவு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். நேற்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினர். பின்பு, ராகுல் காந்தி தனது ட்விட்டரில், " ஹத்ராஸ் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்தேன். அவர்களின் வலியை புரிந்துகொண்டேன். இந்த கடினமான நேரத்தில்  அவர்களுடன் உறுதுணையாய் நின்று, நீதி கிடைக்க உதவுவேன் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன். உ.பி. அரசு, தான் விரும்பியதை எல்லாம் தன்னிச்சையாக செய்ய முடியாது. இப்போது முழு நாடும்  நாட்டின் மகளுக்கு நீதி கேட்டு நிற்கிறது" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று 5,622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில்  கொரோனா பாதிப்பால் 65 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,718 ஆக அதிகரித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:02 (IST)04 Oct 2020

    ‘ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை’ - தெற்கு ரயில்வே விளக்கம்

    ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை என்றும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தேர்வு மொழியை சரியாக தேர்வு செய்யுங்கள் என்றும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

    19:46 (IST)04 Oct 2020

    முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் நாளை சந்திப்பு

    முதல்வர் பழனிசாமி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை மாலை சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    19:02 (IST)04 Oct 2020

    முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பு

    சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்து வருகிறார். முதல்வர் பழனிசாமியுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் சந்தித்து வருகிறார்.

    18:50 (IST)04 Oct 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,489 பேருக்கு கொரோனா; 66 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,489 பேருக்கு கொரோனா பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 66 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:01 (IST)04 Oct 2020

    ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு திமுக எம்.பி டி.ஆர். பாலு கடிதம்

    திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ரயில்வே டிக்கெட் முன்பதிவு தகவல்களை ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் அளிக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்துள்ளார்.

    17:41 (IST)04 Oct 2020

    நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி; மருத்துவமனையில் அனுமதி

    நடிகை தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமான்னாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    17:14 (IST)04 Oct 2020

    ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நாளை போராட்டம்

    உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் நீதி கேட்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் மாநில மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேனுகோபால் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தை மாநில நிர்வாகிகள் ஏற்பாடு செய்வார்கள் என்றும் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

    16:15 (IST)04 Oct 2020

    வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு; பஞ்சாப்பில் காங்கிரஸ் பேரணி

    பஞ்சாப்பில் வேளாண் சடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    வேளான் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் டிராக்டர் பேர்ணி நடத்தி வருகின்றனர்.

    14:55 (IST)04 Oct 2020

    தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

    ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    14:25 (IST)04 Oct 2020

    கொரோனா, லாக்டவுனுக்கு இடையே இன்று யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு

    கொரோனா பரவல், லாக்டவுன் என்று நகர்ந்த கொண்டிருந்த நாள்களுக்கு இடையே, இன்று யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் மாஸ்க், சானிடைசர் உள்ளிட்டவை கட்டாயமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தனர். மேலும், வினாத் தாள் சற்று கடினமாகவே இருந்ததாகத் தேர்வு எழுதியவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

    14:05 (IST)04 Oct 2020

    உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு நாளை கனிமொழி பேரணி

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் 19 வயது பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. நாடு முடிவதிலுமிருந்து பல தலைவர்கள் இச்செயலுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது ராகுல் காந்தி காவல் துறையினரால் தாக்கப்பட்டார். இதற்கு தன் கண்டனத்தையும் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் கனிமொழி. மேலும், உத்தரப் பிரதேச மாநிலப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி நாளை மாலை 5 மணிக்கு திமுக மகளிர் அணி சார்பில் பேரணி நடத்தவிருப்பதாகக் கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

    13:06 (IST)04 Oct 2020

    நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 82,260 பேர் குணமடைந்துள்ளனர்

    குணமடைவோர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 82,260 பேர் குணமடைந்துள்ளனர்.

    நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 55 லட்சம் (55,09,966) ஆக உள்ளது. குணமடைவோர் வீதம் 84.13% -மாக உள்ளது. குணமடைந்தவர்களில் 75.44%   பேர், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

    13:04 (IST)04 Oct 2020

    கடந்த 24 மணி நேரத்தில் 1,000க்கும் குறைவானவேர்களே உயிரிழந்தனர்

    கடந்த 24 மணி நேரத்தில் 1,000க்கும் குறைவானவேர்களே உயிரிழந்தனர். இவர்களில் 82% பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். 

     

    13:03 (IST)04 Oct 2020

    கொவிட்டுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது

    தொடர்ந்து 13வது நாளாக, கொவிட்டுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

    12:44 (IST)04 Oct 2020

    ஹத்ராஸ் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது – எல்.முருகன் கண்டனம்

    உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் கூட்டு பாலியல் வல்லுறவால் கொலை செய்யப்பட்ட 19 வயது தலித் பெண்ணின் மரணத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று எல்.முருகன் தெரிவித்தார்.

    12:29 (IST)04 Oct 2020

    விசிக கண்டன ஆர்பாட்டம் 

    உபியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் பெண் மரணத்திற்கு நீதி கேட்டு விசிக கண்டன ஆர்பாட்டம் 

    12:04 (IST)04 Oct 2020

    திருப்பூர்குமரன் தியாகத்தை அவரது பிறந்தநாளில் நெஞ்சில் ஏந்துவோம் - மு. க ஸ்டாலின்

    உயிர் பிரியும் நிலையிலும் மூவண்ணக் கொடியை கீழே விடாது கையில் ஏந்தி வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து முழக்கமிட்ட, கொடி காத்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர்குமரன் தியாகத்தை அவரது பிறந்தநாளில் நெஞ்சில் ஏந்துவோம்; எல்லாவகை அடிமைத்தனத்தையும் எதிர்த்து உறுதியுடன் செயல்படுவோம் என்று திமுக தலைவர் முக.  ஸ்டாலின் தெரிவித்தார்.    

    12:02 (IST)04 Oct 2020

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10, 542 கனஅடியாக உள்ளது

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10, 542 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 97 புள்ளி எட்டு இரண்டு அடியாக உள்ளது.

    10:56 (IST)04 Oct 2020

    இந்தி பேசாத மக்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு - ராமதாஸ்

    தமிழ்நாட்டில் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவுக்கான குறுஞ்செய்திகள் கடந்த இரு நாட்களாக இந்தியில் அனுப்பப்படுகின்றன. இந்தி பேசாத மக்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும். இதை தொடர்வண்டித்துறை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.    

    மேலும்,  அலுவல் மொழிச் சட்டம்-1976, தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. இச்சட்டத்தின் ’சி’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் அனைத்து அலுவல் சார்ந்த அறிவிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதை மீறி இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் தொடர்வண்டி முன்பதிவு குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.  

    10:53 (IST)04 Oct 2020

    2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலூக்கான பிரச்சார பாடல்கள் - கே.எஸ் அழகிரி வெளியிட்டார்

    நடைபெறவுள்ள 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலூக்கான பிரச்சார பாடல்களை இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் கே.ஐ.மணிரத்தினம், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.முரளீதரன், பேர்ணாம்பட்டு சுரேஷ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    10:44 (IST)04 Oct 2020

    இயந்திரக் கோளாறு, இந்திய கடற்படை வீரர்கள் 2 பேர் பலி

    பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபட்ட 2 இந்திய கடற்படை வீரர் இயந்திரக் கோளாறு காரணமாக உயிரிழந்தனர்

    09:54 (IST)04 Oct 2020

    டொனால்டு டிரம்ப்பின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவர்கள் அறிக்கை

    கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    09:19 (IST)04 Oct 2020

    இந்தி அல்லாத மொழிகள் பேசும் மக்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி சேவையை அணுக வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன்

    இந்தி அல்லாத மொழிகள் பேசும் மக்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி சேவைகளை அணுக  தேவையான அவசர நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் எடுக்க வேண்டும்.

    அரசு இந்தியா இந்தியை திணிக்க மாட்டேன் என்று வாக்குறுதியளித்த போதிலும், நயவஞ்சகமான வழிகளில் மொழியைத் தொடர்ந்து திணிக்கிறது என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.  

    09:08 (IST)04 Oct 2020

    உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

    08:58 (IST)04 Oct 2020

    ஒரே வயது உடையவர்களால் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது

    தனிமனித இடைவெளியை பராமரிக்காதவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் கோவிட்-19 தொற்றுக்கு அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தமிழக அரசின் முதன்மை செயலர் டாக்டர் பி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    ' கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்பாக தமிழகம், ஆந்திரா மாநில அரசுகள் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இந்த ஆய்வு அமெரிக்காவின் அறிவியல் முன்னேற்ற சங்கத்தின் சயின்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது. நாட்டில் 40 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்நோய் அதிகமாக பரவுகிறது என்றும், ஒருவரால் பலருக்கு பரவுவதால் தான் அதிகமானோர் பாதிக்கப்படுவதாகவும், ஒரே வயது உடையவர்களால் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது" என்று அகில இந்திய வானொலி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது .

    08:51 (IST)04 Oct 2020

    இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம்- மத்திய அரசு அறிவிப்பு

    மறைந்த குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் -க்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதுமுள்ள அனைத்து கட்டிடங்களிலும் தேசிய கொடி  அரை கம்பத்தில் பறக்கும்.  இன்று, எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டது

    Tamil News Today:  தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

    அம்மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    உலகின் நீண்ட நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் திரு. நரேந்திரமோடி இமாச்சலப்பிரதேசத்தில் நேற்று திறந்து வைத்தார்.  அடல் சுரங்கப்பாதை என பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பேசிய அவர், நாட்டின் எல்லை கட்டமைப்பிற்கு இந்த அடல் சுரங்கப்பாதை புதிதாக வலு சேர்த்திருப்பதாக கூறினார்.  சர்வதேச தரத்திலான எல்லை கட்டமைப்பு வசதிகளுக்கு உதாரணமாக இந்த சுரங்கப்பாதை திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.

    Tamilnadu Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment