Advertisment

Tamil news updates: நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் - ஐ.பெரியசாமி

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil news updates: நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் - ஐ.பெரியசாமி

Tamil Nadu news live updates : சுதந்திரப் போராட்ட வீரர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பல மக்கள் நல போராட்டங்களில் முன்னின்றவர், அரசியலில் கறைபடியாதவர் என்ற பலராலும் போற்றபடுபவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா. கட்சியைத் தாண்டி அனைவராலும் மதிக்கபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அண்மையில் தனது 100 வயதை அடைந்ததை தொடர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவருக்கு தகைசால் விருது வழங்கப்பட்ட நிலையில், தனக்கு அளித்த விருது தொகையை அரசுக்கே திருப்பி வழங்கினார். இது தொடர்பான முழுமையான தகவல்களை படிக்க

Advertisment

வானிலை அறிவிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏனைய தமிழக பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வானிலையாக 36 டிகிரி செல்சியஸூம் குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும். நேற்று அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 4 செ.மீ மழையும், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 3 செ.மீ மழையும், நடுவட்டம், தேவலா, அவலாஞ்சி, கோவையின் சின்னக்கல்லாறு, சோலையாறு மற்றும் வால்பாறை பகுதிகளில் தலா 20 மி.மீ மழையும் பதிவானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:19 (IST) 29 Jul 2021
    டிஜிபி சைலேந்திர பாபுவை புகழ்ந்து பேசிய முதல்வர்

    தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும் என்று கூறினார். மேலும் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என உரையாற்றினார்.



  • 22:17 (IST) 29 Jul 2021
    டிஜிபி சைலேந்திர பாபுவை புகழ்ந்து பேசிய முதல்வர்

    தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும் என்று கூறினார். மேலும் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என உரையாற்றினார்.



  • 21:33 (IST) 29 Jul 2021
    இலங்கை அணிக்கு 82 ரன்கள் இலக்கு

    இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்ககள் எடுத்துள்ளது.



  • 20:48 (IST) 29 Jul 2021
    தடுமாறும் இந்திய அணி

    இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.



  • 20:00 (IST) 29 Jul 2021
    கடைசி டி20 போட்டி : இந்திய அணி பேட்டிங்

    இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசிடி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.



  • 19:40 (IST) 29 Jul 2021
    ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    சென்னை மாநகராட்சி சார்பில் கொளத்தூர் வில்லிவாக்கம் இடையே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று ஆய்வு செய்த நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன. நேரு கொளத்தூர் - வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலம் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.



  • 19:34 (IST) 29 Jul 2021
    ஊரடங்கு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.



  • 19:29 (IST) 29 Jul 2021
    நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் - ஐ.பெரியசாமி

    தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் "நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார்.



  • 18:23 (IST) 29 Jul 2021
    புதிய காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூறியதாவது: “புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். உங்கள் திறமைகளை மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால் அந்த நாடு சிறப்பாக இருக்கும். தமிழ்நாடு காவல்துறை நவீனமயமாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தான் முதலில் காவல்துறை கணினி மயமாக்கப்பட்டது. காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:22 (IST) 29 Jul 2021
    புதிய காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூறியதாவது: “புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். தமிழ்நாடு காவல்துறை நவீனமயமாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தான் முதலில் காவல்துறை கணினி மயமாக்கப்பட்டது. காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:20 (IST) 29 Jul 2021
    புதிய காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூறியதாவது: “புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். உங்கள் திறமைகளை மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால் அந்த நாடு சிறப்பாக இருக்கும். தமிழ்நாடு காவல்துறை நவீனமயமாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தான் முதலில் காவல்துறை கணினி மயமாக்கப்பட்டது. காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:55 (IST) 29 Jul 2021
    பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

    பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், 2012 முதல் 2021ஆம் ஆண்டு வரை பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.



  • 17:53 (IST) 29 Jul 2021
    சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களை கட்ட எந்த மதக்கடவுளும் கேட்பதில்லை - ஐகோர்ட்

    சென்னை ஓட்டேரி பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து கோயில் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களை கட்ட எந்த மதக்கடவுளும் கேட்பதில்லை. மதத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே என்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.



  • 17:11 (IST) 29 Jul 2021
    டெல்லியில் மம்தா பானர்ஜி - திமுக எம்பி கனிமொழி சந்திப்பு

    டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை திமுக எம்.பி கனிமொழி சந்தித்துள்ளார்.

    இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 16:59 (IST) 29 Jul 2021
    உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர்: வெளிப்படைத் தன்மை சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் - ஐகோர்ட்

    உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் கோரும் போது, வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளைப் பின்பற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். டெண்டரில் முறைகேடுகளைத் தவிர்க்க விதிகளை வகுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:51 (IST) 29 Jul 2021
    கீழடி - சிவகலயில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க கோரி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

    கீழடி மற்றும் சிவகல பகுதியில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை உருவாக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.



  • 16:48 (IST) 29 Jul 2021
    திமுகவில் இணைகிறார் அதிமுகவின் முன்னாள் எம்.பி. பரசுராமன்; ஸ்டாலினை சந்திக்க தேதி கேட்டு கடிதம்

    திமுகவில் இணைகிறார் அதிமுகவைச் சேர்ந்த தஞ்சை முன்னாள் எம்.பி. பரசுராமன்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தேதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். பரசுராமன் 2014-19 ஆண்டில் தஞ்சாவூர் தொகுதியில் எம்.பி.யாக பதவிவகித்துள்ளார்.



  • 16:26 (IST) 29 Jul 2021
    சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை

    தமிழகத்தில் சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.



  • 16:21 (IST) 29 Jul 2021
    பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கவலைக்கிடம்

    சின்னத்திரை சீரியல்கள் மூலமாக பிரபலமடைந்த நடிகர் வேணு அரவிந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 15:59 (IST) 29 Jul 2021
    நீர்வழிப் போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது

    மாநிலங்களவையில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் இந்த அமளிக்கிடையே உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.



  • 15:55 (IST) 29 Jul 2021
    நடப்பு நிதியாண்டில் 27% இட ஒதுக்கீடு

    இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 1,500 மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளில் பயன்பெறுவார்கள் என்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு சுமார் 2,500 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10% இட ஒதுக்கீடு ஒதுக்கப்படும்.



  • 15:09 (IST) 29 Jul 2021
    சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருப்பதால் உத்தராகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



  • 14:57 (IST) 29 Jul 2021
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 8-வது நாளாக முடக்கம்

    பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 8-வது நாளாக முடக்கம் செய்யப்பட்டது.



  • 13:44 (IST) 29 Jul 2021
    வயிறு எரிவதால் அகழாய்வுக்கு எதிராக எழுதுகிறார்கள் - அமைச்சர் தங்கம் தென்னரசு

    தமிழின் தொன்மையால் சிலருக்கு வயிறு எரிவதால் அகழாய்வு தேவையற்ற்து என சிலர் அகழாய்வுக்கு எதிராக எழுதுகிறார்கள். அவர்களுக்கு வயிறு எரியட்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.



  • 13:42 (IST) 29 Jul 2021
    பயிர் காப்பீடு; மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

    பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை முன்பிருந்த படியே மாற்றியமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 13:31 (IST) 29 Jul 2021
    புதிய நாடாளுமன்றத்தை கட்ட இதுவரை ரூ. 238 கோடி செலவாகியுள்ளது - மத்திய அரசு

    புதிய நாடாளுமன்றத்தை கட்டுவதற்கான திட்ட செலவு ரூ. 971 கோடியில் இதுவரை ரூ. 238 கோடி செலவாகியுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதேபோல் செண்ட்ரல் விஸ்டா மேம்பாட்டு திட்டத்திற்கான திட்ட செலவு ரூ. 608 கோடியில் இதுவரை ரூ.63 கோடி செலவாகியுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 13:31 (IST) 29 Jul 2021
    புதிய நாடாளுமன்றத்தை கட்ட இதுவரை ரூ. 238 கோடி செலவாகியுள்ளது - மத்திய அரசு

    புதிய நாடாளுமன்றத்தை கட்டுவதற்கான திட்ட செலவு ரூ. 971 கோடியில் இதுவரை ரூ. 238 கோடி செலவாகியுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதேபோல் செண்ட்ரல் விஸ்டா மேம்பாட்டு திட்டத்திற்கான திட்ட செலவு ரூ. 608 கோடியில் இதுவரை ரூ.63 கோடி செலவாகியுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 13:16 (IST) 29 Jul 2021
    கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க மறுப்பு

    பிளஸ் 2 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக எழுதும் தேர்வின் முடிவுகள் வரும் வரை கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



  • 13:13 (IST) 29 Jul 2021
    அர்ச்சகர் நியமனத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசு

    குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆகம விதிகளை மீறி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசி வருவதாக ஸ்ரீதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.



  • 12:51 (IST) 29 Jul 2021
    கைத்தறித் துறையை ஊக்குவிக்க மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா?- தம்பிதுரை

    கைத்தறித் துறையை ஊக்குவிக்க மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா? எனவும், வேளாண் துறைக்கு அடுத்தபடியாக கைத்தறித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் அதிமுக எம்.பி., தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.



  • 12:50 (IST) 29 Jul 2021
    ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

    மற்றொருவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது



  • 12:48 (IST) 29 Jul 2021
    பாலியல் வழக்கு; சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி கடிதம்

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி தமிழக உள்துறையிடம் சி.பி.சி.ஐ.டி கடிதம் எழுதியுள்ளது.



  • 10:44 (IST) 29 Jul 2021
    கேரளாவில் முழு ஊரடங்கு

    கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை அன்று கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:22 (IST) 29 Jul 2021
    ஆபரண தங்கத்தின் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 184 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4530க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 36,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • 10:15 (IST) 29 Jul 2021
    கிஷோர் கே சுவாமி மீது குண்டாஸ் உறுதியானது

    கிஷோர் கே சுவாமி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்து அறிவித்தது அறிவுரைக்கழகம்.



  • 10:09 (IST) 29 Jul 2021
    9 முதல் 12ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு பள்ளி திறப்பு எப்போது?

    9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து, நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவுகள் மேற்கொள்ளப்படும். முதல்வரின் உத்தரவுக்கு இணங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.



  • 09:50 (IST) 29 Jul 2021
    பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் மீது காவல்துறை வழக்கு

    ஊரடங்கு விதிகளை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



  • 09:45 (IST) 29 Jul 2021
    செரோ சர்வே ஆய்வு முடிவுகள்

    தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி 69.2% ஆக உள்ளது என்று செரோ சர்வே முடிவுகள் அறிவித்துள்ளது.



  • 09:42 (IST) 29 Jul 2021
    காலிறுதிக்கு முன்னேறினார் சதீஷ்குமார்

    டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 91 கிலோ எடைப் பிரிவில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ பிரௌனை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் சதீஷ் குமார்.



  • 09:06 (IST) 29 Jul 2021
    வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக்கழக சட்டங்களில் திருத்தம் அறிவிப்பு

    வங்கிகளின் வைப்புத் தொகை காப்பீடு திட்டம் மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் வங்கி வைப்பு நிதி வாடிக்கையாளர்கள் வங்கி திவாலானாலோ தடைக்கு உள்ளானாலோ 90 நாட்களுக்குள் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு பெறுவார்கள் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



  • 09:01 (IST) 29 Jul 2021
    வில்வித்தை போட்டியில் அதானுதாஸ் வெற்றி

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் அதானுதாஸ். கொரிய வீரர் ஓ ஜின்யெக்கை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார் அவர்.



  • 08:26 (IST) 29 Jul 2021
    6 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா

    சுபாஷ் கபூர் மூலம் சட்ட விரோதமாக ஆஸ்திரேலிய நாட்டுக்கு விற்பனை செய்யப்பட்ட 14 கலைப் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலிய அரசு. கொண்டு வரப்படும் கலைப் பொருட்களில் 6 சிலைகளும் அடங்கும்.



  • 08:21 (IST) 29 Jul 2021
    Olympic updates

    டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து.



  • 08:21 (IST) 29 Jul 2021
    ஹாக்கி போட்டி

    இன்று இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவை எதிர்த்து களம் இறங்கியது. காலிறுதி தகுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.



  • 08:20 (IST) 29 Jul 2021
    யாஷிகா ஆனந்த் கைது செய்யப்பட வாய்ப்பு

    அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகாவிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தைக் கைப்பற்றிய காவல்த்துறை, அவரை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



  • 08:20 (IST) 29 Jul 2021
    பெட்ரோல் டீசல் விலை

    சென்னையில் 12வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை தொடர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



Tamil Nadu Live Updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment