Advertisment

Tamil News Highlights: திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

Today's Tamil News: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

Today Tamil News : ஜன. 4 முதல் 13 வரை 2.02 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 5 திட்டங்களை தொடங்கி வைப்பது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 2 நாள் பயணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார். இதில் அமித்ஷாவுடனான சந்திப்பில் தமிழக தேர்தலில், பாஜகவுக்கான தொகுதிகள், கூட்டணியில் பிறகட்சிகள் குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்களை நடைபெற்று வரும் நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஏராளமாக நிலங்களில் நெல், கடலை, சம்மங்கி உள்ளிட்ட பயிர்கள் மழையில் மூழ்கியது. இதனால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Tamil News : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.



























Highlights

    20:36 (IST)18 Jan 2021

    அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் ரயில் 22ம் தேதி முதல் இயக்கப்படுகிறது

    அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 22ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும்: தெற்கு ரயில்வே

    20:30 (IST)18 Jan 2021

    துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை போராட்டம்

    சென்னை, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை  இணையவழி பதாகைப் போராட்டம். 

    20:27 (IST)18 Jan 2021

    8000 யூரோக்களை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல்

    சென்னையில் இருந்து துபாய் செல்வதற்காக வந்த பயணி ஒருவரிடம் ரூ.7.09 லட்சம் மதிப்புள்ள 8000 யூரோக்களை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    20:22 (IST)18 Jan 2021

    கல்பாக்கம் அணுமின் நிலையத் தேர்வுகளை தேர்வினை தமிழகத்தில் நடத்த வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

    கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளை தமிழக இளைஞர்களுக்கே கிடைக்க மத்திய-மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்று திமுக இளைஞரணி அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.   

    தனது ட்விட்டரில், "கல்பாக்கம் அணுமின் நிலைய ஃபிட்டர்-வெல்டர் பணிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கான தேர்வுகளை மும்பையில் மட்டும் நடத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இதற்காக 2 முறை மும்பை செல்ல வேண்டுமென்ற அறிவிப்பாணையை படித்ததுமே இப்பணியே வேண்டாமென தமிழக இளைஞர்கள் விலகும் சூழல் உருவாகியுள்ளது ITI & பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட இப்பணிகளுக்கான பயிற்சிக்கு எழுத்து தேர்வோடு நேர்காணலும் நடத்தப்படுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. இத்தேர்வினை தமிழகத்தில் நடத்துவதோடு, இந்தப்பணிகள் தமிழக இளைஞர்களுக்கே கிடைக்க மத்திய-மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

    20:18 (IST)18 Jan 2021

    டெல்லியில் அமித்ஷா – முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை தொடங்கியது

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று புதுடெல்லி புறப்பட்டார். முதல் கட்டமாக, இன்று இரவு 7.30 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். 

    இந்த சந்திப்பின் போது, சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனைகள்  மேற்கொள்ளலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.          

    19:25 (IST)18 Jan 2021

    பழைய பஸ்பாஸ் இருந்தாலே பேருந்துகளில் பயணிக்கலாம் - அமைச்சர்

    நாளை பள்ளிக்கு வரும் மாணவர்கள் பழைய பஸ்பாஸ் இருந்தாலே பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.    

    19:21 (IST)18 Jan 2021

    நிர்மலா சீதாராமன் மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை

    மத்திய அரசின் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    18:09 (IST)18 Jan 2021

    குணமடைவோர் சதவீதம் 96.59 சதவீதமாக  உயர்ந்துள்ளது

    தேசிய அளவில் கோவிட்-19 நோயிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே இரண்டு லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து குணமடைவோர் சதவீதம் 96.59 சதவீதமாக  உயர்ந்துள்ளது.  

    18:07 (IST)18 Jan 2021

    வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மாட்டோம் - மத்திய வேளாண்துறை அமைச்சர்

    வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது என்பதை தவிர, வேறு எதைப்பற்றி பேச விரும்பினாலும் விவசாயிகள் அரசிடம் எடுத்துரைக்கலாம் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

    நாளை நடைபெறவுள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பிரிவு வாரியாக விவாதம் நடத்த முன்வருமாறு போராடும் விவசாயிகளை அவர் வலியுறுத்தினார்.

    18:05 (IST)18 Jan 2021

    சட்டமன்றத் தேர்தலிலும் மோடி எதிர்ப்பு அலை வெளிப்படும் – கே. எஸ் அழகிரி

    தமிழ் மக்கள் மோடி மீது கொண்ட எதிர்ப்பை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெளிப்படுத்துவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்தார்.    

    17:33 (IST)18 Jan 2021

    சமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்து

    பொதிகை உள்ளிட்ட மாநில மொழித் தொலைக்காட்சிகளில் நாள்தோறு சமஸ்கிருத செய்திக் தொகுப்பை 15 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்"  என்று  மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், " மனுதாரருக்கு தேவையில்லை எனில் டிவியை அணைத்து விடலாம், இல்லையெனில் வேறு சேனல் மாற்றலாம். இதனைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன" என்று கூறி வழக்கை முடித்தி வைத்தனர்.

    15:52 (IST)18 Jan 2021

    திமுக கூட்டணியில் இணைந்தால் மாற்றம் வரும் - கார்த்திக் சிதம்பரம்

    மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் “திமுக கூட்டணியில் இணைந்தால் மாற்றம் வரும் என்று“ காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    15:49 (IST)18 Jan 2021

    உள்துறை அமைச்சரை சந்திக்கும் முதல்வர்

    இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்.

    15:02 (IST)18 Jan 2021

    வெற்றிதான் இலக்கு :துணைமுதல்வர் ஓபிஎஸ்

    1.50 கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில் அண்ணன்-தம்பி பிரச்னைகளை பேசி தீர்க்கலாம் வெற்றிதான் இலக்கு என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

    15:01 (IST)18 Jan 2021

    குழந்தை கடத்தல் வழக்கு - 9- பேர் கைது

    மும்பையில், பச்சிளம் குழந்தைகளை 3 லட்சத்துக்கு விற்ற கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    14:59 (IST)18 Jan 2021

    சமத்துவ மக்கள் கட்சியின் புதிய கொடி

    சமத்துவ மக்கள் கட்சியின் புதிய கொடியை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று அறிமுகம் செய்தார்

    14:58 (IST)18 Jan 2021

    அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    பள்ளிகளில் பொதுத்தேர்வு தேதிகளை முதல்வர் அறிவிப்பார்" என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

    14:54 (IST)18 Jan 2021

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து - தீர்மானம்

    புதுச்சேரியில், சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கூடிய நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்து. 

    13:50 (IST)18 Jan 2021

    அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு - பன்னீர்செல்வம்

    ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு  என தெரிவித்துள்ளார்.

    13:48 (IST)18 Jan 2021

    கமல்ஹாசனால் எம்ஜிஆர் ஆக முடியாது - கார்த்தி சிதம்பரம்

    சசிகலா வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுகவும் அவரை தலைவியாக ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கமல்ஹாசனால் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும், தேர்தல் வரும்போது எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவது இயல்பே என்றும் தெரிவித்துள்ளார்.

    13:46 (IST)18 Jan 2021

    திமுகவின் 2ஜி ஊழலை என்னவென்று சொல்வது - சரத்குமார்

    தமிழகத்தில் மிகப்பெரிய தலைவர்கள் மறைந்த பிறகு, முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக மீது ஊழல் புகார் கொடுக்கும் திமுகவின் 2ஜி ஊழலை என்னவென்று சொல்வதுஎன கேள்வி எழுப்பியுள்ளார்.

    13:40 (IST)18 Jan 2021

    வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    13:38 (IST)18 Jan 2021

    அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையில்லை

    அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை, புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையில்லை என தெரிவித்துள்ளது.

    12:08 (IST)18 Jan 2021

    ஜன.21ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜன.21ம் தேதி நடைபெறும் என்றும், கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகள் அறிவித்துள்ளார்.

    12:05 (IST)18 Jan 2021

    மாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம்

    தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம்" என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    12:04 (IST)18 Jan 2021

    ரஜினிக்காக யாரும் வரவில்லை - மூத்த பத்திரிக்கையாளர் கருத்து

    ரஜினி மக்கள் மன்றத்திற்கு ரஜினிக்காக யாரும் வரவில்லை ... அரசியல் நோக்கத்தோடு தான் வந்தார்கள் " என்று மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

    12:01 (IST)18 Jan 2021

    சசிகலாவுக்கு ஜனவரி 27, இளவரசிக்கு பிப.5, அப்போ சுதாகரன்?

    சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற விகே சசிகலா வரும் ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ரூ.10 கோடி அபராதம் செலுத்தாததால் சுதாகரன் விடுதலையில் தாமதமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்து.

    11:50 (IST)18 Jan 2021

    முகமது சிராஜ் 5 விக்கெட்

    இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில், 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    11:28 (IST)18 Jan 2021

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அப்டேட்

    விரைவில் தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கொரோனா தடுப்புவிதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11:26 (IST)18 Jan 2021

    மழைநீரில் மூழ்கி சிறுமி பலி

    திருச்சி ஏர்போர்ட் அருகே வீடுகட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    11:25 (IST)18 Jan 2021

    குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

    நீதிபதிகள் நியமனம் குறித்து விமர்சித்த குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

    11:24 (IST)18 Jan 2021

    கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    11:22 (IST)18 Jan 2021

    பிரிஸ்பேன் டெஸ்ட் அப்டேட்

    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில், 261 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    10:59 (IST)18 Jan 2021

    ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை

    publive-imagepublive-image

    10:03 (IST)18 Jan 2021

    கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

    தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர் மூலம் கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துளார்.

    10:01 (IST)18 Jan 2021

    அதிமுக வைகைச்செல்வன் பேட்டி

    பிக்பாஸ் நிகழ்ச்சியில், "ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள்கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது" என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    09:59 (IST)18 Jan 2021

    கஞ்சா பதுக்கிய வழக்கில் திமுக, அமமுக பிரமுகர்கள் கைது

    இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக, அமமுக பிரமுகர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    09:55 (IST)18 Jan 2021

    அழுகிய நிலையில் ஆண் சடலம்

    வாணியம்பாடிஅருகே சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  கொலையாளி கண்டறிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    09:52 (IST)18 Jan 2021

    அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

    தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    News Highlights : ஆதிதிராவிடர், தொழிலாளர் மற்றும் பல மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் 15 கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்க கோரி 8வது நாளாக புதுச்சேரி மாநில சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி அவர்கள் நடத்திவரும் உள்ளிருப்பு அறவழி போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் கலந்துகொண்டார்.

    அதிமுகவை வெல்லும் சக்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  சென்னையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " தமிழகத்தில் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தால் தான் கட்சி நடத்த முடியும்,ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துகிறார் ஸ்டாலின் " என்றும் தெரிவித்தார்.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment