Tamil Nadu news today updates: தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.09க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.15 ஆகும். நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது

தமிழ்நாடு அரசு

Tamil Nadu news today updates:  பிலிப்பீன்சு, ஜப்பான் போன்ற நாடுகளோடு இருதரப்பை உறவை பலப்படுத்துவதற்காக இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று காலை ஏழு நாள் அரசு சுற்றுப்பயனமாக சென்றார் . ஐந்து நாள் பிலிப்பீன்சிலும், இரண்டு நாள் ஜப்பானிலும் பல முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘பிகில்’ படத்தின் மீது வழக்கு!!

 

 

கடந்த 15-ந் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்று, முதலாவது  அணு உலையின் வால்வில் ஏற்பட்ட பழுதை சரி செய்யப்பட்டதால் மீண்டும் உற்பத்தி பணிகள் தொடங்கின.

மேலும், இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை  பின் தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

21:15 (IST)17 Oct 2019
தீர்ப்புகளை விட இங்கு எப்போதும் நீதிபதிகளே விமர்சிக்கப்படுகின்றனர் - செல்லமேஸ்வரர்

தீர்ப்புகளை விட இங்கு எப்போதும் நீதிபதிகளே விமர்சிக்கப்படுகின்றனர்.  நீதியை பாதுகாக்க நீதித்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே போராட வேண்டுமென்றில்லை, மக்கள் எல்லோரும் போராட வேண்டும். நீதித்துறையை கட்டுக்குள் வைக்க அரசுகள் எப்போதுமே முயற்சியை மேற்கொண்டு தான் வந்திருக்கின்றன - முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி செல்லமேஸ்வர் 

20:35 (IST)17 Oct 2019
ராஜிவ்காந்தி கொலை இந்திய உளவுத்துறைக்கு மிகப்பெரிய தோல்வி - சீமான்

ராஜிவ்காந்தி கொலை சம்பவம் இந்திய உளவுத்துறைக்கு மிகப்பெரிய தோல்வியாகும்

ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான் 

19:52 (IST)17 Oct 2019
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி வழக்கு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு. நாங்குநேரி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.2,000 வழங்க முடிவு செய்துள்ளனர்.

வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது

19:41 (IST)17 Oct 2019
உள்ளாட்சி தேர்தல் - கட்சிகளின் சின்னங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுப்பிரிவுக்கான சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

19:39 (IST)17 Oct 2019
ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் - ஓ.பி.எஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி நடுவர் மன்றத்தை கலைப்போம் என ராகுல் காந்தி சொல்வது தமிழகத்திற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம். தமிழகத்திற்கு ராஜ துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி தான் நாங்குநேரியில் போட்டியிடுகிறது. ஏழை குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆடு வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நாங்குநேரியில் பிரசாரம்.

19:37 (IST)17 Oct 2019
இலவச அரிசி, வேட்டி சேலை திட்டங்களை கிரண்பேடி தடுக்கிறார் - ஸ்டாலின்

இலவச அரிசி, வேட்டி சேலை போன்ற திட்டங்களை தடுத்து நிறுத்துகிறார் கிரண்பேடி கிரன்பேடி - காமராஜர் நகரில் ஸ்டாலின் பிரசாரம்.

கவர்னரை எதிர்த்து போராடுகிற முதல்வராக உள்ளார் நாராயணசாமி. 10 பேனர்களுக்கு அனுமதி வாங்கிக்கொண்டு 100 பேனர்கள் வைக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது - ஸ்டாலின்

18:49 (IST)17 Oct 2019
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு. ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசும் அறிவிப்பு - - தமிழக அரசு

18:41 (IST)17 Oct 2019
சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி

அக்.24ல் சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு

சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது

18:39 (IST)17 Oct 2019
அக்.25 பிகில் ரிலீஸ்

இன்று மாலை 6 மணிக்கு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து #BigilReleaseDate என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினர் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது அக்டோபர் 25-ம் தேதி அன்று பிகில் திரைப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்தில் பிகில் படத்தின் தணிக்கை முடிவடைந்து, தணிக்கையில் இந்தப் படத்துக்கு யு/எ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதில் படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:45 (IST)17 Oct 2019
புதிய பெட்ரோல் நிலையங்கள்!

தமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் நிலையங்கள் திறக்க தடை இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  டெண்டர் அறிவிப்புக்கான தடையை முழுமையாக  நீக்கி உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சிவஞானம் - தாரணி  ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கினர். 

17:15 (IST)17 Oct 2019
பொதுவிடுமுறை அறிவிப்பு!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் காரணமாக அந்த 2 தொகுதிகளிலும் பள்ளி, கல்லூரி அரசு நிறுவனங்களுக்கு பொது விடுமுறை. 

17:13 (IST)17 Oct 2019
முதல்வர் அறிவிப்பு!

உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த தமிழக காவல்துறையினர் 25 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி தலா 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். #TNGovt pic.twitter.com/f8JXFIOHm0— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 17, 2019

17:12 (IST)17 Oct 2019
தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி-யை நியமிக்க பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி-யை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை  செய்துள்ளது.  பாட்னா நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹி-யை சென்னைக்கு மாற்ற  கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. 

17:02 (IST)17 Oct 2019
நீட் தேர்வு: - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணை குறைக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் மத்திய - மாநில  அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

16:38 (IST)17 Oct 2019
ரஜினிகாந்த வைரல் வீடியோ!

உத்தரகாண்ட் மாநிலம் பாபாஜி குகை பகுதியில், தமது சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். இமயமலைக்கு 10 நாள் ஆன்மீக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரகாண்ட் மாநிலம் துவாராகாட் நகரில் உள்ள பாபாஜி குகை பகுதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். இந்நிலையில்,  பாபாஜி குகையின் அருகே தமது சொந்த செலவில் அமைத்த ஆசிரமத்தை, இன்று அவர் பார்வையிட்டார். 

16:36 (IST)17 Oct 2019
ப. சிதம்பரம் ஆஜர்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டார்.   

15:29 (IST)17 Oct 2019
லலிதா ஜூவல்லரி நகைகள் மீட்பு

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவாரூர் முருகன், பெங்களூரு கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்பு சரணடைந்தார். முருகன் பதுக்கி வைத்திருந்த நகைகளை எல்லாம் பெங்களூரு  போலீசார் கைப்பற்றி, அது லலிதா ஜூவல்லரியை சேர்ந்தது தான் என்பதை தற்போது உறுதி செய்துள்ளனர்.  

15:12 (IST)17 Oct 2019
குருபூஜை பேனருக்குத் தடை

அக்டோபர் 30ம் தேதி வருடம் தோறும்  தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும். இந்த வருட  குருபூஜையைக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருட  தேவர் ஜெயந்தியில் பேனர்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளதாகவும்  அறிவிப்பு  

14:03 (IST)17 Oct 2019
பிகில் பட சர்ச்சை:

K.P செல்வா என்பவர் ‘பிகில்’ கதை தனது  ஸ்கிரிப்ட்டுடன் முற்றிலும் ஒத்திப்போகிறது, இது குறித்த முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும்,  விசாரணை முடியும் வரை 'பிகில்'படம் வெளியாவதை தற்காலிகமாக தடை செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதற்கான தீர்ப்பை ஒத்திவைப்பதாக தற்போது அறிவித்துள்ளனர்.       

13:00 (IST)17 Oct 2019
தா.பாண்டியன் கருத்து

கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க  விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், மோடியின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களும் கானல் நீராய் தான் உள்ளது என்றார். பெரும் ஆரவாரத்தோடு வந்த திட்டங்கள் எந்த வகையிலும், யாருக்கும் பலனளிக்கவில்லை என்றும் தனது கருத்தை தெரிவித்தார்.       

12:13 (IST)17 Oct 2019
உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசும் போது, அதிமுக கடந்த 8 வருடமாக ஆட்சியில் இருந்து வருகின்றது.  இந்த எட்டு வருடத்தில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், விலைவாசியைக் கட்டுபடுத்த அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கைகளையும்  எடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.   

11:42 (IST)17 Oct 2019
நீட் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

நீட் தேர்வில் ஆள்மாராட்டம் செய்ததாக உதித் சூர்யா மற்றும் அவரின் பெற்றோர் தமிழக சிபிசிஐடி   கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், மாணவின் பெற்றோர் தான் உண்மையான குற்றவாளி என்ற கருத்தையும் உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு சொல்லியிருந்தது. இந்நிலையில், இன்று உதித் சூர்யாவுக்கு நிபந்தனைக் கூடிய  ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.        

11:35 (IST)17 Oct 2019
தினகரன்,சசிகலாவிற்கு கட்சியில் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான முடிவை அதிமுக கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சில நாட்களுக்கு முன்பு  கருத்து தெரிவித்தார். இன்று, அதிமுக வின் 48 வது துவக்க நாளில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தினகரனுக்கும் ,சசிகலாவிற்கும் மீண்டும் அதிமுக  கட்சியில் இணைக்கப் படமாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.  

11:25 (IST)17 Oct 2019
பேரறிவாளன் மனு ஏற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தன்மீதான குற்றங்கள் நிரூபிக்கப் படாததால் , தனது  ஆயுள் தண்டனையை ரத்து செய்யவேண்டும்  என்று பேரறிவாளன் தாக்கல் செய்த  மனுவை சென்னை உச்சநீதிமன்றம்  விசாரணைக்கு எடுத்துக் கொண்டது .  இந்த  மனுக்கான விசாரணை வரும்  நவம்பர் 5ம் தேதி முதல் தொடங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர் .   

11:18 (IST)17 Oct 2019
சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்:

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வரும் நாம் தமிழர் கட்சி சீமான் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஒ.எஸ் மணியன் தெரிவித்தார்.   

11:10 (IST)17 Oct 2019
அமைச்சார் ஜெயக்குமார் கருத்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியபடி, "உலகம் உள்ளவரை அதிமுக  நிலைத்து நிற்கும்" என்று  மீன்வளத்துறை அமைச்சார் ஜெயக்குமார் தெரிவித்தார்.  தமிழகத்தில் , அதிமுகவைப் போல்  வேறு எந்த இயக்கங்களும் மக்களை முதன்மை படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.  

11:04 (IST)17 Oct 2019
அதிமுக 48வது துவக்க விழா:

அதிமுக கட்சி துவங்கி இன்றோடு ( அக்டோபர் 17 ) 47ஆண்டுகள் முடிவடைகின்றன. 48 ஆண்டு துவக்கத்தை அதிமுக கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாமாக கொண்டாடி வருகின்றனர். இன்று, கட்சி தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு முதல்வரும், துணை முதல்வரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

10:52 (IST)17 Oct 2019
பருவமழை எதிரொலி - அயனப்பாக்கத்தில் காலவாய் உடைப்பு

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததால், சென்னையில் இன்று அதிகாலை 04:30 மணியில் இருந்தே கனமழை  பெய்து வருகிறது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்தது.   இந்நிலையில் , சென்னை அயனப்பாக்கம் கால்வாய் உடைந்தால் , அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன.   பெரும் அவதிக்கு உள்ளான  மக்கள், போதுமான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வில்லையென குற்றம் சாட்டினர்.    

10:44 (IST)17 Oct 2019
சர்தார் படேல் ஒற்றுமை யாத்திரை - வேட்டி, சட்டை அணிய வலியுறுத்தல்

வரும் அக்டோபர் 31ம் தேதி சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் , பொது மக்களும் வேஷ்டி,சட்டை மற்றும் துண்டோடு கலந்து கொள்ள அறிவுறுத்த படுகின்றனர் என்று பாஜக மாநில மையக் குழு கேட்டுக் கொண்டது .    

10:34 (IST)17 Oct 2019
ஸ்டாலின் அசுரனுக்கு வாழ்த்து

திமுகவின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று அசுரன் படம் குறித்த தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்தார். படம் அல்ல பாடம் என்று அசுரன் படத்தை பற்றிய கருத்தை ஒற்றை வார்த்தையில் சொல்லினார் . மேலும் , பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து கதை சொல்லப்பட்டிருக்கும் விதம், சாதி வன்மத்தை கேள்வி கேட்கப்பட்ட துணிச்சல் போன்றவைகளுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.  

Tamil Nadu news today updates : ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று  கைது செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்காக மரங்கள் வெட்டுவது நடைமுறையில் இருக்க கூடியது தான், இதற்கான மாற்று மரங்கள் நடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Web Title:

Tamil nadu news live updates chennai weather crime politics monsoon arrives in tamilnadu ayodhya case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close