Advertisment

Tamil News Today : ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: கைதான எஸ்.ஐ ரகு கணேஷ் சிறையில் அடைப்பு

Tamil Breaking News: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today : ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: கைதான எஸ்.ஐ ரகு கணேஷ் சிறையில் அடைப்பு

Tamil News Live: ஜெயராஜ் - பென்னிக்ஸ்  மரணம் தொடர்பாக சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில்,  இந்த வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்  முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்

Advertisment

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு, பாதுகாப்பாக ரத்தம் ஏற்றுவது தொடர்பான இரண்டாவது இடைக்கால வழிகாட்டு நெறிகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய இரத்தம் ஏற்றுதல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இதனை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இந்தியாவில் இதுவரை 3,34,821 நோயாளிகள்  கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 59.07 சதவீதத்தை எட்டியுள்ளது.  தற்போது 2,15,125 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதட்டமான சூழலில், 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பதைத் தாண்டி, சீனாவிற்கு பொருத்தமான பதிலடி கொடுக்க வேண்டும், என்று மேற்குவங்க  முதல்வர் மம்தா பேனர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  இது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள்  ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்குத் தடுப்பு மருந்து அவசியமாகத் தேவைப்படும் நிலையில், அது குறித்தத் திட்டமிடுதல் மற்றும் தயார்நிலை பற்றி ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான விரிவான திட்டமிடுதல் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today Updates: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:08 (IST)01 Jul 2020

    சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை உறுதி - அமைச்சர் சி.வி.சண்முகம்

    சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவதே அரசின் நிலைப்பாடு. இதில் தொடர்புடைய அனைவருக்கு தண்டை உறுதி என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    21:17 (IST)01 Jul 2020

    சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்; கொலை வழக்காக மாற்றம்; எஸ்.ஐ கைது

    சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் தந்தை மகன் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் நிலைய எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    21:11 (IST)01 Jul 2020

    முழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

    முழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    19:39 (IST)01 Jul 2020

    பிரியங்கா காந்திக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்பு ரத்து; வீட்டை காலி செய்ய மத்திய அரசு நோட்டீஸ்

    காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு புது டெல்லியில் லோதி எஸ்டேட்டில் ஒதுக்கப்பட்ட 6பி வீடு ஜூலை 1-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிரியங்கா காந்தி அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    18:31 (IST)01 Jul 2020

    சென்னையில் ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா உறுதி

    சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60,533ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தினசரி கொரோனா தொறு எண்ணிக்கை 3வது நாளாக 2,000ஐ கடந்து பதிவாகியுள்ளது.

    18:07 (IST)01 Jul 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:22 (IST)01 Jul 2020

    நெடுஞ்சாலை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை - நிதின் கட்கரி

    மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நெடுஞ்சாலை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை. அது கூட்டுத் திட்டமாக இருந்தாலும் நெடுஞ்சாலை பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை” என்று தெரிவித்துள்ளார்.

    16:54 (IST)01 Jul 2020

    என்.எல்.சி. 2வது அனல்மின் நிலைய முதன்மை பொதுமேலாளர் சஸ்பெண்ட்

    நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்தில், என்.எல்.சி. 2வது அனல்மின் நிலைய முதன்மைபொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    16:47 (IST)01 Jul 2020

    என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

    என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. என்.எல்.சி. விபத்தில் படுகாயமடைந்த நிரந்தர தொழிலாளி சிவக்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து என்.எல்.சி. தலைவர் ராகேஷ்குமாருடன் தொழிற்சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    15:43 (IST)01 Jul 2020

    உதயநிதி ட்வீட்!

    மு.க.ஸ்டாலின் முயற்சியில் இணைந்த ரஜினிகாந்துக்கு நன்றி என்று  நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

    14:45 (IST)01 Jul 2020

    சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தகவல்!

    சாத்தான்குளம் விவகாரத்தில் விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவது பற்றி முடிவெடுக்கப்படும்  என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குள வியாபாரிகள் லாக்அப் மரணத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது இரட்டை கொலை பதிவு செய்ய வேண்டும் என்பதே அவர்களின் குடும்பத்தாரின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், விசாரணைக்கு பிறகே  அதுக்குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். 

    14:02 (IST)01 Jul 2020

    ஜெயராஜ்- பென்னிக்ஸ் வீட்டிற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

    சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்று அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல் செலுத்தினார். மேலும், அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவியை நேரில் அளித்தார்

    14:01 (IST)01 Jul 2020

    சிபிசிஐடி-யின் முதல் தகவல் அறிக்கை!

    சாத்தான்குளம்  தந்தை-மகன் லாக் அப் மரணம் தொடர்பான விசாரணை சிபிசிஐடி  வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரனையை தொடங்கினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிபிசிஐடி-யின் முதல் தகவல் அறிக்கை கோவில்பட்டி நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

    12:30 (IST)01 Jul 2020

    மருத்துவர்களுக்கு நாடு தலைவணங்குகிறது - பிரதமர் நரேந்திரமோடி

    கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னணியில் பாடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு நாடு தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

    12:14 (IST)01 Jul 2020

    நெய்வேலி என்எல்சி பாய்லர் விபத்து: 11 பேர் கவலைக்கிடம்

    நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாய்லர் விபத்தில் 11 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,விபத்தில் சிக்கிய 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

    12:10 (IST)01 Jul 2020

    #சத்தியமா_விடவே_கூடாது : சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழப்பு குறித்து ரஜினி ட்வீட்

    12:08 (IST)01 Jul 2020

    ஜம்மு- காஷ்மீரில் பாயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

    வடக்கு ஜம்மு- காஷ்மீர், சோபூர் நகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதே நேரத்தில் குடிமகன் ஒருவரும் கொல்லப்பட்டார். மூன்று வயது குழந்தை பயங்கரவாதிகளிடம் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.

    12:03 (IST)01 Jul 2020

    நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 5 ஊழியர்கள் பலி- பாய்லர் வெடித்து பயங்கரம்

    நெய்வேலி என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் ஐந்து ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

    11:42 (IST)01 Jul 2020

    பள்ளிகளை திறப்பது சாத்தியக்கூறாக இருக்காது - அமைச்சர் செங்கோட்டையன்

    இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது சாத்தியக்கூறாக இருக்காது என்றும், தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    11:37 (IST)01 Jul 2020

    சாத்தான்குளம் காவல் நிலையம் சிபிசிஐடி கட்டுபாட்டுக்குள் வந்தது

    சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.யாரும் நுழையாத வகையில் காவல்நிலையத்தை சுற்றி தீவிர தடுப்பு அமைத்துள்ளது ..        

    11:24 (IST)01 Jul 2020

    சமுத்திர சேது திட்டத்தின்கீழ், ஈரான் நாட்டிலிருந்த இந்தியர்களை தூத்துக்குடி வந்தடைந்தனர்

    கொரோனா ஊரடங்கால் பல நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை கொண்டுவரும் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரான் நாட்டிலிருந்த இந்தியர்களை அழைத்து வந்த கடற்படை கப்பல் இன்று தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.

    11:20 (IST)01 Jul 2020

    கொரோனா நோய்த் தொற்றிகுணமடைவோர் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது - மத்திய அரசு

    இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 59.43 சதவீதத்தை எட்டியது என மத்திய அரசு தெரிவித்தது.  

     

    10:43 (IST)01 Jul 2020

    அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணி - 75.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    தமிழகத்தில் 59 அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள 75.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

    10:36 (IST)01 Jul 2020

    சென்னையில் நேற்று மாலை முதல் 22 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

    சென்னையில் நேற்று மாலை முதல் தற்போது வரை 22 பேர்  கொரோனா  தொற்று காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் கொரோனாவுக்கு தொற்றுக்கு பலியாகி உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.    

    மருத்துவமனைகள் விவரம்:  

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை -  7 பேர்

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனை - 4

    ஸ்டான்லி அரசு மருத்துவமனை - 4 

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனை - 4 பேர் 

    தனியார் மருத்துவமனை -  3 பேர் 

    10:19 (IST)01 Jul 2020

    சென்னையில் கொரோனா நோய் சிகிச்சை பெறுபவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    அதிகபட்சமாக, அண்ணா நகரில்(VIII - மண்டலம்)   3,166 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    

    10:14 (IST)01 Jul 2020

    புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம்

    செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    10:02 (IST)01 Jul 2020

    சாத்தான்குளம் விவகாரம்.. சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!

    சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து, தனது விசாரணையைத் தொடங்கியது. சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் ஜெயராஜ் வீடு ஆகிய இடங்களில் சிபிசிஐடி இன்று விசாரணையை மேற்கொள்கிறது.

    முன்னதாக, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை தற்காலிகமாக சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Tamil News Today Updates: கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் சூழலில், மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து இன்று முதல் ஜூலை 15-ம் தேதி வரை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

    மேலும், அந்தந்த மாவட்டத்திற்குள் இபாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இபாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

    Tamilnadu Coronavirus Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment