Advertisment

News Highlights: 6 மாவட்டங்களில் இன்று கனமழை- வானிலை அறிக்கை

திரிபுராவை ஒட்டி அமைந்திருக்கும் இந்திய வங்கதேச எல்லையில் இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பகிர்ந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: 6 மாவட்டங்களில் இன்று கனமழை- வானிலை அறிக்கை

வடகிழக்கு பருவ மழை காரணமாகத் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Advertisment

ஐ.இ. தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இன்று போல் உங்கள் வாழ்வில் என்றும் ஒளியும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும். இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

ஈஸ்வரன் டீசர்

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் திரைபப்டத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகள்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியா மற்றும் வெளிய்நாட்டில் வாழும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

இன்று தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!



























Highlights

    22:31 (IST)14 Nov 2020

    வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை

    வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.  

    22:25 (IST)14 Nov 2020

    கந்த சஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது.

    20:13 (IST)14 Nov 2020

    விளையாட்டுப் பயிற்சி மையங்களுக்கு ஊக்கத் தொகை

    நாடு முழுவதும் உள்ள 500 தனியார் விளையாட்டுப் பயிற்சி மையங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    19:48 (IST)14 Nov 2020

    சென்னையில் காற்றின் தூய்மை நிலை சிறப்பாக உள்ளது- மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

    சென்னையில் காற்றின் தூய்மை நிலை சிறப்பாக உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    18:44 (IST)14 Nov 2020

    தமிழகத்தில் புதிதாக 1, 912 பேருக்கு கொரோன தொற்று

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 1, 912 பேருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,56,372 ஆக அதிகரித்துள்ளது.

    17:36 (IST)14 Nov 2020

    8-வது பிரிக்ஸ் எஸ்டிஐ அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது

    பிரிக்ஸ் நாடுகளின் ( பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் துறை அமைச்சர்கள், நேற்று மாலை, மெய்நிகர் வடிவ கூட்டத்தில் சந்தித்ததனர். உறுப்பு நாடுகளுக்கு இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெற்றது. 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு ரஷ்யா தலைமைப் பொறுப்பு என்பதால், அந்நாட்டின் அறிவியல் மற்றும் உயர் கல்வி அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

    17:32 (IST)14 Nov 2020

    கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் புதிதாக 7,802 பேருக்கு தொற்று

    கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் புதிதாக 7,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் புதிதாக 5,804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 4,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மூன்றாவது இடத்தில் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில், 520 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில், 79.23% பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தது. மகாராஷ்டிராவில் 24.4% ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை 127 ஆகும். தில்லி, மே.வங்கம் முறையே உயிரிழப்பு எண்ணிக்கை 91, 51 ஆக இருந்தது.

    17:32 (IST)14 Nov 2020

    தொடர்ந்து நான்காவது நாளாக, 5 லட்சத்துக்கும் குறைவான எண்ணிக்கை

    இந்தியாவில், கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக, 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்து, இன்று 4,80,719 ஆக இருந்தது. மொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுவோர் விகிதம் மேலும் குறைந்து 5.48% ஆக இருந்தது. தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 44,684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 24 மணி நேரத்தில், 47,992 பேர் குணமடைந்துள்ளனர்.

    16:28 (IST)14 Nov 2020

    நடிகை கீர்த்தி சுரேஷ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்

    15:49 (IST)14 Nov 2020

    தமிழக அரசு சார்பில் ஜவஹர்லால் நேரு திருவுருவ சிலைக்கு மரியாதை

    சென்னை கத்திப்பாரா சந்திப்பில் உள்ள ஜவஹர்லால் நேரு திருவுருவ சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மாநில அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பா. பெஞ்சமின், க. பாண்டியராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    15:48 (IST)14 Nov 2020

    சதாத் ரஹ்மானுக்கு சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது

    சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது பங்களாதேஷை சேர்ந்த சிறுவர் சதாத் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இணையதளம் வாயிலாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்ததற்காக மேற்கொண்ட நடவடிக்கைக்கு சதாத் ரஹ்மானுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    14:54 (IST)14 Nov 2020

    உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்த கனடா பிரதமர்

    உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி காட்சி வாயிலாக வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

    13:39 (IST)14 Nov 2020

    தனிக்கட்சி முயற்சியில் மு.க.அழகிரி... ரஜினி சிக்னலுக்கு எதிர்பார்ப்பு!

    ஜனவரியில் புதிய கட்சி தொடங்க மு.க.அழகிரி திட்டமிடுகிறார். இதையொட்டி மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். திமுகவில் இணையும் வாய்ப்பு தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மொத்தமாக மறக்கப்பட்டு வருவதாகவும் அதனால் தனிக் கட்சியை தவிர வேறு வழியில்லை என்றும் அப்போது அவர் கூறுவதாக அழகிரி தரப்பினர் கூறுகின்றனர். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து தேர்தலை சந்திக்கவும் அழகிரி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

    13:36 (IST)14 Nov 2020

    6 மாவட்டங்களில் கனமழை

    காஞ்சி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போன்று வருகின்ற நவம்பர் 16 தேதி அன்று கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    13:29 (IST)14 Nov 2020

    மதுரை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி தர வேண்டும்

    மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    12:49 (IST)14 Nov 2020

    மாஸ்டர் தீபாவளிக்கு ரெடியா?

    மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை சரியாக 06 மணிக்கு சன்டிவியின் யுட்யூப் சேனலில் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் மாலை 06:30 மணியில் இருந்து இதன் டீசரை திரையரங்குகளிலும் மக்கள் கண்டு ரசிக்கலாம். 

    12:45 (IST)14 Nov 2020

    ப்ளாஸ்டிக் தொழிற்சாலையில் பற்றி எரியும் தீ

    குஜராத் வல்சாத்தில் அமைந்திருக்கும் ப்ளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ பற்றி எரியும் காட்சிகள். தீயணைப்பு வீரர்கள் இந்த பகுதிக்கு தற்போது வந்து கொண்டுள்ளனர்.

    12:17 (IST)14 Nov 2020

    நாகப்பட்டினத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

    குமரிக்கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

    12:09 (IST)14 Nov 2020

    மதுரை தீ விபத்து ; உயிரிழந்தவர்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்

    மதுரை ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    12:07 (IST)14 Nov 2020

    விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம் - ராமதாஸ்

    11:36 (IST)14 Nov 2020

    15வது கிழக்காசிய மாநாடு

    நாளை நடைபெற இருக்கும் 15வது கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்க உள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

    11:24 (IST)14 Nov 2020

    அழுகையையும் கண்ணீரையும் நிறுத்தமுடியவில்லை

    11:20 (IST)14 Nov 2020

    தடையை மீறி பல இடங்களில் பட்டாசு விற்பனை

    டெல்லியில் தடையை மீறி பல இடங்களில் பட்டாசு விற்பனை செய்ததாக 41 பேரும், பட்டாசு வெடித்ததாக கூறி 6 பேரும் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    10:55 (IST)14 Nov 2020

    சென்னையில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டங்கள்

    சென்னையில் பொதுமக்கள் தீபாவளியை வெகு விமர்சையாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    10:37 (IST)14 Nov 2020

    மோடி தீபாவளி வாழ்த்துகள்

    பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை கூறியுள்ளார். 

    10:30 (IST)14 Nov 2020

    உழைப்பாளர் தின வாழ்த்துகளை பகிரும் முதல்வர்?

    தீபாவளி திருநாள் அன்று உழைக்கும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

    10:06 (IST)14 Nov 2020

    ரசிகர்களுக்கு வாழ்த்துகள் கூறிய ரஜினி

    10:05 (IST)14 Nov 2020

    ரோஹித் ஷர்மா முழு உடல் தகுதியுடன் இல்லை

    ஐ.பி.எல். தொடர் முடிந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளனர். அனுஷ்கா ஷர்மாவின் பிரசவத்திற்காக இந்த போட்டியில் விராத் கோலி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ரோஹித் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றார். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் அளவில் முழுமையான உடல் தகுதியுடன் ரோஹித் இல்லை என்று கங்குலி அறிவித்துள்ளார்.

    10:05 (IST)14 Nov 2020

    முட்டை கொள்முதல் விலை

    ரூ. 4.75-ஆக நாமக்கலில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயித்துள்ளது தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு.

    10:04 (IST)14 Nov 2020

    குழந்தைகளுக்காக முதல் காவல் நிலையம்

    குழந்தைகளுக்காக முதன்முறையாக காவல் நிலையம் ஒன்று திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது போன்று 11 இடங்களில் குழந்தைகளுக்கான காவல்நிலையம் திறக்கப்பட உள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச்சம்பவங்களில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 84.14க்கும், டீசல் ரூ. 75.95க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை விளக்குத்தூண் அருகே ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளடது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் பலியாகினார்கள். இரண்டு தீயணைப்பு வீரர்களுக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

     

    Simbu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment