Advertisment

Tamil News Updates : தமிழகத்தில் மேலும் 1,164 பேருக்கு கொரோனா தொற்று

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Updates : தமிழகத்தில் மேலும் 1,164 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Nadu News Live Updates : மக்கள் பிரச்சனைக்காகவோ, நீட் தேர்வு ரத்துக்காகவோ ஆளுநரை சந்திக்காத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொத்துகளை பாதுகாக்கவே தற்போது ஆளுநர் ரவியை சந்தித்துள்ளார் என்று விமர்சனம் செய்துள்ளார் சி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட ரவியை முதன்முறையாக 20.10.2021 அன்று நேரில் சந்தித்து பேசினார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருவாய் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெற்று வருகின்ற நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

Advertisment

மற்ற மாநிலங்கள் நிராகரித்த அணுமின் நிலையங்களை ஏன் இங்கு அமைக்க வேண்டும்?

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்து ரூ. 103.61க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.99.59க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வானிலை அறிக்கை

தென் தமிழகத்தில் 1 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளம் மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்களின் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? முழுமையான செய்திகளைப் படிக்க



  • 21:45 (IST) 21 Oct 2021
    தமிழகத்தில் மேலும் 1,164 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் மேலும் 1,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,91,797 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 20 தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35968 ஆக உயர்ந்துள்ளது.



  • 19:42 (IST) 21 Oct 2021
    இந்தியாவின் தன்னம்பிக்கை மீண்டும் நிரூபனமாகியுள்ளது - குடியரசுத்தலைவர்

    100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதன் மூலம் இந்தியா இன்று புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தன்னம்பிக்கை மீண்டும் நிரூபனமாகியுள்ளது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.



  • 19:36 (IST) 21 Oct 2021
    திருச்செந்தூர் கோவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:06 (IST) 21 Oct 2021
    போதை பொருள் பயன்படுத்திய வழக்கு : நடிகை அனன்யா பாண்டேவிடம் விசாரணை

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை அனன்யா பாண்டேவிடம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நாளை காலை 11 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 18:59 (IST) 21 Oct 2021
    குடும்ப தலைவிகளுக்கு ரூ1000 வழங்கும் திட்டம் குறித்து நடவடிக்கை - அமைச்ர் சக்கரபாணி அறிவிப்பு

    சென்னை, கீழ்பாக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.



  • 18:39 (IST) 21 Oct 2021
    பாஜக பிரமுகர் கல்யாண ராமனின் ஜாமின் மனு தள்ளுபடி

    சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துகளை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாண ராமனின் ஜாமின் மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 18:37 (IST) 21 Oct 2021
    சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு

    தொடர்ந்து 5வது நாளாக சீனாவின் வடக்கு மாகாணங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் பள்ளிக்கூடங்கள் மூட உத்தரவிட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 17:15 (IST) 21 Oct 2021
    ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரண வழக்கு மறு விசாரணை

    கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ல் விபத்தில் உயிரிழந்த வழக்கை சேலம் மாவட்ட காவல்துறை மீண்டும் விசாரிக்க தொடங்கியுள்ளது.



  • 17:13 (IST) 21 Oct 2021
    நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஜார்கண்ட் முதலமைச்சரை சந்தித்தார் திமுக எம்.பி. திருச்சி சிவா!

    நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் திமுக எம்.பி. திருச்சி சிவா வழங்கினார்.



  • 16:15 (IST) 21 Oct 2021
    ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது தொடர்பான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.



  • 15:29 (IST) 21 Oct 2021
    மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் 3% அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 15:13 (IST) 21 Oct 2021
    மருத்துவமனையிலிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்

    சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்



  • 15:13 (IST) 21 Oct 2021
    மருத்துவமனையிலிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்

    சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்



  • 14:57 (IST) 21 Oct 2021
    கனகராஜ் மரணம் - மீண்டும் போலீஸ் விசாரணை

    கொடநாடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுனர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கில் சேலம் போலீஸ் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது



  • 14:56 (IST) 21 Oct 2021
    கனகராஜ் மரணம் - மீண்டும் போலீஸ் விசாரணை

    கொடநாடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் மரணம் - மீண்டும் போலீஸ் விசாரணை



  • 14:56 (IST) 21 Oct 2021
    கனகராஜ் மரணம் - மீண்டும் போலீஸ் விசாரணை

    கொடநாடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுனர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கில் சேலம் போலீஸ் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது



  • 14:40 (IST) 21 Oct 2021
    தமிழகத்தில் இதுவரை 5 கோடிக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் இதுவரை 5 கோடிக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்



  • 14:12 (IST) 21 Oct 2021
    100 கோடி தடுப்பூசி; பிரதமருக்கு எல்.முருகன் நன்றி

    இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்



  • 13:25 (IST) 21 Oct 2021
    ஷாருக்கான் வீட்டில் சோதனை

    மும்பையில் உள்ள நடிகர் ஷாருகானின் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.



  • 13:24 (IST) 21 Oct 2021
    புதுச்சேரி தேர்தல் - உத்தரவு நீட்டிப்பு

    புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு நீட்டிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 13:17 (IST) 21 Oct 2021
    ஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக டொனால்ட் ட்ரம்ப்பின் சமூக ஊடகம்

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக ஊடகமான ”ட்ரூத்( TRUTH)” செயலியை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு போட்டியாக தொடங்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:48 (IST) 21 Oct 2021
    ஐஸ்கிரீமில் மதுபானம்- கடைக்கு சீல் வைப்பு

    கோவை மாவட்டம் அவிநாசி பகுதியில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்படவேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.



  • 12:01 (IST) 21 Oct 2021
    தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் கிருஷ்ணகிரி முதலிடம்

    தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி திட்டம் மூலம் அதிக தடுப்பூசிகளை செலுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்று கிருஷ்ணகிரியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார்.



  • 11:17 (IST) 21 Oct 2021
    அப்பல்லோ மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

    ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய அப்பல்லோ மருத்துவமனையின் மனு மீதான விசாரணை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.



  • 11:16 (IST) 21 Oct 2021
    மதிமுக இளைஞரணி மாநில செயலாளர் பதவியில் இருந்து ஈஸ்வரன் விலகினார்

    மதிமுக இளைஞரணி மாநில செயலாளராக பதவி வகித்து வந்த ஈஸ்வரன் தன்னுடைய பதவியில் இருந்து விலகினார். மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை துவங்க உள்ளதாக அறிவிப்பு.



  • 10:35 (IST) 21 Oct 2021
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக பதிவான நிலையில் முழுமையாக உடல் நலம் தேறி வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 17,561 ஆக உள்ளது.



  • 10:29 (IST) 21 Oct 2021
    ஆர்யன்கானை சந்தித்த ஷாருக் கான்

    போதை மருந்து வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்த நிலையில் மும்பை சிறையில் உள்ள ஆர்யன் கானை அவருடைய தந்தை ஷாருக் நேரில் சந்தித்து பேசினார்.



  • 10:25 (IST) 21 Oct 2021
    9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை

    9 மாதங்களில் இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை புரிந்துள்ளது.



  • 10:24 (IST) 21 Oct 2021
    தங்கத்தின் விலை அதிகரிப்பு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 120 அதிகரித்து சவரன் ஒன்று ரூ. 35,872க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,484 ஆகும்.



  • 09:24 (IST) 21 Oct 2021
    ட்ரூத் சோசியல் என்ற பெயரில் சமூக வலைதளத்தை துவங்கிய ட்ரம்ப்

    ட்விட்டர் போன்ற வலைதளங்களில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் ட்ரூத் சோசியல் என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் அறிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்ட காரணத்தால் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அவரின் கணக்குகள் கடந்த ஆண்டு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • 09:00 (IST) 21 Oct 2021
    பொள்ளாச்சி வழக்கு - 7 பேர் பணியிடை நீக்கம்

    பொள்ளாச்சியில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அவர்கள் உறவினர்கள் சந்திக்க அனுமதி அளித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 08:59 (IST) 21 Oct 2021
    சசிகலா சுற்றுப் பயணம்

    அடுத்தடுத்து பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளை செய்து வரும் சசிகலா, தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment