Advertisment

Tamil News Highlights: தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு

Tamil Nadu News Highlights : வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றன நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தொடர் மழை எதிரொலி: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

உங்கள் பணம் வளர சிறந்த வழி | Mutual Funds Basics in Tamil

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ. 105.74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசலின் விலையும் 33 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.101.92க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜி20 மாநாடு

இன்று இத்தாலியில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:01 (IST) 30 Oct 2021
    தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு

    தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி அறிவுறுத்திய நிலையில் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது



  • 21:33 (IST) 30 Oct 2021
    'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

    'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்



  • 21:28 (IST) 30 Oct 2021
    'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

    'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்



  • 21:28 (IST) 30 Oct 2021
    'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

    'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி நியமனமிக்கப்பட்டுள்ளார்



  • 21:28 (IST) 30 Oct 2021
    'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

    'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்



  • 20:24 (IST) 30 Oct 2021
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 20:23 (IST) 30 Oct 2021
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 20:07 (IST) 30 Oct 2021
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,021 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்



  • 19:16 (IST) 30 Oct 2021
    டி20 உலகக்கோப்பை; தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி

    டி20 உலகக்கோப்பை 'சூப்பர் 12' சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது



  • 19:15 (IST) 30 Oct 2021
    டி20 உலகக்கோப்பை; தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி

    டி20 உலகக்கோப்பை 'சூப்பர் 12' சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது



  • 18:42 (IST) 30 Oct 2021
    நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மகள்கள் வந்திதா, த்ரிதி ஆகியோர் நேரில் அஞ்சலி

    கர்நாடகா, பெங்களூரு, கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மகள்கள் வந்திதா, த்ரிதி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் இருந்து திரும்பி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



  • 18:21 (IST) 30 Oct 2021
    ஜோ பைடன், இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

    இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை சந்தித்து வருகிறார்



  • 17:53 (IST) 30 Oct 2021
    என்னைப்பற்றிய மீம்ஸ்களை ரசிக்கிறேன் – பாஜக தலைவர் அண்ணாமலை

    என்னைப்பற்றிய சமூக வலைதள மீம்ஸ்களை கண்டு ரசிக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் மீம்ஸ் எதிர்மறையாக இருந்தாலும் வழக்கு தொடரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்



  • 17:41 (IST) 30 Oct 2021
    முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,974 கனஅடியாக அதிகரிப்பு

    முல்லை பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 2,974 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணைக்கு 3 மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளது



  • 17:12 (IST) 30 Oct 2021
    'புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துணைவேந்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' - ஆளுநர் வலியுறுத்தல்

    தமிழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துணைவேந்தர்கள் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என முதலமைச்சர் முக ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • 17:01 (IST) 30 Oct 2021
    100 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ உலகம் முழுக்க வசூலில் 100 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றும் தற்போதுவரை 96 கோடி ரூபாய் உலகம் முழுக்க வசூல் செய்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே 68 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:42 (IST) 30 Oct 2021
    மதத்தின் அடிப்படையில் ஒருவரை தாக்கிப் பேசுவது கண்டனத்திற்குரியது - கேப்டன் கோலி

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி மீதான இணைய விமர்சனங்கள் குறித்து பேசியுள்ள கேப்டன் விராட் கோலி, "மதத்தின் அடிப்படையில் ஒருவரை தாக்கிப் பேசுவது கண்டனத்திற்குரியது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 16:41 (IST) 30 Oct 2021
    "அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை" - அண்ணாமலை

    "அதிமுகவில் உள்ள பிரச்சினைகளுக்கு பாஜக கருத்து கூற விரும்பவில்லை. அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம். அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை" என செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



  • 16:11 (IST) 30 Oct 2021
    உத்திரபிரதேசத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்!

    உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு பாஜக எம்.எல்.ஏ. சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளனர். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த இணைப்பு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



  • 15:41 (IST) 30 Oct 2021
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பெருந்து இயக்கம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் சென்னை திரும்ப 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.



  • 15:23 (IST) 30 Oct 2021
    தீபாவளி தினத்தில் சென்னையில் இறைச்சி கடைகளுக்கு தடை : மாநகராட்சி அறிவிப்பு

    தமிழகத்தில் வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட் உள்ள நிலையில், சென்னையில், தீபாவளி தினத்தன்று இறைச்சி கடை இயங்க மாநகராட்சி ஆணையம தடை விதித்துள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி ஆணையம் வெளியிட்டு்ளள அறிவிப்பில், எதிர்வரும் மகாவீர் நிர்வான் நாள் 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளையும் மூடிவைத்திருக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:49 (IST) 30 Oct 2021
    அரசு அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் குறித்து தகவல்

    தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 33 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ 6.47 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள், ரூ36 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 14:44 (IST) 30 Oct 2021
    தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

    தமிழகம் சார்பில் எந்த அதிகாரிகளுமின்றி முல்லை பெரியாறு அணையை திறந்தது முதல்வருக்கு தெரியாதா இல்லை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது உரிமையை நிலை நாட்ட வேண்டியது மாநில அரசின் கடமை தான் என்றும் கூறியுள்ளார்.



  • 14:38 (IST) 30 Oct 2021
    முல்லை பெரியாறு அணை குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

    முல்லை பெரியாறு அணை முழுமையாக தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை - என்று விளக்கம் அளித்துள்ள அமைச்சர் துரைமுருகன் முல்லை பெரியாறு அணை கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.



  • 14:26 (IST) 30 Oct 2021
    முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம்

    பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் எனறு கூறியுள்ளார்.



  • 13:16 (IST) 30 Oct 2021
    அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: 18.20 லட்சம் பறிமுதல்

    தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 33 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ. 18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களும், 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



  • 13:16 (IST) 30 Oct 2021
    அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: 18.20 லட்சம் பறிமுதல்

    தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 33 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ. 18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களும், 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



  • 12:26 (IST) 30 Oct 2021
    போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு

    ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி , வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்தார். அப்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.



  • 12:15 (IST) 30 Oct 2021
    4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’

    தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



  • 12:13 (IST) 30 Oct 2021
    இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்

    லட்சக்கணக்கான மாணவர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த நீட் 2021 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறகு என தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுடன், பைனல் ஆன்சர் கீயும் வெளியிடப்படும்.



  • 12:04 (IST) 30 Oct 2021
    ஆர்யன் கான் ஜாமினில் விடுதலை

    போதைப் பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், 28 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்துள்ளார்.



  • 11:50 (IST) 30 Oct 2021
    'ஜூலை 18' இனி தமிழ்நாடு நாள் - மு.க ஸ்டாலின் அறிவிப்பு

    தமிழ்நாடு' என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் தேதி, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 10:55 (IST) 30 Oct 2021
    100 நாட்கள் வேலைத் திட்டம் முடங்கும் அபாயம்

    மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ. 1 லட்சத்து 11 ஆயிரம் கோடியை 100 நாள் வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கியது. இந்த ஆண்டு அந்த நிதி 73 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டது. அரசு ஒதுக்கிய நிதி அரை நிதியாண்டுக்குள் காலியாகிவிட்டதால் தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் 100 நாள் வேலைத்திட்டம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது



  • 10:52 (IST) 30 Oct 2021
    நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக

    முதன்முறையாக நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக. இதுவரை அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்று வந்த நிலையில் திமுகவை சேர்ந்த வடிவேலு என்பவர் நெமிலியின் ஒன்றியக் குழு தலைவர் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.



  • 10:14 (IST) 30 Oct 2021
    முத்துநகர் விரைவு ரயில் நிறுத்தம்

    தூத்துக்குடி கீழூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால் சென்னை - தூத்துக்குடி செல்லும் முத்துநகர் விரவை ரயில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது



  • 09:42 (IST) 30 Oct 2021
    உலகின் மிக விலை மதிப்புமிக்க நிறுவனம் - மைக்ரோசாப்ட்

    அமெரிக்க பங்கு சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தக்க வைத்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதன் மூலம் உலகின் விலை மதிப்புமிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் உருவெடுத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2.41 ட்ரில்லியனாக இருந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.44 ட்ரில்லியன் டாலராக பதிவாகியுள்ளது.



  • 09:15 (IST) 30 Oct 2021
    ஜெய்பீம் ஜூக்பாக்ஸ் வெளியீடு ஒத்திவைப்பு

    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நலக்குறைவால் நேற்று மதியம் பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் காலமானார். திரையுலகினர் பலரும் அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் பாடல்கள் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • 09:08 (IST) 30 Oct 2021
    சிறைச்சாலையில் இருந்து ஆர்யன் கான் இன்று விடுவிப்பு

    ஆர்தர் சாலை சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 10 முதல் 12 மணிக்குள் ஆர்யன் கான் பிணையில் வெளிவரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 09:00 (IST) 30 Oct 2021
    7ம் கட்ட தடுப்பூசி முகாம்

    தமிழகம் முழுவதும் இன்று 7ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 29% பேர் 2 தவணை தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியுள்ளனர். 69% பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்



  • 08:44 (IST) 30 Oct 2021
    புனித் ராஜ்குமாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள புனித் ராஜ்குமாரின் உடல், அவரின் மகள் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 08:43 (IST) 30 Oct 2021
    பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு முதல்வர் மரியாதை

    மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன்னின் 114-வது பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • 08:43 (IST) 30 Oct 2021
    மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர்

    விடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தின் சார்பில் மிக முக்கிய பங்காற்றிய மருதுசகோதரர்களின் சிலை மதுரை தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment