Advertisment

Tamil News Highlights: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
tamil nadu election, tamil nadu exit poll result, exit poll result dmk will win, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திமுக கூட்டணி வெற்றி, அதிமுக, திமுக ஆட்சியைப் பிடிகும், dmk alliance will win, எக்ஸிட் போல் முடிவுகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு, aiadmk, makkal needhi maiam, அமமுக, மநீம, ammk, naam tamilar katchi


Advertisment

அக்டோபர் 18ம் தேதி அன்று நாடு தழுவிய போராட்டம்

Tamil Nadu Highlights : லக்கீம்பூர் வன்முறையை கண்டித்து அக்டோபர் மாதம் 18ம் தேதி அன்று நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவும், அவருடைய மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. . 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 627 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.

12 கி.மீ நடந்தே சென்று பழங்குடியினருக்கு சாப்பாடு தந்த நிஜ ஹீரோ - வெண்ணிலா; வீடியோ இதோ...

Petrol diesel price

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ. 101.27க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ. 96.93க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:38 (IST) 09 Oct 2021
    9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27% வாக்குகள் பதிவு

    தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27% வாக்குகள் பதிவாகியுள்ளது



  • 21:38 (IST) 09 Oct 2021
    9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27% வாக்குகள் பதிவு

    தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27% வாக்குகள் பதிவாகியுள்ளது



  • 19:43 (IST) 09 Oct 2021
    பிளாஸ்டிக் ஒழிப்பு - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

    பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு மீதான தடையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.



  • 19:05 (IST) 09 Oct 2021
    தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 19:04 (IST) 09 Oct 2021
    தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 18:04 (IST) 09 Oct 2021
    கள்ள ஓட்டு - மநீம தலைவர் கமல்ஹாசன் கண்டனம்

    அய்யப்பன் தாங்கல் உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு பதிவானது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 17:53 (IST) 09 Oct 2021
    தடுப்பூசிக்கு பரிசு - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

    நாளை 5ம் கட்ட தடுப்பூசி முகாமில், கலந்து கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக 1 கிராம் தங்கம், 2ம் பரிசாக மிக்ஸி, 3ம் பரிசாக காய்கறி கட்டர், 4ம் பரிசாக 4 பேருக்கு புத்தாடை வழங்கப்பட உள்ளது என புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்



  • 17:23 (IST) 09 Oct 2021
    நாகை மீனவரின் மூழ்கிய படகை மீட்க அரசு உதவ வேண்டும்- கமல்ஹாசன் கோரிக்கை

    நாகை மீனவரின் மூழ்கிய படகு மற்றும் வலையை மீட்டு மீனவருக்கு உதவவேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்



  • 17:22 (IST) 09 Oct 2021
    நாகை மீனவரின் மூழ்கிய படகை மீட்க அரசு உதவ வேண்டும்- கமல்ஹாசன் கோரிக்கை

    நாகை மீனவரின் மூழ்கிய படகு மற்றும் வலையை மீட்டு மீனவருக்கு உதவவேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்



  • 16:48 (IST) 09 Oct 2021
    ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 60.34% வாக்குகள் பதிவு

    9 மாவட்டங்களுக்கான 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 60.34 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • 16:44 (IST) 09 Oct 2021
    உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு புகார்: ஒருவருக்கு கத்திக் குத்து

    வேலூர் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சி 8,9 வார்டுகளில் வாக்குப்பதிவின்போது, கள்ள ஓட்டு போடப்படுவதாக எழுந்த புகாரில், வெங்கடேசன் என்பவரை கத்தியால் குத்தியதால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.



  • 16:24 (IST) 09 Oct 2021
    கோடநாடு எஸ்டேட் வங்கிக்கணக்கு முடக்கம்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவின் கோடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.



  • 16:01 (IST) 09 Oct 2021
    முதல்வருக்கான கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு

    முதல்வர் மு.க ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை 12இல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தலைமை செயலாளர், உள் துறை செயலர், டிஜிபி பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:41 (IST) 09 Oct 2021
    தஞ்சை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

    தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து கடத்தி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட குழந்தையில் பட்டுக்கோட்டை பகுதியில் காவல் துறையினர் மீட்டனர்



  • 15:10 (IST) 09 Oct 2021
    ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 1 மணி நிலவரப்படி 46.86% வாக்குகள் பதிவு

    9 மாவட்டங்களுக்கான 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 46.86 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • 15:03 (IST) 09 Oct 2021
    ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 1 மணி நிலவரப்படி 46.86% வாக்குகள் பதிவு

    9 மாவட்டங்களுக்கான 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 46.86 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:02 (IST) 09 Oct 2021
    ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 1 மணி நிலவரப்படி 46.86% வாக்குகள் பதிவு

    9 மாவட்டங்களுக்கான 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 46.86 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • 14:10 (IST) 09 Oct 2021
    சபாநாயகர் அப்பாவு வாக்களிப்பு

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தலில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார் பணகுடி அருகே உள்ள சொந்த கிராமமான லெப்பை பெரியநாயகிபுரம் வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார்



  • 14:08 (IST) 09 Oct 2021
    உயிர்த்தெழ ஜெபம் - சடலம் மீட்பு

    திருச்சி அருகே உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் தாயின் சடலத்தை வைத்து மகள்கள் ஜெபம் செய்த சம்பலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உறவினர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலத்தை மீட்டதாக கூறியுள்ளனர்.



  • 14:07 (IST) 09 Oct 2021
    பொறியியல் மாணவர் சேர்க்கை - அதிர்ச்சி தகவல்

    பொறியியல் சேர்க்கை - 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று கல்வியாளர் அஸ்வின் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 131 பொறியியல் கல்லூரிகளில் 1 சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.



  • 13:50 (IST) 09 Oct 2021
    பிறைசூடன் மறைவு - முதல்வர் அஞ்சலி

    சென்னை, நெசப்பாக்கத்தில் மறைந்த கவிஞர் பிறைசூடன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்



  • 13:49 (IST) 09 Oct 2021
    தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

    நாகை மீனவரின் மூழ்கிய படகு மற்றும் வலையை மீட்டு மீனவருக்கு உதவவேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 12:55 (IST) 09 Oct 2021
    தபால் வாக்கு வழங்காததை கண்டித்து தர்ணா

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்கவில்லை என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • 12:52 (IST) 09 Oct 2021
    உள்ளாட்சி தேர்தல் - 25.90% வாக்குப்பதிவு

    ஊரக உள்ளாட்சி தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 25.90% வாக்குப்பதிவு .அதிகபட்சமாக விழுப்புரத்தில் 32.41% வாக்குப்பதிவு - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்



  • 12:50 (IST) 09 Oct 2021
    இன்றைய தங்கம் விலை

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ரூ 200 உயர்ந்து சவரணுக்கு ரூ 35,504 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 12:48 (IST) 09 Oct 2021
    டேவிட் வார்னர் உருக்கமான பதிவு

    ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன்ரைசஸ் அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டகார்ர் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அற்புதமான நினைவுகளை உருவாக்கிய உங்களுக்கு எனது நன்றிகள். எங்களுடைய அனைத்து ரசிகர்களே, எங்கள் அணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து 100 சதவீத உந்து சக்தியாக இருந்தது நீங்கள்தான். நீங்கள் அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இது ஒரு சிறப்பான பயணமாக இருந்து வந்தது. நானும் எனது குடும்பத்தாரும் உங்களை மிஸ் செய்யப் போகிறோம்” என்று கூறியுள்ளார்.



  • 12:44 (IST) 09 Oct 2021
    அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது - யோகி

    லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் ஆதாரமில்லாமல் வெறும் அழுத்தத்தின் பேரில் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக கூறியுள்ளார் .



  • 12:39 (IST) 09 Oct 2021
    மின்சார கார் இந்தியாவில் 35 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என தகவல்

    அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் தயாரித்துள்ள மின்சார கார் இந்தியாவில் 35 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.



  • 11:58 (IST) 09 Oct 2021
    உ.பி வன்முறை - ஆஷிஷ் மிஸ்ரா ஆஜர்

    உ.பி: லக்கிம்பூர் வன்முறை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.



  • 11:27 (IST) 09 Oct 2021
    மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

    மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், இருசக்கர வாகனங்களையும் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • 11:06 (IST) 09 Oct 2021
    உள்ளாட்சி தேர்தல் : காலை 9 மணி வரை 9.72% வாக்குகள் பதிவு

    2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 9 மணி வரை 9.72% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 10:34 (IST) 09 Oct 2021
    72 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை

    இந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 131 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 1%க்கும் குறைவாகவே உள்ளது என அதிர்ச்சி தகவல்.



  • 10:09 (IST) 09 Oct 2021
    சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்

    நெல்லை வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தலில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார். பணகுடி அருகே உள்ள லெப்பை பெரியநாயகிபுரம் வாக்குச்சாவடியில் சபாநாயகர் அப்பாவு தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.



  • 09:59 (IST) 09 Oct 2021
    இந்தியா வந்தார் டென்மார்க் பிரதமர்; ராஜமரியாதையுடன் வரவேற்பு

    இந்வரவேற்பு அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார் டென்மார் பிரதமர் மேட்டே ஃப்ரெடெரிக்சென். அவர் ராஜ்காட்டில் இருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை. ராஷ்ட்ரபதி பவனில் நேரடியாக சென்று அவரை வரவேற்றார் பிரதமர் மோடி.

    watch Prime Minister Narendra Modi receives Prime Minister of Denmark, Mette Frederiksen at Rashtrapati Bhawan in Delhi



    Frederiksen is on a 3-day visit to India during which she will call on President Ram Nath Kovind & hold bilateral talks with PM Modi. pic.twitter.com/YSSHTC3Xgy

    — ANI (@ANI) October 9, 2021


  • 09:58 (IST) 09 Oct 2021
    இந்தியா வந்தார் டென்மார்க் பிரதமர்; ராஜமரியாதையுடன் வரவேற்பு

    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார் டென்மார் பிரதமர் மேட்டே ஃப்ரெடெரிக்சென். அவர் ராஜ்காட்டில் இருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை. ராஷ்ட்ரபதி பவனில் நேரடியாக சென்று அவரை வரவேற்றார் பிரதமர் மோடி.



  • 09:48 (IST) 09 Oct 2021
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் கிராம் ஒன்று ரூ. 4,438க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 35, 504 ஆக உள்ளது.



  • 09:04 (IST) 09 Oct 2021
    திராவிடத்திற்கு எதிரான அரசியல் தோல்வியில் தான் முடியும்

    தமிழகத்தில் திராவிடத்திற்கு எதிரான அரசியலுக்கு என்றுமே தோல்வி தான் கிடைக்கும் என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு.



  • 08:54 (IST) 09 Oct 2021
    தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகினார் கே.வி. சுப்பிரமணியன்

    மோடி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக கே.வி. சுப்பிரமணியின் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மீண்டும் கல்வி பணிக்கு திரும்ப முடிவெடுத்துள்ளதாகவும் அறிவிப்பு.



  • 08:45 (IST) 09 Oct 2021
    IPL Play off

    ஐ.பி.எல். லீக் சுற்றில் பெங்களூரு அணி கடைசி பந்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் முதல் பிளே ஆஃப் போட்டியில் டெல்லி, சென்னை அணிகள் மோதுகின்றன.



  • 08:45 (IST) 09 Oct 2021
    ஆர்யன்கானுக்கு ஜாமின் மறுப்பு

    போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. எனவே அவருடைய தரப்பு மாவட்ட நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது.



  • 08:44 (IST) 09 Oct 2021
    weather updata : கரூரில் கொட்டித் தீர்த்த கனமழை

    கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓட்டம். காவேரி டெல்டா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.



Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment