Advertisment

Tamil Nadu Updates: வன்னியர் இட ஒதுக்கீடு - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Updates: வன்னியர் இட ஒதுக்கீடு - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Tamil Nadu News Updates : மகாராஷ்ட்ராவில் பெய்த கனமழையில் சிக்கி 149 நபர்கள் பலியாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 37 நபர்கள் பலியாகியுள்ளனர். முதல்வர் உத்தவ் தாக்கரே, நிவாரண நிதி உதவிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். தேசிய பேரிடர் மீட்பு குழு, மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான முழுமையான செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment

ஆந்திராவில் நிலநடுக்கம்

ஆந்திராவின் தெற்கு ஐதராபாத் பகுதியில் இன்று காலை 5 மணி அளவில் 4.0 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று இந்திய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

அரசு கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பயில இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:54 (IST) 26 Jul 2021
    வன்னியர் இட ஒதுக்கீடு - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

    மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இடஒதுக்கீடு, சீர்மரபினருக்கு 7%, மீதி உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% சிறபு இடஒதுக்கிட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி சேர்க்கையிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:09 (IST) 26 Jul 2021
    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,785 பேருக்கு கொரோனா; 26 பேர் பலி

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,361 பேர் குணமடைந்த நிலையில் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 19:28 (IST) 26 Jul 2021
    திமுகவி இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள்

    ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணி, வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.



  • 18:46 (IST) 26 Jul 2021
    பள்ளிக் கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

    தமிழ்நாட்டில் பள்ளிக்கல்லூரிகளை

    திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் முடிவெடுப்பார் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



  • 17:44 (IST) 26 Jul 2021
    ஒரு கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி; மகாராஷ்டிரா முதலிடம்

    இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 17:43 (IST) 26 Jul 2021
    மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு

    ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 17:23 (IST) 26 Jul 2021
    பாஜகவால் மாநில நலனுக்காக வேலை செய்ய முடியாது - சித்தராமையா

    எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து வெளியேறியதால் கர்நாடகாவிற்கு நல்லது நடக்காது என்றும் பாஜக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்; பாஜகவால் மாநில நலனுக்காக வேலை செய்ய முடியாது என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.



  • 16:51 (IST) 26 Jul 2021
    இந்திய திரும்பினார் வெள்ளி மங்கை மீராபாய் சானு

    டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு தாய்நாடு திரும்பினார். அவர் டோக்கியோவிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.



  • 16:50 (IST) 26 Jul 2021
    இந்திய திரும்பினார் வெள்ளி மங்கை மீராபாய் சானு

    டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு தாய்நாடு திரும்பினார். அவர் டோக்கியோவிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.



  • 16:49 (IST) 26 Jul 2021
    ஒலிம்பிக் நீச்சல் போட்டி : இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தோல்வி

    ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் ஆடவர் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தோல்வி அடைந்துள்ளார்.



  • 16:31 (IST) 26 Jul 2021
    ரேசன் கடைகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

    தமிழகத்தில் காலியாக உள்ள ரேசன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என்றும் மாதம் 30 நாட்களும் ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.



  • 16:15 (IST) 26 Jul 2021
    எய்ம்ஸ்-க்கு பதிலாக 3 மருத்துவ கல்லூரிகளில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் தமிழக அரசு திட்டம்

    எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமாக மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவ கல்லூரிகளில், நடப்பாண்டு 50 எம்பிபிஎஸ் மாணவர்களை சேர்க்க மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.



  • 16:11 (IST) 26 Jul 2021
    மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

    மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் என திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



  • 15:42 (IST) 26 Jul 2021
    குத்துச்சண்டை - இந்தியா தோல்வி

    ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். சீன வீரர் டுஹேட்டாவிடம் 5 - 0 என்ற புள்ளி கணக்கில் ஆஷிஷ் குமார் வீழ்ந்தார்.



  • 15:41 (IST) 26 Jul 2021
    கர்நாடக அமைச்சரவை கலைப்பு

    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையை கலைத்து ஆளுநர் தவார் சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.



  • 14:39 (IST) 26 Jul 2021
    சீனா வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை

    ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ சிஹுய்-க்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்படுகிறது. சோதனையில் ஊக்க மருந்து பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு



  • 14:22 (IST) 26 Jul 2021
    யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்

    மாமல்லபுரம் அருகே நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் நடிகை யாஷிகாவின் தோழி உயிரிழந்த நிலையில், தற்போது அவரின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.



  • 14:00 (IST) 26 Jul 2021
    டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் - இபிஎஸ்

    தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தினோம் என்றும் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என்றும் தெரிவித்தோம் என்று டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு இபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.



  • 13:59 (IST) 26 Jul 2021
    டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் - இபிஎஸ்

    தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தினோம் என்றும் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என்றும் தெரிவித்தோம் என்று டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு இபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.



  • 13:23 (IST) 26 Jul 2021
    இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி தோல்வி

    டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வியடைந்தார்.



  • 13:20 (IST) 26 Jul 2021
    யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்

    மாமல்லபுரம் அருகே நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் நடிகை யாஷிகாவின் தோழி உயிரிழந்த நிலையில், தற்போது அவரின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.



  • 12:44 (IST) 26 Jul 2021
    கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா

    பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிகழ்ச்சியில், கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகுவதாக அறிவிப்பு. ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.



  • 10:26 (IST) 26 Jul 2021
    கொரோனா தடுப்பூசியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற விவகாரம்

    கரூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் தனலட்சுமி கொரோனா தடுப்பூசியை வீட்டுக்கு எடுத்து சென்றுள்ள நிலையில் செவிலியரை பணியிடை நீக்கம் செய்து கரூர் நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 10:21 (IST) 26 Jul 2021
    தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா குறித்து வரும் 28-ம் தேதி ஆலோசனை

    தேசிய கடல்மீன் வள ஒழுங்குமுறை மசோதா குறித்து வருகின்ற 28ம் தேதி அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகம், புதுவை, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா அழைப்பு விடுத்துள்ளார்.



  • 09:49 (IST) 26 Jul 2021
    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39,361 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கொரோனாவுக்கு இந்தியாவில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 4,11,189 ஆக உள்ளது. டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 35, 968 ஆகவும், மரணித்தவர்களின் எண்ணிக்கை 416ஆகவும் உள்ளது.



  • 09:15 (IST) 26 Jul 2021
    வில்வித்தை போட்டி : காலிறுதிக்கு முந்தியது இந்திய ஆடவர் அணி

    ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. வில்வித்தை போட்டியில் கஜகஸ்தான் அணியை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.



  • 09:12 (IST) 26 Jul 2021
    பெட்ரோல் டீசல் விலை

    சென்னையில் கச்சாப் பொருட்களின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி பெட்ரோல் ரூ. 102.49க்கும், டீசல் விலை ரூ. 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



  • 08:55 (IST) 26 Jul 2021
    வாள் வீச்சில் இந்திய வீராங்கனை பவானி தேவி தோல்வி

    ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தற்போது வாள் வீச்சு போட்டி நடைபெற்று வருகிறது. சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி, பிரான்ஸ் நாட்டின் மனோன் புரூனெட்டை எதிர்கொண்டார். 15-7 என்ற புள்ளிகள் கணக்கில் பவானி தேவியை வீழ்த்தினார் மனோன்.



  • 08:51 (IST) 26 Jul 2021
    இளைஞரின் உயிரை காப்பாற்றிய அமைச்சர்

    சென்னை பூவிருந்தவல்லியில் விபத்தில் சிக்கிய இளைஞரை தன்னுடைய காரில் வைத்து மருத்துவமனையில் சேர்த்து அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.



  • 08:50 (IST) 26 Jul 2021
    ஆலமரத்திற்கு 102வது பிறந்த நாள் கொண்டாட்டம்

    மதுரை மீனாட்சிபுரம், கண்மாய்க்கரைப் பகுதியில் வளர்ந்துள்ள ஆலமரம் ஒன்றிற்கு 102வது பிறந்தநாளை உள்ளூர் பொதுமக்கள் கொண்டாடியுள்ளனர். நாட்டு இன மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சிறுவர்களிடமும் மரக்கன்றுகளை வழங்கி கண்மாய் கரைகளில் மக்கள் நட்டுவைத்தனர்.



  • 08:48 (IST) 26 Jul 2021
    திம்பம் வனப்பகுதியில் கனமழை

    ஈரோடு மாவட்டம் திம்பம் வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியது.



  • 08:14 (IST) 26 Jul 2021
    நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை

    தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமாக பெய்து வருகின்ற சூழலில், கூடலூர் அருகே உள்ள தேவலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக புளியம்பாறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் அமைக்கப்பட்ட பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.



  • 08:07 (IST) 26 Jul 2021
    பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் பதிவு துவங்கியது

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறை துவங்கியது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணைய தளத்தில் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



  • 08:03 (IST) 26 Jul 2021
    டோக்கியோ ஒலிம்பிக்

    ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இரண்டாவது சுற்றில் 3-2 என்ற செட் கணக்கில் போர்ச்சுக்கல் நாட்டின் அல்போலோனியாவை வீழ்த்தினார் சரத்



Tamil Nadu Live Updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment