Advertisment

Tamil News Updates : சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிப்பு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Updates : சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிப்பு

Tamil Nadu news live updates : தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு, அவர்களின் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் வகையிலும், உடல் நலனை பேணிக் காக்கவும் வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று காவல்த்துறை தலைமை இயக்குநர் நேற்று குறிப்பாணை வெளியிட்டுள்ளார். வார ஓய்வு தேவைப்படவில்லை என்று கூறி பணிக்கு வரும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தில் வேலைக்கு வரும் காவலர்களுக்கும் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்த குறிப்பாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பெட்ரோல் டீசல் விலை

14 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்று சென்னையில் எரிபொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.39க்கும் விற்பனையாகி வருகிறது.

விளையாட்டு உலகில் தொடர்ந்து மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நான்கு முறை தங்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சைமன் பைல்ஸ் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறி ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நிலையில், இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையற்ற விடுப்பில் செல்வதாக அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:13 (IST) 31 Jul 2021
    சென்னையில் கோவில் தரிசனத்திற்கு தடை

    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் ஆகஸ்ட் 9-ந் தேதி முதல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வடபழனி, கந்தக் கோட்டம், சூளை அங்காள பரமேஸ்வரி, படவேட்டம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 17:41 (IST) 31 Jul 2021
    வெண்கல பதக்கத்திற்கான போட்டியிலும் ஜோகோவிச் தோல்வி

    ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸின் அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நம்பர் ஒன் வீரர் செர்பியவின் ஜோகோவிச் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் வீரர் கரனோ பஸ்டாவிடம் தோல்வியை தழுவினார்.



  • 17:38 (IST) 31 Jul 2021
    இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வி

    ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் மிடில் 69-75 எடைப்பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வியடைந்தார்.



  • 16:53 (IST) 31 Jul 2021
    ஒலிம்பிக்; பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார். சீன தைபே வீராங்கனை தை சு-யிங்கியிடம் 21-18, 21-12 என்ற என்ற செட் கணக்கில் சிந்து தோல்வி அடைந்துள்ளார். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனையுடன் சிந்து மோதுகிறார்.



  • 16:25 (IST) 31 Jul 2021
    சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

    உள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். மேலும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



  • 16:23 (IST) 31 Jul 2021
    ஒலிம்பிக் குத்துச்சண்டை - இந்தியாவின் பூஜா ராணி தோல்வி

    ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி சீன வீராங்கனையிடம் தோல்வியை தழுவியுள்ளார்.



  • 15:53 (IST) 31 Jul 2021
    உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் டுவீட்

    உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார். மேலும் அதில், ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.



  • 15:35 (IST) 31 Jul 2021
    மின் கணக்கீட்டில் சந்தேகம் இருந்தால் மின்வாரியத்தில் புகார் அளிக்கலாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

    மாத வாரியாக மின் கணக்கீடு என்ற வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். மின் கட்டணம் செலுத்த 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மின் கணக்கீட்டில் சந்தேகம் இருந்தால் மின்வாரியத்தில் புகார் அளிக்கலாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி



  • 15:13 (IST) 31 Jul 2021
    பஞ்சாப்: ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு

    பஞ்சாப்பில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா விதிமுறைகள் பின்பற்றபடுவதை கவனிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 14:27 (IST) 31 Jul 2021
    கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில், விழிப்புணர்வு பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



  • 14:22 (IST) 31 Jul 2021
    'சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    "நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல்நலத்தைப் பேணுவதிலும் செலுத்தவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார்



  • 14:10 (IST) 31 Jul 2021
    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதிலடி

    "மேகதாது அணைத்திட்டம் கர்நாடகாவின் உரிமை; அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் குறித்து எனக்கு கவலை இல்லை. யாராவது உண்ணாவிரதம் இருக்கட்டும் அல்லது உணவு உண்ணட்டும், எனக்கு அதைப் பற்றி கவலையில்லை" என்று தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.



  • 13:53 (IST) 31 Jul 2021
    உரிய காரணங்கள் இருந்தால் நளினி, முருகனுக்கும் பரோல் - அமைச்சர் ரகுபதி

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய காரணங்கள் அடிப்படையில் மனு செய்தால் நளினி, முருகன் ஆகிய கைதிகளுக்கும் பரோல் வழங்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.



  • 13:44 (IST) 31 Jul 2021
    தேர்வெழுத விருப்பமுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு எழுதலாம் - தமிழக அரசு.

    12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வு மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தேர்வெழுத விருப்பமுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு எழுதலாம் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

    மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த நடைமுறை விரைவில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும் எனவும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வின் அடைப்படையில் மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • 13:15 (IST) 31 Jul 2021
    கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை; தகிக்கும் ஏதென்ஸ் நகரம்!

    கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஏதென்ஸ் மக்கள் தகித்து வரும் நிலையில், இந்த வெப்ப அலை அடுத்த வாரம் உச்ச நிலையை எட்ட உள்ளது எனவும், மக்கள் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும், மக்களை தண்ணீர் மற்றும் மின்சாரத்தை கவனமாகக் கையாள அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், மின் தடை ஏற்படா வண்ணம் சிரத்தையுடன் ஊழியர்கள் பணியாற்றுவதாகத் தெரிவித்தனர்.



  • 13:13 (IST) 31 Jul 2021
    கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை; தகிக்கும் ஏதென்ஸ் நகரம்!

    கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஏதென்ஸ் மக்கள் தகித்து வரும் நிலையில், இந்த வெப்ப அலை அடுத்த வாரம் உச்ச நிலையை எட்ட உள்ளது எனவும், மக்கள் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும், மக்களை தண்ணீர் மற்றும் மின்சாரத்தை கவனமாகக் கையாள அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், மின் தடை ஏற்படா வண்ணம் சிரத்தையுடன் ஊழியர்கள் பணியாற்றுவதாகத் தெரிவித்தனர்.



  • 12:58 (IST) 31 Jul 2021
    குடியரசுத் தலைவருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

    டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சந்தித்தார். பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழா அழைப்பிதழையும், 'The Dravidian Model' என்ற புத்தகத்தையும் குடியரசுத் தலைவரிடம் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.



  • 12:24 (IST) 31 Jul 2021
    தொலைதூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பு - பதவி உயர்வு கிடையாது

    தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 12:00 (IST) 31 Jul 2021
    +2 துணைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

    தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.



  • 11:56 (IST) 31 Jul 2021
    சிவகாசியில் பட்டாசு அலை விபத்து

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



  • 10:57 (IST) 31 Jul 2021
    தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி

    டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. லீக் சுற்றின் கடைசி போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தல்



  • 10:54 (IST) 31 Jul 2021
    பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடியும்

    கொரோனா 3-வது அலை வருமா என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், அதனையும் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொற்றில் இருந்து மீள முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



  • 10:18 (IST) 31 Jul 2021
    கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் - துவங்கி வைத்த முதல்வர்

    தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்த தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கி வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்.



  • 09:50 (IST) 31 Jul 2021
    corona updates

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 41,649. உயிரிழப்புகள் 593 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,291 நபர்கள் சிகிச்சை முடித்து வீட்டிற்கு சென்றுள்ளனர். 4,08,920 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 09:19 (IST) 31 Jul 2021
    அசாம் முதல்வர் மீது மிசோரமில் வழக்கு பதிவு

    இரு மாநில எல்லைப் பகுதிகளில் நிலத்திற்காக நடைபெற்ற சண்டையில் அசாம் மாநில முதல் ஹிமந்த பிஸா மற்றும் 6 காவல் துறை உயர் அதிகாரிகள் மீது மிசோரம் மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



  • 08:55 (IST) 31 Jul 2021
    சண்டிகர் - மணாலி சாலை நிலச்சரிவு காரணமாக மூடல்

    சண்டிகரில் இருந்து மணாலிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 3 பண்டோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக செயல்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. கடும் மழைப் பொழிவு காரணமாக பாறைகள் எல்லாம் அடித்துவரப்பட்டு சாலையில் குவியலாக வீழ்ந்துள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று மண்டி காவலர்கள் அறிவித்துள்ளனர்.



  • 08:28 (IST) 31 Jul 2021
    வட்டு எறிதல் போட்டி - இறுதிச் சுற்றில் கமல்பிரீத் கவுர்

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் வட்டு எறிதல் விளையாட்டின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் கமல்ப்ரீத் கவுர்



  • 08:20 (IST) 31 Jul 2021
    4 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

    சென்னை, கோவை, ஈரோடு மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இரண்டாவது நாளாக கொரோனா தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 08:19 (IST) 31 Jul 2021
    டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர் தோல்வி

    குத்துச்சண்டை ஆடவர் பிரிவில் இந்திய வீரர் அமீத் பங்கல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியா வீரர் ஹெர்னே மார்டினஸிடம் தோல்வி அடைந்தார்.



Tamil Nadu Live Updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment