Advertisment

Tamil News : கனமழை எதிரொலி : இதுவரை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News : கனமழை எதிரொலி : இதுவரை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

chennai rains IMD RMC flood alert : சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, காஞ்சி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, விழுப்புரம், திருவாரூர், விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை, பெரம்பலூரில் 1 முதல் 8 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மட்டும் இன்று விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டிக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக இருப்பதால் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு.

பெற்றோர்களே ஆண் பிள்ளைகளைப் பாலியில் தொல்லையிலிருந்து காப்பாற்றுங்கள்

28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தை மிரட்டும் வடகிழக்கு பருவமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

வேலூர் மாவட்டத்திற்கு மேற்கு-தென்மேற்கு திசையில் 59 கி.மீ தொலைவில் இன்று காலை 04.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நில அதிர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன என்பதை ஆய்வு செய்து வருகிறது தமிழக பேரிடர் மேலாண்மை குழு.

இது தொடர்பான முழுமையான செய்திகளை அறிந்து கொள்ள

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:26 (IST) 29 Nov 2021
    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பேருந்துகள் சேவை

    சென்னை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது



  • 20:22 (IST) 29 Nov 2021
    தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்திற்கான நிதியில் மாற்றம்

    தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்திற்கான நிதியில் மாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தனியார் பள்ளிகளுக்காக கட்டணம் 100 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.



  • 20:19 (IST) 29 Nov 2021
    காரைக்காலில் பழமையாக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

    கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,காரைக்காலில், முக்கிய சாலையில் இருந்த பழமையாக கட்டிடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்ப்பட்டுள்ளது.



  • 19:44 (IST) 29 Nov 2021
    ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு நிலை

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வரும் நிலையில், இந்த இரு மாநிலங்களின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெற்கு அந்தமான் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



  • 19:20 (IST) 29 Nov 2021
    கனமழை எதிரொலி : இதுவரை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் கனமழை காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:17 (IST) 29 Nov 2021
    நடன இயக்குனர் சிவசங்கர் மறைவுக்கு மு்தல்வர் இரங்கல்

    நடன இயக்குனர் சிவசங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் நடன இயக்கத்தால் எண்ணற்ற பாடல்களின் வெற்றிக்கு பங்களித்த சிவசங்கர் மாஸ்டர் மறைவு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.



  • 18:50 (IST) 29 Nov 2021
    தொடரும் கனமழை: இதுவரை 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 30) திருவள்ளூர், தூத்துக்குடி, மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:42 (IST) 29 Nov 2021
    கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 18:40 (IST) 29 Nov 2021
    கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக நாளை திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • 18:38 (IST) 29 Nov 2021
    கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 18:20 (IST) 29 Nov 2021
    கொளத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ முகாமில் முதல்வர் நேரில் ஆய்வு

    சென்னை - கொளத்தூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.



  • 18:18 (IST) 29 Nov 2021
    மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

    மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சஸ்பெண்ட் நடவடிக்கை நாடாளுமன்றத்தின் ஜனநாயக மாண்பை குறைக்கும் செயல், சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



  • 17:58 (IST) 29 Nov 2021
    நகர்புற உள்ளாட்சி தேர்தல் : தேமுதிக தனித்துப் போட்டி

    தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டிஇட உள்ளதாக தெமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். டிசம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.



  • 16:50 (IST) 29 Nov 2021
    நூல் விலை கட்டுப்பாடு தொடர்பாக, மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்



  • 16:48 (IST) 29 Nov 2021
    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் டிரா

    கான்பூரில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்துள்ளது. 284 ரன்கள் இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 5 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆனது



  • 16:20 (IST) 29 Nov 2021
    ஒமிக்ரான் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

    உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரசின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது



  • 16:08 (IST) 29 Nov 2021
    நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் -பாமக நிறுவனர் ராமதாஸ்

    தமிழகத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல. நெல் சாகுபடி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்



  • 16:07 (IST) 29 Nov 2021
    மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் -பாமக நிறுவனர் ராமதாஸ்

    தமிழகத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல. நெல் சாகுபடி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்



  • 15:50 (IST) 29 Nov 2021
    அம்மா மினி கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை. 'வீடு தேடி மருத்துவம்' திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்



  • 15:41 (IST) 29 Nov 2021
    ராஜ்ய சபா எம்.பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட்; சபாநாயகர் உத்தரவு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக மாநிலங்களவையை சேர்ந்த 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்



  • 15:25 (IST) 29 Nov 2021
    வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அச்சம் - ராகுல் காந்தி

    வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது. விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்று இருக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்



  • 15:11 (IST) 29 Nov 2021
    கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தீவிரமாக கண்காணிக்கப்படும் - மத்திய அரசு

    கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே அது தொடர்பான பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது



  • 15:09 (IST) 29 Nov 2021
    கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தீவிரமாக கண்காணிக்கப்படும் - மத்திய அரசு

    கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே அது தொடர்பான பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது



  • 15:08 (IST) 29 Nov 2021
    3 வேளாண் சட்டங்களும் ரத்து - இரு அவையிலும் நிறைவேற்றம்

    3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாவை தாக்கல் செய்தார்.



  • 14:13 (IST) 29 Nov 2021
    7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை

    7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதால் மீண்டும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை. நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பேட்டியளித்துள்ளார்.



  • 14:03 (IST) 29 Nov 2021
    பாலியல் தொல்லை - தந்தைக்கு ஆயுள்

    மதுரை, ஒத்தக்கடை பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை கணேசமூர்த்தி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.



  • 13:00 (IST) 29 Nov 2021
    நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

    தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை புதிய, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:58 (IST) 29 Nov 2021
    நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

    தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை புதிய, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:43 (IST) 29 Nov 2021
    '5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு' -வானிலை மையம்

    குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், ராமநாதபுரம்,தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:19 (IST) 29 Nov 2021
    வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

    எந்த விவாதமும் இன்றி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.



  • 12:18 (IST) 29 Nov 2021
    வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

    எந்த விவாதமும் இன்றி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.



  • 12:01 (IST) 29 Nov 2021
    பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் 18,000 கனஅடியாக உயர்வு

    தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் 18,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கப்படும் என்பதால், கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இப்பகுதி மக்களின் கைப்பேசிக்கு பொது தகவல் நெறிமுறை (CAP)மூலம் எச்சரிக்கை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:57 (IST) 29 Nov 2021
    முன்னாள் சிறப்பு டிஜிபியின் கோரிக்கை நிராகரிப்பு - உச்சநீதிமன்றம்

    தனக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • 11:29 (IST) 29 Nov 2021
    மக்களவை ஒத்திவைப்பு

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • 11:28 (IST) 29 Nov 2021
    அசுரனுக்கு மேலும் ஒரு விருது

    கோவாவில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷிற்கு சிறந்த கதாநாயகனுக்கான விருது, அசுரன் படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.



  • 10:55 (IST) 29 Nov 2021
    குளிர்கால கூட்டத் தொடர் - பிரதமர் மோடி

    நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.



  • 10:53 (IST) 29 Nov 2021
    ஒமிக்ரான் வைரஸ் - பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

    புதிய வகை ஒமிக்ரான் கொரோனா பரவி வருகின்ற நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.



  • 10:51 (IST) 29 Nov 2021
    மழை பாதிப்பு - முதல்வர் நேரில் ஆய்வு

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜபுரம் பகுதியில் பி.டி.பி. குடியிருப்பில் மழை பாதித்த இடங்களை முதல்வர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.



  • 10:28 (IST) 29 Nov 2021
    24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    தெற்கு அந்தமானில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது மேலும் வலுபெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.



  • 10:22 (IST) 29 Nov 2021
    சிறந்த மாநிலம் தமிழ்நாடு - இந்தியா டுடே விருது

    நடப்பு ஆண்டில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தொடர்ந்து 4வது முறையாக தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது இந்தியா டுடே இதழ்



  • 09:59 (IST) 29 Nov 2021
    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் இன்று ஆலோசனை

    தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அதிகாரிகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.



  • 09:57 (IST) 29 Nov 2021
    அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு

    பாபநாசம் காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளாது. அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



  • 09:45 (IST) 29 Nov 2021
    விபத்தில் சிக்கிய ஷேன் வார்னே

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன்னுடைய மகன் ஜாக்சனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்திற்குள்ளானது. காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 09:44 (IST) 29 Nov 2021
    தக்காளி விலை மீண்டும் உயர்வு

    சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 50 முதல் 60 வரை விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 75க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகமானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.



  • 09:10 (IST) 29 Nov 2021
    ஒமைக்ரான் கொரோனா தொற்று: தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

    ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.



  • 09:02 (IST) 29 Nov 2021
    வடியத் துவங்கியது வெள்ளநீர்

    சென்னையில் மழை நின்றதால் சாலைகள் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய நீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். பல இடங்களில் நீர் வடியத் துவங்கியுள்ளது.



  • 08:46 (IST) 29 Nov 2021
    ஒமைக்ரான் பிறழ்வு : கனடாவில் இருவருக்கு தொற்று உறுதி

    அண்மையில் நைஜீரியா சென்று திரும்பிய இரண்டு கனடா நாட்டினருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



  • 08:23 (IST) 29 Nov 2021
    கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    இன்று கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.



Tamil Nadu Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment