Advertisment

Tamil News : 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News : 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Nadu news updates : கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம். சென்னை மற்றும் புதுவைக்கு இடையே இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது என்றும், ஆனால் மாலை வரை மழை தொடரும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நிம்மதி பெருமூச்சில் சென்னைவாசிகள்

பெண் தூய்மை பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

உள் ஒதுக்கீடு விவகாரத்தை எதிர்த்து கேவியட் மனு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடிகர் கருணாஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடிகர் கருணாஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்கக் கோரி கருணாஸ் கேவியட் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு; உச்ச நீதிமன்றத்தில் நடிகர் கருணாஸ் கேவியட் மனு தாக்கல்

மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் 15வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் லிட்டர் ஒன்று ரு. 101.40க்கும், டீசல் ரூ. 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:04 (IST) 19 Nov 2021
    வேளாண் சட்டங்கள் வாபஸ்: உழவே தலை - விவசாயிகளுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

    பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என அறிவித்தது குறித்து நடிகர் சூர்யா, விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். சூர்யா ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “உழவே தலை. விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…” என்று தெரிவித்துள்ளார்.



  • 20:42 (IST) 19 Nov 2021
    கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

    கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • 19:34 (IST) 19 Nov 2021
    கனமழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

    கனமழையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • 19:16 (IST) 19 Nov 2021
    கனமழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

    கனமழையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • 18:04 (IST) 19 Nov 2021
    சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் ‘ப்ரி ரிலீஸ்’ டிரெய்லர் வெளியீடு

    சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் ‘ப்ரி ரிலீஸ்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது.



  • 17:31 (IST) 19 Nov 2021
    தைப் பொங்கலுக்கு பிறகு அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி தேர்வு -உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

    அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி முதல் நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தைப் பொங்கலுக்கு பிறகு, பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:15 (IST) 19 Nov 2021
    தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்பி. ரமேஷூக்கு ஜாமீன்!

    பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு வேலை செய்துவந்த தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் எம்.பி. ரமேஷ் குற்றம்சாட்டப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதனிடையே அவர் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.



  • 16:42 (IST) 19 Nov 2021
    தொடர்மழை: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடயே தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



  • 16:13 (IST) 19 Nov 2021
    ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!

    அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது. நவம்பர் 24 வரை அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.



  • 15:53 (IST) 19 Nov 2021
    ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

    மத்திய அரசின் திட்டங்களை தமிழ் மொழியில் மொழிப் பெயர்த்து அறிவிக்க உத்தரவிட வேண்டும் என கூறி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, வேல்முருகன் தலைமையிலான அமர்வு, ‘ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ளதான். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது. மொழியை மொழியாக கையாள வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.



  • 15:32 (IST) 19 Nov 2021
    5 இடங்களில் அதி கன மழை; 37 இடங்களில் மிக கனமழை; 66 இடங்களில் கனமழை!

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்துள்ளது. 5 இடங்களில் அதி கன மழையும், 37 இடங்களில் மிக கனமழையும் , 66 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 15:07 (IST) 19 Nov 2021
    வழுவிழந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; பரவலாக மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

    வங்கக் கடலில் நேற்று வரை நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை கடந்து குறைந்த காற்றழுத்தப் பகுதியாக வழுவிழந்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:59 (IST) 19 Nov 2021
    வேலூர் வீடு இடிந்ததில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான நிவாரணத்தை ரூ10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.



  • 14:45 (IST) 19 Nov 2021
    பிரதமர் மோடிக்கு சசிகலா நன்றி!

    பெருந்தன்மையோடு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி; “கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி இந்தியாவில் விவசாய புரட்சி ஏற்படும் எனவும் சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



  • 14:43 (IST) 19 Nov 2021
    இந்தி மொழியை ஏன் கற்க கூடாது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

    தமிழகத்தில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து அறிவிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, "இந்தி மொழியை ஏன் கற்க கூடாது?; ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ளதான்." எனக் கருத்து தெரிவித்துள்ளது.

    மேலும், "மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது; மொழியை மொழியாக கையாள வேண்டும்" என்று கூறி வழக்கு விசாரணை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



  • 14:17 (IST) 19 Nov 2021
    சென்னை பெருநகரில் வாகனபோக்குவரத்தின் தற்போதைய நிலவரம்!

    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகனபோக்குவரத்தின் தற்போதைய நிலவரம்!



  • 14:14 (IST) 19 Nov 2021
    பாரதிராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!

    ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் பாரதிராஜாவுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் "ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதி பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அல்ல; இது ஒரு சமூக பிரச்சினை" என்று தெரிவித்துள்ளார். மேலும், "படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்துவதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.



  • 14:14 (IST) 19 Nov 2021
    பாரதிராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!

    ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் பாரதிராஜாவுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் "ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதி பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அல்ல; இது ஒரு சமூக பிரச்சினை" என்று தெரிவித்துள்ளார். மேலும், "படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்துவதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.



  • 13:31 (IST) 19 Nov 2021
    பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது - ஓபிஎஸ்

    வேளான் சட்டசங்களை திரும்ப பெறுவதாக அறிவித்த இந்திய பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதிமுக சார்பில் பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின் மேல் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.



  • 13:23 (IST) 19 Nov 2021
    வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியகுழு வருகை

    தமிழகத்தில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக்குழு நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்டு்ளளத.



  • 13:20 (IST) 19 Nov 2021
    கடலோர பகுதிகளில் சுறாவளி எச்சரிக்கை

    வட தமிழக கடலோரம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • 13:18 (IST) 19 Nov 2021
    போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் நன்றி - நடிகர் கார்த்தி

    3 வேளான் சட்டங்களை திரும்ப பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது தன் உயிரையும் ஈந்து போராடிய வேளான் மக்களின் ஒரு வருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.



  • 12:45 (IST) 19 Nov 2021
    விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே வேளான் சட்டங்கள் ரத்து - வானதி சீனிவாசன்

    விவசாயிகளின் போராட்டத்தை வெற்றியாக்கும் விதமாக மத்திய அரசின் 3 வேளான் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளநிலையில், மத்திய அரசின் இந்த முடிவக்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தேர்தல் காரணத்திற்காக விவசாயிகள் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தேர்தலுக்காக அல்ல.. விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே வேளான் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.



  • 12:15 (IST) 19 Nov 2021
    பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளுக்கான அரசு - பொன்.ராதாகிருஷ்ணன்

    3 வேளான் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததை நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளுக்கான அரசு. பிரதமருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் எதிர்கட்சியினர் எதிர்த்துவருகிறார்கள். எதர்கட்சியினர் தங்களுக்கு வரும் வருமானம் போய்விடுமோ என்ற அச்சத்தினால் இந்த வேளான் சட்டங்களை எதிர்த்து போராடியுள்ளனர். விவசாயிகள் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



  • 12:04 (IST) 19 Nov 2021
    தேர்தல் அச்சத்தால் வேளாண் சட்டங்கள் ரத்து - பி.ஆர்.பாண்டியன்

    3 வேளான் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததை நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில். தேர்தல் அச்சத்தால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.



  • 12:03 (IST) 19 Nov 2021
    விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி - ப.சிதம்பரம்

    3 வேளான் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததை நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில். இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.



  • 12:00 (IST) 19 Nov 2021
    அதிமுக இப்போதாவது படிப்பினைகளை புரிந்துகொள்ளும்- கோபால கிருஷ்ணன்

    மோடிக்கு வக்காலத்து வாங்குவதில் நான் முந்தி நீ முந்தி என்ற அடிப்படையில் எடப்பாடியும் ஓபிஎஸ்ம் வேளான் சட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் தற்போது வேளான் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக இப்போதாவது படிப்பினைகளை புரிந்துகொள்ளும் என நம்புகிறேன் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



  • 12:00 (IST) 19 Nov 2021
    அதிமுக இப்போதாவது படிப்பினைகளை புரிந்துகொள்ளும் - கோபால கிருஷ்ணன்

    மோடிக்கு வக்காலத்து வாங்குவதில் நான் முந்தி நீ முந்தி என்ற அடிப்படையில் எடப்பாடியும் ஓபிஎஸ்ம் வேளான் சட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் தற்போது வேளான் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக இப்போதாவது படிப்பினைகளை புரிந்துகொள்ளும் என நம்புகிறேன் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



  • 11:03 (IST) 19 Nov 2021
    முதல்வர் ட்வீட்

    உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.



  • 11:02 (IST) 19 Nov 2021
    வேளாண் சட்டங்கள் ரத்து - முதல்வர் கருத்து

    மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.



  • 10:59 (IST) 19 Nov 2021
    விவசாயிகள், மன்னரை மண்டியிட வைத்துள்ளனர் - பிரகாஷ் ராஜ்

    என் தாய் நாட்டின் இடைவிடாது போராடும் விவசாயிகள் மன்னரை மண்டியிட வைத்துள்ளனர் என்று பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.



  • 10:52 (IST) 19 Nov 2021
    மக்கள் சக்தி மகத்தானது - வைகோ

    மக்கள் சக்தி மகத்தானது என்பதை விவசாயிகள் நிரூபித்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த மோடி போராட்டத்தில் இழந்த உயிர்களை திரும்பத் தருவாரா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார் வைகோ



  • 10:26 (IST) 19 Nov 2021
    நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட மோடி

    வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. விளக்குவதில் தொடர்ந்து முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லை.

    இந்த விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று பேசிய மோடி அறிவிப்பு.



  • 10:25 (IST) 19 Nov 2021
    விவசாய பெருமக்களுக்கு நன்றிகள் பல - மதுரை எம்.பி. வாழ்த்துகள்

    விவசாய சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவித்துள்ளது மனித சக்தி கோட்டைக் கதவுகளை விட மிகவும் வலிமையானது. போராட்டத்திற்கு புது இலக்கணம் வகுத்த விவசாயிகளுக்கு நன்றிகள் பல. களத்தில் உயர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர் வீசும் என்றும் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் அறிவிப்பு



  • 10:06 (IST) 19 Nov 2021
    தேர்தல் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து

    வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்த மத்திய அரசு தற்போது 5 மாநில தேர்தல்கள் வருகின்ற நிலையில் அவசர அவசரமாக சட்டத்தை திரும்பப் பெறும் முடிவுக்கு வந்துள்ளனர் என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.



  • 10:04 (IST) 19 Nov 2021
    தேர்தல் அச்சம் காரணமாகவே சட்டங்கள் வாபஸ் - ப.சிதம்பரம் விமர்சனம்

    அடுத்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளா நிலையில் தேர்தல் அச்சம் காரணமாகவே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார் மோடி என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம். ஜனநாயக முறையிலான போராட்டத்தால் பெற முடியாத வெற்றி தேர்தல் காரணமாக நமக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் பேச்சு.



  • 09:38 (IST) 19 Nov 2021
    exam alert

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நவம்பர் 29ல் தொடங்கி டிசம்பர் 6 வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:27 (IST) 19 Nov 2021
    மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வோம் - மோடி உறுதி

    மக்கள் மத்தியில் இன்று பேசிய மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வோம் என்று கூறியுள்ளார். நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விதைகளை விற்பனை செய்தோம். நுண் நீர்பாசன முறைக்கு உதவினோம். 22 கோடி மண் ஆரோக்கிய அட்டைகளை வழங்கினோம். இந்த முயற்சி விவசாய விளைபொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்தது என்றூ கூறினார்.



  • 08:58 (IST) 19 Nov 2021
    இந்திரா காந்தி பிறந்த நாள் - சோனியா மரியாதை

    இன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம். அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment