Advertisment

Tamil News Updates : சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார்

இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Updates : சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார்

மூன்று வாரங்களாக மசினகுடி பகுதியில் தேடி கண்டுபிடிக்கப்பட்ட டி23 புலிக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மைசூர் உயிரியல் பூங்கா மறுவாழ்வு மையத்தில் அந்த புலிக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

100-ஐ நெருங்கும் டீசல்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 103.31க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் ரூ. 99.26க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 106.19க்கும், டீசல் விலை ரூ. 94.92க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 112.11க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை ரூ. 102.89 ஆக உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 27,000 மக்கள் பிரதிநிதிகள் இன்று தங்களின் பதவிகளை ஏற்கின்றனர். மாவட்ட ஊராட்சி வார்ட் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதவி ஏற்க உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை 26ம் தேதி துவங்க உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய இன்று செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிடுகிறார் முதலவர் மு.க.ஸ்டாலின்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:30 (IST) 20 Oct 2021
    சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார்

    சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு நிறுவப்பட்டதற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.



  • 20:32 (IST) 20 Oct 2021
    போலீஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்தை சந்திக்க சென்ற பிரியங்கா; உ.பி. காவல்துறை தடுத்து நிறுத்தம்

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில், போலீஸ் காவலில் இறந்தவரின் உறவினர்களைச் சந்திக்கச் சென்றார். அப்போது, எந்த அரசியல் ஆளுமையும் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.



  • 19:48 (IST) 20 Oct 2021
    வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்!

    வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 18:27 (IST) 20 Oct 2021
    மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி நியமனம் - வைகோ அறிவிப்பு

    மதிமுக தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரகசிய வாக்கெடுப்பில், பதிவான 106 வாக்குகளில் துரை வைகோவுக்கு 104 வாக்குகள் கிடைத்துள்ளன என்று மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.



  • 18:13 (IST) 20 Oct 2021
    மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை... மகன் துரையின் அரசியல் நுழைவை தடுக்க முடியவில்லை - வைகோ

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “திமுக உடனான கூட்டணி தொடரும்; மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை; துரை வைகோவின் அரசியல் நுழைவை 2 ஆண்டுகளாக தடுத்துவந்தேன்; ஆனால் இப்போது முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:00 (IST) 20 Oct 2021
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    ஊரக உள்ளாட்சி தேர்தலில், பாஜகவில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்களை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். மேலும் பாஜக மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக கட்சி தொடர்ந்து செயல்படுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி ட்விட்டரில், “முதல் முறையாக 8 ஒன்றிய கவுன்சிலர்கள், 41 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களில் பெரும்பாலோர் முதல்-முறை மற்றும் 332 வார்டையும் உள்ளடக்கியதாக குறிப்பிட்டார்.

    "தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் சக நிர்வாகிகளை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழகத்தின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நன்றி" என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.



  • 17:15 (IST) 20 Oct 2021
    மாணவிக்கு பாலியல் தொல்லை : கிரிக்கெட் பயிற்சியாளருக்கு போக்சோ

    புதுச்சேரியில் மாணவிக்கு கிரிக்கெட் விளையாட பயிற்சி அளித்த கிரிக்கெட் வீரர் ஒருவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 16:58 (IST) 20 Oct 2021
    அதிமுகவின் நிலை குறித்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா வேதனை

    பொருளாதார ரீதியாக தங்களை பலப்படுத்திக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் தலைவர்கள் எல்லோருமே தங்களை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் தவறான முடிவுகள் எடுக்கிறார்கள் என்றும், அதிமுகவில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும் அதிமுக முன்னாள் எம்பி அனவர் ராஜா கூறியுள்ளார்.



  • 16:28 (IST) 20 Oct 2021
    மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு

    மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில, வழக்கு தொடர்பான ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.



  • 15:54 (IST) 20 Oct 2021
    இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் : ஆஸ்திரேலியா பேட்டிங்

    டி20உலககோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெறும் 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டு்ள நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.



  • 15:50 (IST) 20 Oct 2021
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை 28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை கோவை மகளிர் நீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்ததை தொடர்ந்து கைதான 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்



  • 15:29 (IST) 20 Oct 2021
    வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்

    வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் நிவாரண நிதியை வழங்கினர்



  • 15:28 (IST) 20 Oct 2021
    வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்

    வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் நிவாரண நிதியை வழங்கினர்



  • 15:04 (IST) 20 Oct 2021
    போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

    போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது



  • 14:23 (IST) 20 Oct 2021
    பிரதமர் மோடிக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்த இலங்கை அமைச்சர்

    பிரதமர் மோடிக்கு இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்ச பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்துள்ளார்.



  • 14:23 (IST) 20 Oct 2021
    பிரதமர் மோடிக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்த இலங்கை அமைச்சர்

    பிரதமர் மோடிக்கு இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்ச பகவத் கீதை புத்தகத்தை பரிசளித்துள்ளார்.



  • 13:38 (IST) 20 Oct 2021
    மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள் - டி.ராஜேந்தர்

    தனது மகன் சிம்புவுக்கு தொடர் மிரட்டல் வருகிறது என்றும், மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள் என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்



  • 13:28 (IST) 20 Oct 2021
    இந்தியை தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது - கமல்ஹாசன்

    இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.



  • 12:47 (IST) 20 Oct 2021
    22 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கேவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, கரூர், கிருச்சி ஆகிய 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:22 (IST) 20 Oct 2021
    சசிகலா எங்கள் கட்சியிலேயே இல்லை - எடப்பாடி பழனிசாமி

    சசிகலா எங்கள் கட்சியிலேயே இல்லை. கட்சியில் இல்லாத அவரை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.கொடியை பயன்படுத்துவது தொடர்பாக சட்டப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • 12:04 (IST) 20 Oct 2021
    உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு - ஆளுநரிடம் எடப்பாடி புகார்

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் விதிமீறல் நடந்துள்ளது. புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுகுறித்து விசாரிக்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • 12:03 (IST) 20 Oct 2021
    உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு - ஆளுநரிடம் எடப்பாடி புகார்

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் விதிமீறல் நடந்துள்ளது. புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுகுறித்து விசாரிக்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • 11:42 (IST) 20 Oct 2021
    “இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது“ - சென்னை உயர் நீதிமன்றம்

    கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 11:41 (IST) 20 Oct 2021
    “இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது“ - சென்னை உயர் நீதிமன்றம்

    கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 11:05 (IST) 20 Oct 2021
    வடகிழக்கு பருவமழை : புழல் ஏரியில் முதல்வர் ஆய்வு

    வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முதல்வர் ஒருவர் புழல் ஏரியை ஆய்வு செய்வது இதுவே முதன்முறையாகும்.



  • 10:45 (IST) 20 Oct 2021
    பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் அரசாணை வெளியீடு

    தமிழகத்தில் பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் வட்டாரங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 10:18 (IST) 20 Oct 2021
    உத்தரகாண்ட் வெள்ளம் - பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

    உத்திரகாண்ட்டில் இந்த வாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்த நிலையில் நிலச்சரிவு, கனமழை, வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளம் மற்றும் மழையில் சிக்கி இதுவரை 46 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:03 (IST) 20 Oct 2021
    தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உழைப்போம் - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

    தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உழைப்போம் என்று மோடி தமிழில் ட்வீட் செய்து, தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.



  • 09:27 (IST) 20 Oct 2021
    அரசு பேருந்துகளில் சி.சி.டி.வி. பொருத்தும் பணி துவக்கம்

    சென்னையில் உள்ள அரசு பேருந்துகளில் சி.சி.டி.வி. பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:10 (IST) 20 Oct 2021
    முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் கைது

    கோவை பீளமேட்டை சேர்ந்த செங்குட்டுவன் என்பவரின் மகள் சிந்துஜாவுடன் இணைந்து தொழில் துவங்கும் முயற்சிக்காக ரூ. 1.5 கோடி பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



  • 09:10 (IST) 20 Oct 2021
    ஆளுநரை சந்திக்கும் ஈ.பி.எஸ்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேசுகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற ரவியை முதன்முறையாக ஈ.பி.எஸ். சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment