Advertisment

Tamil Nadu News Today Updates: உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணியில் கூட்டணி தொடரும் - வைகோ

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Flash News in Tamilnadu Today Live Updates: அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது,'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Advertisment

நவம்பர், 9-ம் தேதி, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நாள், கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்ட நாள். அதேநாளில், அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும், ஒற்றுமையுடன், இணைந்த கரங்களோடு, முன்னோக்கி நடைபோட வேண்டும் என்பதே, நவம்பர், 9-ம் தேதி விடுக்கும் செய்தி யாகும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

லோக்சபா மற்றும் சில மாநில சட்டசபைகளுக்கு, சமீபத்தில் நடந்த தேர்தலின் போது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், அதில், 45 முதல், 50 சதவீதம் வரை, பா.ஜ., தரப்பிலும், 15 முதல், 20 சதவீதம் வரை காங்கிரஸ் தரப்பிலும் செலவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தல்களுக்காக, 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையத்தில், காங்., தலைமை கணக்கு தாக்கல் செய்துள்ளது.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:33 (IST)10 Nov 2019

    இயற்கையில் கூட வெற்றிடம் இல்லை - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

    இயற்கையில் கூட வெற்றிடம் இல்லை, அதை காற்று நிரப்பிவிடும்

    ஒரு தலைவர் மரணமடைந்து விட்டால் அந்த இடத்தை நிரப்ப மற்றொரு தலைவர் வருவார்

    சோனியா காந்தி குடும்பத்திற்கு சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது கண்டிக்கத்தக்கது

    - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

    21:20 (IST)10 Nov 2019

    5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    கள்ளக்குறிச்சி அருகே போலீசார் வாகன தணிக்கையின் போது பெண் உயிரிழந்த விவகாரம் : பணியில் இருந்த உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் - மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்

    21:20 (IST)10 Nov 2019

    மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்

    பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறினால் ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறி, மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் - தேசியவாத காங்கிரஸ்

    21:19 (IST)10 Nov 2019

    22ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில்...

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை வரும் 22ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.

    20:46 (IST)10 Nov 2019

    175 ரன்கள் இலக்கு

    வங்கதேசத்திற்கு எதிரான இறுதி டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 62(33) ரன்களும், லோகேஷ் ராகுல் 52(35) ரன்களும் எடுத்தனர். 

    20:36 (IST)10 Nov 2019

    பாஜகவுடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவித்தால்...

    மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவித்தால் ஆதரவு பற்றி முடிவு எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸின் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

    20:29 (IST)10 Nov 2019

    ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா கட்சிக்கு ஆளுநர் அழைப்பு

    மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா கட்சிக்கு ஆளுநர் அழைப்பு

    ஆளுநர் அழைப்பை பாஜக ஏற்க மறுத்த நிலையில், ஆளுநரின் அடுத்த முடிவு

    மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றிருந்தது

    20:07 (IST)10 Nov 2019

    அமமுக இயக்கம் அல்ல; அது ஒரு மன்னாரன் கம்பெனி : புகழேந்தி கடும் விமர்சனம்

    பட்டா இல்லாத இயக்கமாக அமமுக உள்ளது என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமமுக இயக்கம் இல்ல அது ஒரு மன்னாரன் கம்பெனி எனவும், தினகரனை ஆதரித்ததற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அமமுகவிற்காக உழைத்தவர்களின் உழைப்பு வீண் போனதாக கடுமையாக விமர்சித்துள்ளார். தினகரன் அணியில் இருந்த போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்ததாகவும், ஆனால், அவரை சந்திக்க சென்ற போது இன்முகத்தோடு அவர் தம்மை வரவேற்றதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.

    அமமுக கட்சியை அங்கீகரிக்ககூடாது என கடந்த மாதம் 23 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக கூறிய அவர், வாழ்க்கையில் விசுவாசமே இல்லாத மனிதர் டி.டி.வி தினகரன் என்றும் கூறினார். சசிகலாவை வெளிகொண்டுவர தினகரன் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்றும் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    19:32 (IST)10 Nov 2019

    திமுக அணியில் கூட்டணி தொடரும் - வைகோ

    உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணியில் கூட்டணி தொடரும்

    அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்பு

    - வைகோ

    19:32 (IST)10 Nov 2019

    ஏ.கே.நடராஜன் மறைவுக்கு இ.பி.எஸ் , ஓ.பி.எஸ். இரங்கல்

    வன்னியர் சங்கத்தை தொடங்கிய ஏ.கே.நடராஜன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஏ.கே.நடராஜன்

    - ஓபிஎஸ், ஈபிஎஸ்

    18:58 (IST)10 Nov 2019

    எச்-1 'பி' ஊழியர்களின் மனைவிக்கு விசா வழங்க அனுமதி இல்லை - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    ''எச்-1 பி' ஊழியர்களின் மனைவிக்கு விசா வழங்க தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு அந்த நாடு 'எச்-1 பி விசா வழங்கி வருகிறது. இது முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப், 'எச்-1 பி விசா வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், 'எச்-1 பி' ஊழியர்களின் மனைவிக்கு விசா வழங்க அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    18:55 (IST)10 Nov 2019

    18 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஆத்துப்பாளையம் நீர் தேக்கம்

    தென்னிலையை அடுத்துள்ள ஆத்துப்பாளையம் அணை மூலம் பரமத்தி,கரூர் ஒன்றிய பகுதியில் சுமார் 19 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில், நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அணைக்கு நீர்வரத்தொடங்கியது. மேலும் கீழ்பவானி ஆற்று கசிவு நீருடன், மழைநீரும் சேர்ந்து வந்ததால் ஆத்துப்பாளையம் அணை 18 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவான 26 அடியை எட்டி நிரம்பியுள்ளது.

    235 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ள நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அணையில் இருந்து 57 கிலோ மீட்டர் தூர பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டார். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    18:49 (IST)10 Nov 2019

    கடலூரில் மழை

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    18:42 (IST)10 Nov 2019

    இந்தியா பேட்டிங்

    வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில், க்ருனால் பாண்ட்யா நீக்கப்பட்டு, மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

    18:24 (IST)10 Nov 2019

    ஆட்சியமைக்க போவதில்லை

    மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சியமைக்க போவதில்லை

    மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்

    மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ்-என்சிபியுடன் சிவசேனா ஆட்சியமைத்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    -சந்திரகாந்த் பாட்டில்

    17:54 (IST)10 Nov 2019

    ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம்

    பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை துவங்கி இம்மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இதற்காக, 688 பெயர் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில், 550 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதேபோல நாளை மறுநாள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 353 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ சார்பில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களும் புறக்கணிக்கப்படாமல், தகுதி வாய்ந்தவர்களை முன்னுரிமை பட்டியலில் சேர்த்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    17:54 (IST)10 Nov 2019

    விமானப்படையின் 87ஆவது ஆண்டு கொண்டாட்டம் : சாகசங்கள் நிகழ்த்திய போர் விமானங்கள்

    மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இந்திய விமானப்படையின் 87-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ''ஏர் ஃபெஸ்ட் 2019'' என்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் விமானப்படையின் ராணுவ ஹெலிகாஃப்டர்கள், போர் விமானங்கள், வானில் சாகசங்கள் நிகழ்த்தி காட்டின. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். மேலும், இதில் ஏராளமான சிறுவர் - சிறுமியர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    17:53 (IST)10 Nov 2019

    மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு

    யானைக்கல் கீழ் பாலம், ஓபுளா படித்துறை கீழ் பாலம் ஆகியவை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தம்.

    வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றின் கரை ஓரங்களில் செல்லவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை.

    17:52 (IST)10 Nov 2019

    கலந்தாய்வில் பங்கேற்க முடியாது - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

    ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

    17:51 (IST)10 Nov 2019

    தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த்

    தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியலில் வெற்றிடம் இருந்தால் அதனை பொதுமக்கள் மட்டுமே நிரப்ப முடியும் என்று கூறினார்.

    17:51 (IST)10 Nov 2019

    சாட்டிலைட் போன்களில் சிக்னல் கிடைக்கவில்லை - தருவைகுளம் கிராம மீனவர்கள் புகார்

    தூத்துக்குடியில் மீனவர்களுக்கு அரசு வழங்கிய சாட்டிலைட் ஃபோன்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. தருவைகுளத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், மீன்பிடிப்பிற்கு செல்கின்றனர். இந்நிலையில் மீன்வளத்துறை சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட சாட்டிலைட் ஃபோன்கள் சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததாகவும், தற்போது அவற்றுக்கு சிக்னல் கிடைப்பதில்லை என்றும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், பேரிடர் காலங்களில் தகவல் தெரிவிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவர்கள் கூறினர். இந்நிலையில், சாட்டிலைட் ஃபோன்களை பயன்படுத்துவது குறித்து மீனவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    17:50 (IST)10 Nov 2019

    நெல்லையில் கனமழை

    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    17:50 (IST)10 Nov 2019

    உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம் - கே.பி.அன்பழகனுக்கு முதலமைச்சர் புகழாரம்

    உயர்கல்வியில் தமிழகம் சகாப்தம் படைத்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு புகழாரம் சூட்டினார். தர்மபுரி மாவட்டம் காரியமங்கலத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், எந்தத் துறையை கொடுத்தாலும், அதில் சாதித்துக் காட்டக் கூடியவர் என, அமைச்சர் கே.பி.அன்பழகனை பாராட்டினார். 2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அதிமுக மக்கள் இயக்கம் என்பது நிரூபணமாகி விட்டதாகவும், அப்போது அவர் குறிப்பிட்டார்.

    17:15 (IST)10 Nov 2019

    தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது

    “நடிகர் ரஜினி கூறியது போல் தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது; ஜெயலலிதா, கருணாநிதி போல் ஈர்ப்புவிசை கொண்ட தலைவர்கள் இப்போது இல்லை” - பொன்.ராதாகிருஷ்ணன்

    16:58 (IST)10 Nov 2019

    ரூ.71.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் தங்கம், ஈரான் நாட்டு குங்குமப்பூக்களை கடத்தி வந்த 3 பேர் கைது

    ரூ.71.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.63.6 லட்சம் மதிப்புள்ள ஈரான் குங்குமப்பூக்கள் பறிமுதல்

    16:26 (IST)10 Nov 2019

    சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

    இறுதிச்சுற்று படம் புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். சூரரைப் போற்று படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் மாறன் என்று வைக்கப்பட்டுள்ளது.

    16:08 (IST)10 Nov 2019

    பதில் கூற விரும்பவில்லை - ரஜினி

    தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறியதற்கு, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்று பதிலளித்தது குறித்து ரஜினியிடம் மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'பதில் கூற விரும்பவில்லை' என்று ரஜினி மறுத்துவிட்டார்.

    15:43 (IST)10 Nov 2019

    அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    15:41 (IST)10 Nov 2019

    எங்களுக்கு சூப்பர் ஓவர் ராசியே கிடையாதா!!? - புலம்பும் நியூசிலாந்து

    இங்கிலாந்து - நியூசிலாந்து 5வது டி20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக இந்தப் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து 146 ரன்கள் சேர்த்தது, பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 146 ரன்கள் சேர்த்தது.

    ஆட்டம் சமநிலையில் முடிந்ததால், இவ்விரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. சூப்பர் ஓவரில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 17 ரன்கள் குவித்தது. 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

    14:44 (IST)10 Nov 2019

    உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு – அதிமுக அறிவிப்பு

    உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவ.15, 16ல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்   என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

    நகர்மன்ற தலைவர் பதவி ரூ.10,000, நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவி ரூ.2,500, பேரூராட்சி தலைவர் பதவி ரூ.5,000 கட்டணம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ1,500, மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.5,000 கட்டணம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    13:53 (IST)10 Nov 2019

    அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி

    புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளனர். சேலத்தில் புகழேந்தி முன்னிலையில் நடைபெற்ற அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, புகழேந்தி கூறியதாவது, தினகரனை நம்பிச் சென்றவர்களை அவரால் காப்பாற்ற முடியவில்லை அமமுக என்னும் கம்பெனியை நம்பி இனி இளைஞர்கள் வீண் போக வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

    13:06 (IST)10 Nov 2019

    துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தங்கமகன் விருது

    ரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு சிகாகோ உலக தமிழ்ச்சங்கம் சார்பாக ‘தங்க தமிழ் மகன்’ விருது வழங்கப்பட்டது.

    12:11 (IST)10 Nov 2019

    சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்? – இயக்குநர் பா.ரஞ்சித் டுவீட்

    ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்?? என்று இயக்குனர் பா. ரஞ்சித் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அயோத்தி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ரஞ்சித்தின் இந்த டுவிட் முக்கியத்துவம் பெறுகிறது.

    11:46 (IST)10 Nov 2019

    பப்ஜி விளையாட்டுக்கு தடை – ராமதாஸ் கோரிக்கை

    இளைஞர்களின் கல்வியை சீரழித்து வன்முறையை வளர்க்கும் ப‌ப்ஜி இணைய ஆட்டத்தை தமிழக அரசு தடை செய்யவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    11:07 (IST)10 Nov 2019

    மிசாவில் ஸ்டாலின் சிறை சென்றதற்கு அமெரிக்காவில் ஆதாரம் இருக்கிறது – எ.வ.வேலு

    ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றார் என்பதற்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் ரெக்கார்டு இருக்கிறது. இஸ்மாயில் கமிஷனின் அறிக்கையை கையோடு கொண்டு வந்திருக்கிறேன். நம் கட்சிக்காரர்கள் எழுதியதல்ல இது. உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்பவர், தமிழர் நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று கூறுபவர் பாண்டிய ராஜன். தமிழர்களுக்கு ரெண்டகம் செய்கிறார் பாண்டியராஜன் என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    10:31 (IST)10 Nov 2019

    திமுக பொதுக்குழு தீர்மானங்கள்

    திமுக பொதுக்குழு கூட்டம், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக மறைந்த பரிதி இளம்வழுதி, சுஜித் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    திமுக உட்கட்சி தேர்தல் அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும்

    உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தற்போதுள்ள நிர்வாகிகளின் அங்கீகாரம் நீட்டிக்கப்படுகிறது.

    வெளிநாடுவாழ் தமிழர்கள் இணையதளம் மூலம், திமுக உறுப்பினராக சேர்க்க விதிகளில் திருத்தம், திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்க விதிகளில் திருத்தம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    10:07 (IST)10 Nov 2019

    ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் துவங்கியது

    திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    09:32 (IST)10 Nov 2019

    தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 21பைசா அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.92 ஆகவும், டீசல்,விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.67 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

    09:27 (IST)10 Nov 2019

    நீதித்துறையில் முத்திரை பதித்த தீர்ப்பு – பொன் ராதாகிருஷ்ண‌ன்

    உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அயோத்தி தீர்ப்பு நீதித்துறையில் பதித்த முத்திரை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், யாருக்கும் பாதகமின்றி, அனைவராலும் வரவேற்கப்படும் இந்த தீர்ப்பு மனதுக்கு நிறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

    Tamil Nadu news today live updates பத்து நாள் அரசு பயணமாக அமெரிக்கா சென்று உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், அங்கு குளிர் அதிகமாக இருப்பதால், வேட்டி, சட்டை மீது, மேல்கோட் அணிந்தபடி, நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளார். 1௦ நாள் அரசு முறை பயணமாக, சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    அயோத்தி வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பு குறித்து பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியதாவது:கர்தார்பூர் சிறப்பு பாதை திறப்பு விழா நடைபெறும் நேரத்தில், அயோத்தி குறித்து தீர்ப்பு அளித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இந்த சந்தோஷ நேரத்தில், மிகவும் முக்கியமான பிரச்னையில் தீர்ப்பு அளித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்; தீர்ப்பை, வேறொரு நாளில் அளித்திருக்கலாம்.இந்தியாவில், முஸ்லிம்கள் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த தீர்ப்பு, அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறினார். இதற்கு, வெளியுறவுத் துறை பதிலடி கொடுத்துள்ளது. 'இந்தியாவின் உள் விவகாரங்களில் வெறுப்பு கருத்து சொல்லும் நோய் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், வெறுப்புணர்வை விதைக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது' என, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார்.

    Tamil Nadu Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment