Advertisment

இன்றைய செய்திகள் : குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு - டிஎன்பிஎஸ்சி

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona lockdown extend

Tamil nadu news today updates : 'கொரோனா' வைரஸ் தாக்கும் என்ற வதந்தியால், தமிழகத்தில், கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதை, மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், முட்டை விலை, 3 ரூபாயாகவும், கிலோ கோழி இறைச்சி, 60 ரூபாயாகவும் சரிவடைந்து, கோழி பண்ணையாளர்களுக்கு, 1,350 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தைத் தெளிய வைக்கும் வகையில், 'கோழி இறைச்சி சாப்பிடுவதால் எந்த பிரச்னையும் வராது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா வைரஸ் பரவலால், இந்த மாதத்தில், ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வெளியூர், வெளிநாடுகள் செல்வதை, மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதையடுத்து ரயில்வேயில் 60 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய் யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.விமான பயணியரும் டிக்கெட்களை ரத்து செய்துள்ளதால், விமான நிறுவனங்களும், பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:09 (IST)19 Mar 2020

    குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு

    குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    21:30 (IST)19 Mar 2020

    3 நுழைவு வாயில்கள் மூடல்

    சென்னையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்தின் 3 நுழைவுவாயில்கள் மூடப்பட்டன. 

    20:09 (IST)19 Mar 2020

    கொரோனா எதிரொலி: தமிழகத்தில் அனைத்து வாரச்சந்தைகளையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

    கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பெரிய நகைக்கடைகள், பெரிய ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் நாளை முதல் மூடப்படும் என அறிவித்துள்ளது.

    19:56 (IST)19 Mar 2020

    28 ஆக அதிகரிப்பு

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

    19:35 (IST)19 Mar 2020

    இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் என்ன அறிவிப்பார்? - ப.சிதம்பரம் கேள்வி

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் என்ன அறிவிப்பார்?... 2-4 வார காலத்திற்கு குறைந்தபட்சம் அனைத்து நகரங்கள், மாநகரங்களையாவது மொத்தமாக மூடுவதை பிரதமர் அறிவிக்காவிட்டால் நான் ஏமாற்றமடைவேன். அதற்கு குறைவான எதுவும் இந்த நாட்டை வீழ்த்திவிடும்.” என்று டுவிட் செய்துள்ளார்.

    19:00 (IST)19 Mar 2020

    ம.பி சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

    மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில், ம.பி. சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

    18:33 (IST)19 Mar 2020

    கொரோனா எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை - ஆந்திர அரசு

    கொரோனா பரவலை தடுக்க, ஆந்திர மாநில அரசு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    18:14 (IST)19 Mar 2020

    முதியோர், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல் - மத்திய அரசு

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு, முதியோர் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். அவசரம், அத்தியாவசிய பணிகள் தவிர வீட்டிலேயே இருந்து பணியாற்ற வேண்டும். ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மாணவர்கள் மற்றும் நோயாளிகளைத் தவிர மற்றவர்களுக்கான பயண சலுகைகள் ரத்து செய்யட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    17:29 (IST)19 Mar 2020

    கொரோனா எதிரொலி: மார்ச் 22 முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை - மத்திய அரசு

    கொரோனா எதிரொலி, மார்ச் 22-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    17:01 (IST)19 Mar 2020

    இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு

    கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 72 வயது முதியவர் உயிரிழந்தார். இதன் மூலம், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு.

    16:38 (IST)19 Mar 2020

    தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

    அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு

    16:37 (IST)19 Mar 2020

    பாஸ்போர்ட் முகவரி ஆய்வுக்கு செல்லும் போலீசார் முகக்கவசம் அணிய வேண்டும் -துணை கமிஷனர்

    கொரோனா எதிரொலியால், பாஸ்போர்ட் முகவரி ஆய்வுக்கு செல்லும் நுண்ணறிவு பிரிவு போலீசார் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்தால் சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என்று துணை ஆணையர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

    15:31 (IST)19 Mar 2020

    நிர்பயா குற்றவாளி அக்‌ஷய்; கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்‌ஷய் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் மேல்முறையீடு முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    15:00 (IST)19 Mar 2020

    ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்ததாக நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய விரைந்த புதுவை போலீஸ்

    புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து பேசியதாக, நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய அம்மாநில போலீசார் நாகர்கோவில் சென்றனர்.

    14:59 (IST)19 Mar 2020

    கொரோனா எதிரொலி: மத்திய அரசின் 50% B,C பிரிவு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என அறிவிப்பு

    கொரோனா எதிரொலியாக 50% B,C பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும்; எஞ்சிய 50% B,C பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    14:36 (IST)19 Mar 2020

    கொரோனா: தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்

    கொரோனாவால் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    14:18 (IST)19 Mar 2020

    தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - அமைச்சர் காமராஜ்

    மத்திய அரசு பல மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் அமல்படுத்திவரும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் அமலுக்கு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

    13:43 (IST)19 Mar 2020

    பள்ளிக்கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி

    கொரோனா அச்சறுத்தலால், 27ம் தேதி துவங்க உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டுமல்லாது நடைபெற்று வரும் 11,12ம் பொதுத்தேர்வுகளும் ஒத்திவைத்து புதிய தேர்வு அட்டவணையை வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    13:06 (IST)19 Mar 2020

    துப்புரவு பணியாளர்களின் கோரிக்கை - முதல்வர் ஏற்பு

    துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர் என்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

    13:04 (IST)19 Mar 2020

    டப்பாவாலாக்கள் அதிரடி முடிவு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மும்பையில் உணவு சேவை வழங்கி வரும் டப்பாவாலாக்கள் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

    12:44 (IST)19 Mar 2020

    தமிழகத்தில் இன்றுமுதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இன்று (19ம் தேதி) முதல் தமிழகத்தில் அனைத்துவிதமான சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

    12:41 (IST)19 Mar 2020

    சென்னை விமானநிலையம் ‘வெறிச்’

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பயணிகள் வருகை குறைவு, விமானங்கள் ரத்து காரணமாக வெறிச்சோடி கிடக்கும் சென்னை விமான நிலையம்.

    publive-image

    12:25 (IST)19 Mar 2020

    கூட்டம் கூடினால் நடவடிக்கை - டெல்லி காவல்துறை

    கொரோனா பீதி காரணமாக, தலைநகர் டெல்லியில், 5 பேருக்கு மேல் கூட்டமாக கூடினால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.

    12:02 (IST)19 Mar 2020

    கொரோனா பீதி - டீக்கடைகளுக்கு புதிய உத்தரவு

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக, சென்னையில் உள்ள டீக்கடைகள், கிளாஸ்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    11:51 (IST)19 Mar 2020

    பதவியேற்றார் கோகோய்

    உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவை உறுப்பினராக நியமித்ததை அடுத்து, அவர் இன்று மாநிலங்களவையில் உறுப்பினராக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

    publive-image

    11:09 (IST)19 Mar 2020

    மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்க வந்தார் கோகோய்

    உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவை உறுப்பினராக நியமித்ததை அடுத்து, அவர் பதவியேற்க நாடாளுமன்றம் வருகை தந்தார். இவரின் இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    publive-image

    10:58 (IST)19 Mar 2020

    168 ரயில்கள் ரத்து

    கொரோனா அச்சம் காரணமாக, ம்ககள் ரயில் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். ரயில்களில் போதிய முன்பதிவு இல்லாததால் 168 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    10:31 (IST)19 Mar 2020

    கொடைக்கானலில் அனைத்து தங்கும் விடுதிகளும் மூடல்

    கொடைக்கானலில் இன்று அனைத்து தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கொடைக்கானலில் வைத்து விடுதிகளும் மூடியுள்ளனர். நேற்றே பெரும்பாலான விடுதிகள் மூடப்பட்டதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வெளியேறினர்.

     

    10:03 (IST)19 Mar 2020

    கொரோனா பாதிப்பு 169 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், சீனாவில் புதிதாக எந்தவொரு கொரோனா பாதிப்பும் கண்டறிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    09:49 (IST)19 Mar 2020

    50 வயதைக் கடந்தவர்கள் வெளியே நடமாட தடை -ராஜஸ்தான் அரசு உத்தரவு

    ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த மாநில முதல்வரான அசோக் கெலாட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் கூட்டமாக கூடக் கூடாது. மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, 50 வயதைக் கடந்தவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை விதிக்கப்படுகிறது. அரசின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்தத் தடை விதிக்கப்படுகிறது. 

    09:42 (IST)19 Mar 2020

    பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

    சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது. தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

    09:39 (IST)19 Mar 2020

    கைதாகிறார் நாஞ்சில் சம்பத்

    2019 தேர்தல் பிரசாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை விமர்சித்த விவகாரத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் நடவடிக்கை.  நாகர்கோவில் அருகே உள்ள இல்லத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய முயற்சி -கைதாக மறுப்பதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Tamil nadu news today updates : கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இந்தியா அதிக விலை கொடுக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா வைரஸ் தாக்குதலை திறம்பட எதிர்கொள்ள, உடனடியான அதிரடி நடவடிக்கைகள் தேவை. இந்த விவகாரத்தில், தீர்க்கமாக செயல்பட, மத்திய அரசு தவறியதற்கு, நம் நாடு, மிக அதிக விலை கொடுக்கப் போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக கொரோனா பிரச்னைக்கு இந்தியா சரியான நடவடிக்கையை எடுக்காவிட்டால் இந்தியப் பொருளாதாரம் அழிந்துவிடும் என ராகுல் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

    சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது நடைபெற்று வரும் தேர்வுகள் வரும் 31 ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் பல்கலை கழகங்களில் நடைபெற்று வரும் ஜேஇஇ மெயின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Tamil Nadu Coronavirus Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment