Advertisment

Tamil Nadu News Highlights : ஓபிசி இட ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துக - கமல்ஹாசன்

Tamil Nadu News : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள் லைவ் அப்டேட்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Today News Live Updates

Tamil Nadu Today News Live Updates

Tamil News Today : ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜுலை.27) சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதாவது, முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

Advertisment

பிளஸ்-2 இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று (ஜுலை.27) மறுதேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மட்டுமே மறுதேர்வை எழுத இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. நினைவிடத்தில் கலாமின் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செய்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:44 (IST)27 Jul 2020

    சிபிஐ (எம்) எம்எல்ஏக்கள் அசோக் கெலாட்  தலைமையிலான அரசிற்கு ஆதரவு

    ராஜஸ்தானில் இரண்டு சிபிஐ (எம்) எம்எல்ஏக்கள் அசோக் கெலாட்  தலைமையிலான அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.  

    22:31 (IST)27 Jul 2020

    “தற்காலிக” ஓய்வூதியம் வழங்கப்படும்: ஜிதேந்திரசிங்

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதியப் பட்டுவாடா உத்தரவு மற்றும் இதர அலுவலக நடைமுறைகள் முடிவடையும் வரை, “தற்காலிக” ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர்  ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.

    இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்," கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, அலுவலகப் பணிகள் தடைபட்டிருப்பதால் ஓய்வூதிய பட்டுவாடா ஆணையை வழங்க முடியவில்லை. எனவே, தற்காலிக ஓய்வூதியம்” மற்றும் “தற்காலிகப் பணிக்கொடை” போன்றவற்றைத் தடையின்றி வழங்குவதற்கேற்ப விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

    22:17 (IST)27 Jul 2020

    ஓபிசி இட ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துக- கமல்ஹாசன்

    OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.  

    21:08 (IST)27 Jul 2020

    நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் அதிமுகவில் இருந்து நீக்கம்

    கட்சியின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.   

    21:04 (IST)27 Jul 2020

    தமிழக அரசிற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி : துணை முதல்வர் பன்னீர் செல்வம்

    மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை அறிந்து வரவேற்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றிபெற தமிழக அரசிற்கு துணை நின்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.  

    20:13 (IST)27 Jul 2020

    அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) ராபர்ட் ஓ’பிரையனுக்கு கொரோனா

    அதிபர்  டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) ராபர்ட் ஓ’பிரையனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  

    20:07 (IST)27 Jul 2020

    தொழில்களின் ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்கு ஒற்றைச் சாளர முறை - அமைச்சர் பியூஷ் கோயல்

    நாட்டிலுள்ள தொழில்களின் ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்கு ஒற்றைச் சாளர முறையை அரசு விரைவில் அமைக்கவிருக்கிறது என்று வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    நில வங்கி ஒன்றை அமைப்பதற்கு அரசு பணியாற்றி வருவதாகவும், ஆறு மாநிலங்கள் ஏற்கனவே தங்களது ஒப்புதலை இதற்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம், முதலீடு செய்ய விரும்புவோர் நில உரிமையாளர் முகமைகளுக்கு அடிக்கடி வந்து செல்லும் தேவையில்லாமல், தொலைவில் உள்ள தங்களது அலுவலங்களில் இருந்தே நில வங்கிகளை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.

    20:00 (IST)27 Jul 2020

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ தற்கொலை

    சென்னை தியாகராய நகரில் விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    19:56 (IST)27 Jul 2020

    நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா

    நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கன்னியாகுமாரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆகும். நாடுமுழுவதுமிருந்து சுமார் 500 பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்." id="lbcontentbody">

    19:51 (IST)27 Jul 2020

    நாளை கின்னஸ் உலக சாதனையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்

    மத்திய அரசு, நமது நாட்டில் உள்ள புலிகள் எண்ணிக்கையை கேமரா மூலம் கண்காணித்து கணக்கெடுக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணித்து கணக்கெடுப்பதில் இந்தியா கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த சாதனையை 2020 உலகப் புலிகள் தினத்தன்று நமது நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சி, நாளை (ஜூலை 28-ந் தேதி) புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. இதனை காண்பதற்கான இணைப்பு ஆகும். நாடுமுழுவதுமிருந்து சுமார் 500 பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

    19:44 (IST)27 Jul 2020

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது- முதல்வர் பழனிசாமி

    இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடத்தை ஒதுக்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு  வரலாற்று சிறப்புமிக்கது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.  

    19:38 (IST)27 Jul 2020

    கொரோனா குணமடைவோர் எண்ணிக்கை 9 லட்சத்தை (9,17,567) கடந்தது

    தொடர்ந்து 4-வது நாளாக, ஒரு நாளில் குணமடைவோரின் எண்ணிக்கை 30,000-க்கும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,991 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதன் விளைவாக இதுவரை இத்தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை (9,17,567) கடந்துள்ளது. குணமடையும் விகிதம் 64 விழுக்காடாக உள்ளது.

    19:31 (IST)27 Jul 2020

    வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 37 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 37 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    19:08 (IST)27 Jul 2020

    தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 5,723 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 5,723 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணடமைந்தவர்களின் மொத்த என்ணிக்கை 1,62,249 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:17 (IST)27 Jul 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 6,993 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 3,500ஐ தாண்டியது

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 77 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:28 (IST)27 Jul 2020

    அதிக திறன் கொண்ட கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் திறப்பு - பிரதமர் மோடி

    பிரதமர் மோடி: இந்தியாவில் 11,000க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 11 லட்சம் படுக்கைகள் உள்ளன. இந்த ஆய்வகங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 10,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட பாதிப்பு குறைவாக உள்ளது. தினமும் 3 லட்சம் என் 95 முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று கூறினார்.

    17:24 (IST)27 Jul 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேர்மையுடனும் உண்மையுடனும் அரசு எடுத்துவருகிறது - முதல்வர்

    தமிழக முதல்வர் பழனிசாமி, “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேர்மையுடனும், உண்மையுடனும் அரசு எடுத்து வருகிறது. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தில் மருத்துவ வசதிகள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

    17:10 (IST)27 Jul 2020

    சென்னை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை ஜூலை 27 முதல் தொடக்கம்

    சென்னை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் UG/PG/MCA/MBA/ Diploma and Certificate படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ஜூலை 27ம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும், விவரங்களுக்கு: http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    16:22 (IST)27 Jul 2020

    ஐஸ்வர்யா ராய், அவரது மகள் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா கொரோனாவில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு வீடு திரும்பியதாக ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். மேலும், உங்களுடைய தொடர்ச்சியான பிரார்த்தனைக்கும் நல்வாழ்த்துகளுக்கும் நன்றி. அதற்கு என்றென்றைக்கும் கடன் பட்டுள்ளோம் என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். ஆனால், அபிஷேக் பச்சனும் அவரது தந்தை அமிதாப் பச்சனும் இன்னும் மருத்துவமனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    15:23 (IST)27 Jul 2020

    பொதுமுடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட தடையில்லை - உச்ச நீதிமன்றம்

    பொதுமுடக்க காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்ஹ்டரவுக்கு இடைக்காலத் தடை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக் விவகாரத்தில் ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    15:09 (IST)27 Jul 2020

    மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு: ஐகோர்ட் தீர்ப்பு சமூக நீதிக்கான வெற்றி - அமைச்சர் ஜெயக்குமார்

    அமைச்சர் ஜெயக்குமார், “மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூக நீதிக்கான வெற்றி என்றும் இதில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    14:34 (IST)27 Jul 2020

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 360 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவடத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் 4432 பேர் குணமடைந்து டிஸ்சார் செய்யப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3000 பேர் சிகிச்சை பெற்ரு வருகின்றனர் என்று காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.

    14:25 (IST)27 Jul 2020

    ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் காமராஜ்

    உணவுத்துறை அமைச்சர் காமராஜ்: ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசம் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்கள் முகக் கவசம் பெற ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    13:45 (IST)27 Jul 2020

    விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

    ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

    சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த நித்திஸ் என்ற மாணவர் தற்கொலை

    இணையதள ஆன் லைன் விளையாட்டில் தன் பணத்தை இழந்தார், நித்திஸ்

    தான் வேலை பார்த்த கடையில் இருந்து 20,000 ரூபாய் பணத்தை திருடியதாக தகவல்

    திருடிய பணத்தையும் ஆன்லைன் விளையாட்டில் தோற்றதால் தற்கொலை

    விளையாட்டில் பணம் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை - நித்திஸ் எழுதிய கடிதம் கிடைத்தது

    13:42 (IST)27 Jul 2020

    2.28 சதவீதமாக குறைந்தது

    இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் விகிதம் 2.28 சதவீதமாக குறைந்தது.

    குணமடைந்தவர்களின் விகிதம் 64 சதவீதமாக உயர்வு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

    13:32 (IST)27 Jul 2020

    தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி

    ஓபிசி இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. 

    - சீமான்

    13:27 (IST)27 Jul 2020

    ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,376 ஆக உயர்வு

    சிகிச்சையில் 4,271 பேர், குணமடைந்தவர்கள் - 7,897 பேர்

    இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் 208 பேர் உயிரிழப்பு

    13:27 (IST)27 Jul 2020

    ஒருநாள் அனுமதிக்க முடியுமா?

    வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் பேசுவதற்கு ஒருநாள் அனுமதிக்க முடியுமா?

    - மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    13:06 (IST)27 Jul 2020

    வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

    ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது

    * மத்திய அரசு மேல்முறையீடு செய்யாமல் தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம்

    - அமைச்சர் ஜெயக்குமார்

    12:56 (IST)27 Jul 2020

    சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்

    கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    * சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு.

    * கந்தசஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் சுரேந்திரன்.

    12:35 (IST)27 Jul 2020

    ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன

    பிரான்சில் இருந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன.

    ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஒப்படைக்க திட்டம்.

    மத்திய அரசிடம் ரஃபேல் ஜெட் விமானங்களை இன்று ஒப்படைக்கிறது பிரான்ஸ் நிறுவனம்.

    12:29 (IST)27 Jul 2020

    பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    கொரோனா தொற்றுக்கு தான் கண்டுபிடித்துள்ள மருந்தை பரிசோதித்து வழங்க கோரி சித்த வைத்தியர் தொடர்ந்த வழக்கு

    சித்த மருத்துவ செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    12:27 (IST)27 Jul 2020

    காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் சதியில் மத்திய அரசு ஈடுபடுவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

    சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசார் கைது.

    12:26 (IST)27 Jul 2020

    மிதமான மழைக்கு வாய்ப்பு

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், தி.மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

    12:06 (IST)27 Jul 2020

    3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    புதுச்சேரியில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று; மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

    அங்கு இதுவரை தொற்றால் 2,872 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு.

    11:41 (IST)27 Jul 2020

    ஓபிசி இடஒதுக்கீடு - சட்டரீதியாக தடைகள் இல்லை

    ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    * இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது .

    * மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை - உயர்நீதிமன்றம்

    10:52 (IST)27 Jul 2020

    எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா

    புதுச்சேரி முதல்வர் - எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை!

    புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    10:51 (IST)27 Jul 2020

    குணமடைவோர் விகிதம் 63.92%

    கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.92% ஆக உயர்வு!

    குணமடைவோர் - உயிரிழப்போர் விகிதம் 96.55 : 3.45% ஆக தற்போது உள்ளது - மத்திய அரசு

    10:50 (IST)27 Jul 2020

    132 விலங்குகள் உயிரிழப்பு

    அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கியும், பிற காரணங்களாலும் இதுவரை 132 விலங்குகள் உயிரிழப்பு!

    98 வராக மான்கள், 14 காண்டாமிருகங்கள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழந்திருப்பதாக அசாம் அரசு தகவல்.

    10:50 (IST)27 Jul 2020

    மறுவாய்ப்பு தேர்வு தொடங்கியது

    தமிழகத்தில் 12-ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு தொடங்கியது!

    கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வை கொரோனா அச்சம் காரணமாக எழுதாமல் போனவர்களுக்கான மறுவாய்ப்பு தேர்வு இன்று தொடங்கியது.

    10:46 (IST)27 Jul 2020

    #apjabdulkalam ஹேஸ்டேக் - டிரெண்டிங்

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் #apj abdulkalam என்கிற ஹேஸ்டேக், இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

    10:46 (IST)27 Jul 2020

    ரூ.39,824க்கு விற்பனை

    ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்வு. ஒரு சவரன் விலை ரூ.39,824 ஆக அதிகரிப்பு. தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது.

    10:27 (IST)27 Jul 2020

    103 பேருக்கு கொரோனா

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    * பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,720ஆக உயர்வு

    09:57 (IST)27 Jul 2020

    திருமணத்தில் கலந்துகொண்ட 43 பேருக்கு கொரோனா

    கேரளாவின் காசர்கோடு பகுதியில் ஜூலை 17ம் தேதி நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட 43 பேருக்கு கொரோனா உறுதி!

    புதுமணத் தம்பதியருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

    மணமகளின் தந்தை மீது கேரளா தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு

    09:54 (IST)27 Jul 2020

    தண்டனை பெற்று தர வேண்டும்

    ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும்

    நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என நம்புகிறோம்

    - அரசு பணிநியமன ஆணை பெற்ற பின் ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ் பேட்டி

    09:53 (IST)27 Jul 2020

    பணி நியமன ஆணை

    சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

    சென்னை தலைமை செயலகத்தில் ஜெயராஜின் மகள் பெர்சிக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்

    09:52 (IST)27 Jul 2020

    கொரோனா எண்ணிக்கை 14.34 லட்சமாக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.34 லட்சமாக அதிகரிப்பு

    * நாடு முழுவதும் ஒரே நாளில் 49,931 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

    * கடந்த 24 மணி நேரத்தில் 708 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்

    09:51 (IST)27 Jul 2020

    16 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

    சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

    அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழப்பு.

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் உயிரிழப்பு

    அரசு மருத்துவமனைகளில் 13 பேர், சென்னை தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் உயிரிழப்பு

    09:51 (IST)27 Jul 2020

    240 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு

    * பாதிப்பு எண்ணிக்கை 10,045ஆக உயர்ந்துள்ளது

    * இதுவரை 7643 பேர் குணமடைந்தனர் சிகிச்சையில் உள்ளோர்- 1953

    * இதுவரை 210 பேர் உயிரிழப்பு

    09:50 (IST)27 Jul 2020

    பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த 706 பேர் - 6 விமானங்களில் சென்னை வந்தனர்

    வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 43 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 7 குழந்தைகள், 30 பெண்கள் உள்பட 68 பேரும், வியட்நாமில் இருந்து 3 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 72 பேரும் சென்னை வந்தனர். 6 சிறப்பு விமானங்களில் வந்த 706 பேரிடமும் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா சோதனைக்கு பின்னர், சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். வியட்நாமில் இருந்து வந்த 7 பேர் மட்டும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

    09:49 (IST)27 Jul 2020

    குணமடைந்து வீடு திரும்பினர்...

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேர் கொரோனா தடுப்பு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உட்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் வளாகத்திலுள்ள அரசு கொரோனோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 9 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர், குணமடைந்த 4 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, வீடு திரும்பினர். அவர்கள் தொடர்ந்து 7 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்

    09:48 (IST)27 Jul 2020

    ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக தோழமைக் கட்சிகள் கூட்டம்

    தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு விவரம் மற்றும் உயிரிழப்புகளை அரசு முழுமையாக வெளியிடாமல், தொடர்ந்து மறைத்து வருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வழியாக நடைபெறும் கூட்டத்தில், அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து விவாதிக்கப்படும் என்று, திமுக தலைமை தெரிவித்துள்ளது.

    09:47 (IST)27 Jul 2020

    மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்

    திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசும் தாக்கல் செய்த இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்ட இந்த இடங்களில் ஓ.பி.சிக்கு இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

    வெப்பசலனத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையிலேயே 63 சதவீத மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது என்றால், மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறதோ? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்) மராட்டியத்தின் மும்பை, மேற்குவங்காளத்தின் கொல்கத்தா மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய 3 இடங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.

    இந்த மையங்களை காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், முதலமைச்சர்கள் உத்தவ்தாக்கரே (மராட்டியம்), மம்தாபானர்ஜி (மேற்குவங்காளம்), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்) ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment