Advertisment

News Highlights: திமுக எம்எல்ஏ இதய வர்மனுக்கு போலீஸ் காவல்- கோர்ட் உத்தரவு

Tamil News updates : இதய வர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: திமுக எம்எல்ஏ இதய வர்மனுக்கு போலீஸ் காவல்- கோர்ட் உத்தரவு

Tamil News Today : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குமார் மற்றும் திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதய வர்மன் தரப்பினர் இடையே நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

Advertisment

இதில் சீனிவாசன் என்பவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ உள்பட 3 பேரும், எதிர்தரப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதய வர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம்; தொழில்நுட்ப துறையில் முதலீடுகளை நாடு வரவேற்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழகத்தில், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தாலும், சித்தா, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறைகள் இருப்பதால், பாதிப்பு கணக்கை பற்றி, கவலைப்பட தேவையில்லை. தொற்று பாதித்தவர்களுக்கு, இந்த மருத்துவ முறைகளில், சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை, எல்லா மாவட்டங்களிலும் ஏற்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு அதிகமாக இருந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், பீதியை விலக்கி, ஆரோக்கியமாக சிந்திக்க மக்கள் முன்வர வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:06 (IST)21 Jul 2020

    மருத்துவர்களை பற்றி தவறாக விமர்சனம் செய்யவில்லை - புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தான் மருத்துவர்களை பற்றி தவறாக விமர்சனம் செய்யவில்லை என்றும், மக்களை திசைதிருப்ப சில எம்எல்ஏக்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

    20:56 (IST)21 Jul 2020

    நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி டிஜிபிக்கு அவரது தாயார் பத்மா கடிதம்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறை டிஜிபிக்கு அவரது தாயார் பத்மா கடிதம் அளித்துள்ளார்.

    20:12 (IST)21 Jul 2020

    கர்நாடகாவில் நாளை முதல் முழு ஊரடங்கு நீக்கம் - முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

    கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் பொது முடக்கம் நீக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், அவர் பொதுமுடக்கத்தை நீட்டிப்பதால் பயனில்லை கொரோனாவுடன் போராடிக்கொண்டே பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    20:02 (IST)21 Jul 2020

    ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறும் - அறிவிப்பு

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18:55 (IST)21 Jul 2020

    தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 4,894 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4,894 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:18 (IST)21 Jul 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:00 (IST)21 Jul 2020

    திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

    திருப்போரூர் அருகே நிலத்தகறாரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ இதயவர்மனை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், செங்கல்பட்டு ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்துள்ளது.

    17:57 (IST)21 Jul 2020

    கறுப்பர் கூட்டம்: சுரேந்தர், செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனு

    கந்த சஷ்டி அவமதிப்பு வழக்கில் கறுப்பர் கூட்டம் சுரேந்தர், செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    17:23 (IST)21 Jul 2020

    கறுப்பர் கூட்டம்; கைதான 2 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

    கந்த சஷ்டி வீடியோ சர்ச்சை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரம் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    17:12 (IST)21 Jul 2020

    குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கொரோனா பரவல் காரணமாக ஜூலை 24ம் தேதி முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். மேலும், முழு ஊரடங்கின்போது, காய்கறி, மளிகை கடைகள், மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    17:01 (IST)21 Jul 2020

    புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஜூலை 24 முதல் 31 வரை முழு பொதுமுடக்கம் அறிவிப்பு

    புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஜூலை 24 முதல் 31ஆம் தேதி வரை தளர்வில்லா முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    16:40 (IST)21 Jul 2020

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு சுமார் 7,000 கனஅடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.

    16:28 (IST)21 Jul 2020

    சச்சின் பைலட், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை

    சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது ஜூலை 24 வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க கூடாது  என்று சட்டப்பேரவை சபாநாயகருக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் தீர்ப்பு 24ஆம் தேதி தீர்ப்பு வாசிக்கப்படுவதாகும் அறிவித்தது.       

    ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் திரு சச்சின் பைலட் உட்பட 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சட்டப்பேரவை செயலர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸை ஏதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் ராஜஸ்தான் நீதிமன்றம் தெரிவித்தது.   

    16:07 (IST)21 Jul 2020

    சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த மகேந்திரன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

    சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. சட்டவிரோத காவலில் வைத்து தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்ததாக வடிவு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணையில் தமிழக அரசு தெரிவித்தது.  

    15:10 (IST)21 Jul 2020

    காணொளி மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கலாம்

    6369 100 100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் காணொளி மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்தது.

    Image   

    15:05 (IST)21 Jul 2020

    சமூகநீதியை நிலைநாட்டும் ஜனநாயகப் போருக்குத் தயாராவோம் - ஸ்டாலின் அறிக்கை

    'இந்து மக்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் படிக்கவிடாமல், முன்னேறவிடாமல் தடுக்கும் பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்போம்; சமூகநீதிக்கான முட்பாதையை மாற்றி - பண்படுத்த ஜனநாயகப் போருக்குத் தயாராவோம்!” என்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்

    13:55 (IST)21 Jul 2020

    ஐ.பி.எல். போட்டித் தொடரை நடத்த அனுமதி - மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை

    இந்த ஆண்டு, டி20 உலகக் கோப்பை போட்டி நிறுத்தி வைக்கப்படுவதாக ஐ.சி.சி அறிவித்ததை அடுத்து, ஐ.பி.எல். போட்டித் தொடரை நடத்த அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.  

    13:39 (IST)21 Jul 2020

    லால்ஜி தண்டன் மறைவிற்கு அமித் ஷா ஆழ்ந்த வேதனை

    மத்தியப் பிரதேச ஆளுனர் லால்ஜி தண்டன் மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்ந்த வேதனை தெரிவித்தார். அவர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில்,லால்ஜி தண்டன் தமது ஒட்டுமொத்த வாழ்வையும் பொதுச் சேவைக்காக அர்ப்பணித்தவர் என்று கூறியுள்ளார்.

    13:37 (IST)21 Jul 2020

    இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை

    நாளை நடைபெற உள்ள இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்றவுள்ளார்.

    அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கவுன்சில் நிறுவப்பட்டு, இந்த ஆண்டுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன. நடப்பாண்டின் இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டின் மையப் பொருள் “சிறப்பான வருங்காலத்தை கட்டமைத்தல்” என்பதாகும்.

    இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு, பெருந்தொற்றுக்கு பிறகான உலகில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

    13:08 (IST)21 Jul 2020

    340 பேருக்கு கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,367ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.

    12:50 (IST)21 Jul 2020

    முதல்வர் பழனிசாமி இரங்கல்

    மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னதாக, டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    12:21 (IST)21 Jul 2020

    அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    சென்னை காசிமேட்டில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும். ன் வாங்க துறைமுகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    12:06 (IST)21 Jul 2020

    ஸ்வப்னாவின் என்.ஐ.ஏ காவல் நீட்டிப்பு

    கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் என்.ஐ.ஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கபபட்டுள்ளது. இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில் என்.ஐ.ஏ கோரிக்கையை ஏற்று ஸ்வப்னாவுக்கு 3 நாள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    11:43 (IST)21 Jul 2020

    81 சதவீதம் பேர் குணம்

    சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,456 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 70,651ஆக உயர்ந்துள்ளது.15,127 பேர் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    11:37 (IST)21 Jul 2020

    36 ஊராட்சி தலைவர்கள் மீது வழக்கு

    மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் விதிகளை மீறி போராட்டம் நடத்தியதாக செல்லம்பட்டி ஊராட்சியை சேர்ந்த 36 ஊராட்சி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    11:32 (IST)21 Jul 2020

    வீடியோக்கள் நீக்கம்

    கந்த சஷ்டி கவசம் சர்ச்சை வீடியோவையடுத்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் வீடியோக்கள் அனைத்தையும், சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர். சேனலை முடக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் Youtube நிறுவனத்திற்கு பரிந்துரைத்த நிலையில், 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    11:00 (IST)21 Jul 2020

    அமைச்சர் உதயகுமார் பேட்டி

    மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் நடத்துகிறது. மின்கட்டணம் குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்த நிலையில் தேவையின்றி திமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    10:32 (IST)21 Jul 2020

    திருப்பதியில் முழு ஊரடங்கு

    திருப்பதியில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, இன்று(ஜூலை 21) முதல் ஆக.,5ம் தேதி வரை 15 நாள் முழு ஊரடங்கு பிறப்பித்து சித்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே உணவங்கள், கடைகள் திறந்திருக்கும். அதன் பின் பால், மெடிக்கல் ஷாப்கள் மட்டுமே திறக்க அனுமதி உண்டு. திருப்பதியில் வசிப்பவர்கள், 11 மணிக்கு பின் வெளியில் நடமாட அனுமதியில்லை.

    10:21 (IST)21 Jul 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று (ஜூலை 21), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பெட்ரோல் விலை 23வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் இன்று மாற்றம் செய்யப்பட்டவில்லை.

    10:14 (IST)21 Jul 2020

    மின்கட்டண குளறுபடி- திமுக கறுப்புக் கொடியேந்தி போராட்டம்

    தமிழக அரசின் மின் கட்டண கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று மாநிலம் எங்கும் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    மின் கட்டணக் கொள்ளையடிக்கும் அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி முழக்கம்!

    https://t.co/gpW2pKoRRz— M.K.Stalin (@mkstalin) July 21, 2020

    Tamil nadu news today updates : கருப்பர்கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி செய்யப்படும் பரிசோதனைகள் துவங்கப்பட்டுள்ளன.நாட்டில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், 'பாரத் பயோடெக்' என்ற நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

    Tamil Nadu Dmk Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment