News Highlights : சோனியா காந்தி கட்சியின் இடைகாலத் தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் அறிவிப்பு

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Sonia Gandhi Interim President
Sonia Gandhi Interim President

Tamil News: ”வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் நினைவு நாளில், ‘அசுத்தமே வெளியேறு’ என, முழக்கமிடுவோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

கைகொடுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : கொரோனா இல்லாத நகரமாக மாறுகிறது சென்னை

மகாத்மா காந்தியின், ‘துாய்மையான இந்தியா’ எனும் கனவை நிறைவேற்றும் வகையில், கடந்த, 2014-, அக்டோபர், 2ல், ‘துாய்மை இந்தியா’ திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.துாய்மை இந்தியா திட்டம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையில், டில்லியில் உருவாக்கப்பட்டுள்ள,’ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா’ எனப்படும், தேசிய துாய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

”கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது, உயிர் சம்பந்தப்பட்டது. எனவே, குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம் என்பதால், நோய் பாதிப்பு குறைந்ததும், பள்ளிகள் திறக்கப்படும்,” என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


22:26 (IST)09 Aug 2020

சோனியா காந்தி கட்சியின் இடைகாலத் தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ்

கடந்த ஆண்டு, பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், புது தலைவரை தேர்ந்தேடுக்கும் வரை  கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.              

21:29 (IST)09 Aug 2020

‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ – ரஜினிகாந்த் ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

21:23 (IST)09 Aug 2020

சுயசார்பு இந்தியா கொள்கையைப் பரப்புவதில் வர்த்தகர்களின் பங்களிப்பு முக்கியம் – பியூஸ் கோயல்

சுயசார்பு இந்தியா கொள்கையைப் பரப்புவதற்கு வர்த்தகர்கள் அதிகமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்று மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.  தேசிய வர்த்தகர் தினத்தை முன்னிட்டு, காணொலி காட்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பியூஸ் கோயல், வர்த்தகர்கள் நாடு முழுவதும் வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் தரமற்ற பொருட்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

10 லட்சம் கோடி பொருட்கள் இறக்குமதியை நிறுத்தி, அதற்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

21:19 (IST)09 Aug 2020

ரயில்வே அமைச்சகம் விளக்கம்

இந்திய ரயில்வேயில் 8 பிரிவுகளில் உள்ள பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக வெளியான விளம்பரம் குறித்து  ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளம்பரம் வெளியீடு சட்டவிரோதமானது என்றும், இதை வெளியிட்ட நிறுவனம் மீது ரயில்வேத்துறை கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றும் தெரிவித்தது.

21:15 (IST)09 Aug 2020

சென்னை – போர்ட் பிளேயர் இடையே கடலுக்கடியில் கேபிள் திட்டம் – நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

தகவல் தொடர்பு இணைப்புக்காக, சென்னை – போர்ட் பிளேயர் இடையே கடலுக்கடியில் அமைக்கப்பட்ட கண்ணாடியிழை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

21:13 (IST)09 Aug 2020

எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமூகத்திற்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்- ராகவா லாரன்ஸ்

அரசியலில் நுழைந்து, அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் மக்களுக்கு சேவை புரிவேன் என்று சொல்வதை விட, எந்தவித  எதிர்பார்ப்புமின்றி, சத்தமில்லாமல் சமூகத்திற்கு சேவை செய்வது சிறந்தது என்று நான் நம்புகிறேன் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.  

Image

20:17 (IST)09 Aug 2020

கறுப்பர் கூட்டத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் விசாரிக்கவில்லை – எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “கறுப்பர் கூட்டத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் விசாரிக்கவில்லை. கறுப்பர் கூட்டத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை; அவரது நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

19:35 (IST)09 Aug 2020

ரஷ்யாவில் நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் உள்ள வோல்கோகிராட் நகர் வோல்கா நதியில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற பெரம்பூரை சேர்ந்த மாணவர் உட்பட 4 பேர் நதியில் மூழ்கி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

19:29 (IST)09 Aug 2020

சென்னையில் பல நாட்களுக்குப் பிறகு இன்று 1000க்குள் பதிவான கொரோனா தொற்று

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,09,117 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பல நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் தொற்று 1000க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில் இன்று 989 தொற்று பதிவாகி உள்ளது.

18:25 (IST)09 Aug 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

16:55 (IST)09 Aug 2020

#CommonDP வெளியானது

நடிகர் ரஜினியின் 45 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள #CommonDP வெளியானது!

16:50 (IST)09 Aug 2020

1,300 பேருக்கு கொரோனா

‘டெல்லியில் மேலும் 1,300 பேருக்கு கொரோனா’

டெல்லியில் ஒரே நாளில் புதிதாக 1300 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,45,427 ஆக அதிகரிப்பு; 4111 பேர் உயிரிழப்பு

கொரோனாவிலிருந்து 1,30,587 பேர் குணமடைந்த நிலையில் 10,729 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

16:33 (IST)09 Aug 2020

தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி

ஜம்மு – காஷ்மீர் : பூஞ்ச் மாவட்ட எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

16:32 (IST)09 Aug 2020

362 பேருக்கு கொரோனா

‘திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 362 பேருக்கு கொரோனா’

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 362 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16,975 ஆக அதிகரிப்பு

* கொரோனாவிலிருந்து 12,929 பேர் குணமடைந்த நிலையில் 3,403 பேர் சிகிச்சையில் உள்ளனர்

16:01 (IST)09 Aug 2020

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு PlayBoy

“சாக்லேட் பாய் என்று என்னை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் ஒரு PlayBoy!”

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்!

16:00 (IST)09 Aug 2020

6 பேர் உயிரிழப்பு

‘விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு’

ஜார்க்கண்ட்: தியோகர் பகுதியில் விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்

* கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்

15:56 (IST)09 Aug 2020

‘என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’

நான் இ-பாஸ் எடுக்காமல் சென்றிருந்தால் ஏன் என் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை?

தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர்

– உதயநிதி ஸ்டாலின்

15:55 (IST)09 Aug 2020

பலியானோர் எண்ணிக்கை 42

மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

* 12 பேர் உயிருடன் மீட்பு – கனமழையிலும் தொடரும் மீட்பு பணிகள்

* மத்திய இணையமைச்சர் முரளீதரன் சம்பவ இடத்தில் ஆய்வு

* நிலச்சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் தமிழர்கள்

15:26 (IST)09 Aug 2020

பெண் சர்வேயர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு

* கொரோனா சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி என்ற 45 வயது சர்வேயர் பலி

* உடன் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலருக்கும், கிராம உதவியாளருக்கும் கொரோனா உறுதி

15:17 (IST)09 Aug 2020

‘நான் அதிருப்தியில் இல்லை’ – ஜெகத்ரட்சகன்

‘நான் அதிருப்தியிலும் இல்லை ; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை’

சமூக வலைதளங்களில் தேவையின்றி இப்படி வதந்தி பரப்புவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது

– திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்

15:16 (IST)09 Aug 2020

எண்ணிக்கை10 ஆயிரத்தை கடந்தது

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை10 ஆயிரத்தை கடந்தது

பாதிப்பு எண்ணிக்கை 10,382 ஆக உயர்வு

15:16 (IST)09 Aug 2020

375 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 375 பேருக்கு கொரோனா

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,786 ஆக உயர்வு

இதுவரை 302 பேர் உயிரிழப்பு

2,689 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14, 420 பேர் குணமடைந்துள்ளனர்

14:33 (IST)09 Aug 2020

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? – கனிமொழி ட்வீட்

திமுக எம்.பி.கனிமொழி தனது ட்விட்டரில், ‘இன்று விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாததால், CISF அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினேன். அந்த அதிகாரியோ நீங்கள் இந்தியர் தானே என்று கேட்டார்; இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

14:24 (IST)09 Aug 2020

விஜயவாடா தீ விபத்து – குடியசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

விஜயவாடாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், நிகழ்ந்த தீ விபத்து குறித்த செய்தி அறிந்த பின்னர், துக்கத்தில் சிக்கியதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், தமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளதாகவும், காயமடைந்தவர்களை விரைவாக மீட்க விரும்புவதாகவும், ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

14:12 (IST)09 Aug 2020

எண்ணிக்கை 37ஆக உயர்வு

கேரளா மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக உயர்வு

* நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன

14:12 (IST)09 Aug 2020

4வது முறையாக இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்த ராஜபக்ச

இலங்கையின் பிரதமராக இதற்கு முன் 3 முறை இருந்துள்ள ராஜபக்ச தற்போது 4-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார். கேபினட் அமைச்சர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோர் நாளை பொறுப்பேற்க உள்ளனர். இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு வெற்றியை மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி கூட்டணி பெற்றது. 196 இடங்களில் 150 இடங்களை இலங்கை மக்கள் கட்சி பெற்றது.

இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரசியல்கட்சித் தலைவரும் பெறாத வகையில் 5 லட்சம் வாக்குகளைப் பெற்று மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்.

இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது திருத்தத்தின்படி, அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த திருத்தத்தை ரத்து செய்து, அதிபரின் அதிகாரத்தை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் 150 இடங்களுக்கு மேல் தேவை. இப்போது ராஜபக்சவுக்கு அந்த அதிகாரம் வந்திருப்பதால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13:55 (IST)09 Aug 2020

மரண எண்ணிக்கையில் எதுவும் மறைக்கப்படவில்லை

“தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது. இந்திய மருத்துவசங்கத்தின் தமிழக தலைவரும் இதனை மறுத்துள்ளார். கொரோனா மரண எண்ணிக்கையில் எதுவும் மறைக்கப்படவில்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

13:42 (IST)09 Aug 2020

கேரள முதல்வருடன் முதல்வர் பழனிசாமி பேச்சு

கேரள மாநிலம் இடுக்கியில் நிகழ்ந்த நிலச்சரிவு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உடன், தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்தியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என முதல்வர்பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

13:11 (IST)09 Aug 2020

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரில் மூழ்கடித்து உள்ளன மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்து ஓடுவதால் நடைபாதை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12:59 (IST)09 Aug 2020

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வழியாக துவக்கிவைத்தார். பின் அவர் பேசியதாவது, நடப்பு ஆண்டில் வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ள மத்திய பிரதேச விவசாயிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். அன்னை பூமியை காக்க குறைந்த அளவிலான யூரியாவை பயன்படுத்த வேண்டும். விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த முன்வருவோருக்கு கடன் உதவி அளிக்கப்படும். வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களே, நேரடியாக விற்பனை செய்ய முடியும். ஒரே தேசம், ஒரே சந்தை என்பது சாத்தியப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12:46 (IST)09 Aug 2020

குணமடைந்தார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

12:23 (IST)09 Aug 2020

ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் கனமழை பெய்துவரும் நிலையில், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு, ஆழலப்புழா, காசர்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12:09 (IST)09 Aug 2020

தமிழக அரசு அனுமதி

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து  அரசின் வழித்தடங்களில் இயக்கலாம் என்று போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

12:02 (IST)09 Aug 2020

ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மதுவிற்பனை

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.44.55 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளன.

11:10 (IST)09 Aug 2020

பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை

சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அமைப்புடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

10:35 (IST)09 Aug 2020

சோழவந்தான் எம்எல்ஏவுக்கு கொரோனா

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10:30 (IST)09 Aug 2020

தமிழகம் முதலிடம்

கொரோனா வைரஸ் பரிசோதனை அதிகம் செய்த மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 31,55,619 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தெரிவித்துள்ளது.

09:55 (IST)09 Aug 2020

21.53 லட்சம் ஆக அதிகரிப்பு

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.53 லட்சமாக அதிகரித்துள்ளது. 43,379 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 14,80,884 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

09:49 (IST)09 Aug 2020

விஜயவாடா ஓட்டலில் தீ விபத்து: 7 பேர் பலி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

09:26 (IST)09 Aug 2020

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஆக., 09), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை 42வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் 15வது நாளாக விலை மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

09:19 (IST)09 Aug 2020

வானிலை மையம் அறிவிப்பு

வங்க கடலின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகம் மற்றும் கர்நாடகாவின் மலை மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என, பிரதமர் மோடி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயினும், அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றுகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளில், பலரும் நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக சுகாதாரதுறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news today live coronavirus tamil nadu e pass nep modi

Next Story
கைகொடுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : கொரோனா இல்லாத நகரமாக மாறுகிறது சென்னைCorona virus, chennai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express