Advertisment

Tamil News Today : உ.பி-யில் டிஎஸ்பி உள்பட 8 போலீசார் சுட்டுக்கொலை- ரவுடிகள் அட்டூழியம்

Tamil News updates : ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை தரப்பில் மேலும் சிலர் காயம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
National Crime Records Bureau leaves out data on lynchings, khap and religious killings - குற்றச் சம்பவங்களில் உ.பி. நம்பர்.1 - தமிழகத்துக்கு என்ன இடம் தெரியுமா? - என்சிஆர்பி ரிப்போர்ட்ஸ்

National Crime Records Bureau leaves out data on lynchings, khap and religious killings - குற்றச் சம்பவங்களில் உ.பி. நம்பர்.1 - தமிழகத்துக்கு என்ன இடம் தெரியுமா? - என்சிஆர்பி ரிப்போர்ட்ஸ்

Tamil News Today :உத்தரப்பிரதேச மாவட்டத்தில் பி: கான்பூரில் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசாரை ரவுடிகள் சுட்டுக்கொன்றுள்ளன் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ரவுடி விகாஸ் துபேவை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையின்போது காவல்துறையினர் 8பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை தரப்பில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர்.

டாக்டர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து, நம் உயிரை காப்பாற்றுகின்றனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, தனித்த சித்தா சிகிச்சை முகாமில், 27 நாட்களில், 514 பேர் நலம் பெற்று, வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனாவால், 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sathankulam Live : சாத்தான்குளம் சம்பவத்தில் அடுத்தடுத்த திருப்பம்… காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது!

பாதிப்பின் தன்மைக்கேற்ப, அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாத நிலையில், அலோபதியில் கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அலோபதியுடன், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் என, சித்த மருத்துவத்துடன் இணைந்த சிகிச்சைக்கும், நல்ல பலன் கிடைத்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:40 (IST)02 Jul 2020

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு; கைதான 3 காவலர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

    சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலைவழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோரை ஜூலை 16 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    21:12 (IST)02 Jul 2020

    சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: ‘எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க?’ஹர்பஜன் சிங் வேதனை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை குறித்து ஹர்பஜன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

    20:23 (IST)02 Jul 2020

    அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

    அறந்தாங்கியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலைக்கு காரணமான குற்றாவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    19:51 (IST)02 Jul 2020

    அறந்தாங்கியில் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை; ஒருவர் கைது

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    19:41 (IST)02 Jul 2020

    தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த 3,095 பேர் டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த 3,095 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது.

    18:50 (IST)02 Jul 2020

    தமிழகத்தில் புதிய உச்சம் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:30 (IST)02 Jul 2020

    அறந்தாங்கியில் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் உறுதி

    அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில், “புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    18:05 (IST)02 Jul 2020

    என்.எல்.சியில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு

    நெய்வேலி என்.எல்.சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் விபத்தில் காயமடைந்தோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    17:57 (IST)02 Jul 2020

    2018 -19 கல்வியாண்டில் பி.எட். சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து; தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவிப்பு

    யு.ஜி.சி. அனுமதி தராததால் 2018 -19 ஆம் கல்வியாண்டில் பி.எட். சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    17:23 (IST)02 Jul 2020

    வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவு

    ஏழ்மையான மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞர்களாக பணியாற்ற 3 ஆண்டுகள் தேவைப்படுவதால், வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதி உதவி வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    16:56 (IST)02 Jul 2020

    ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் ரூ.18,148 கோடியில் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

    ரஷ்யாவிடம் இருந்து 12 சுகோய்-30, எம்.கே.ஐ, மிக் 29எஸ் ரக போர் விமானங்களை ரூ.18,148 கோடியில் வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    16:49 (IST)02 Jul 2020

    கொரோனா பாதித்த உளுந்தூர்பேட்டை, பரமக்குடி எம்.எல்.ஏ.க்களை நலம் விசாரித்தார் முதல்வர்

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் இருவரையும் தமிழக முதல்வர் பழனிசாமி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் குறிப்பிடுகையில், “உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அவர்கள் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய செய்தி அறிந்து அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

    15:55 (IST)02 Jul 2020

    NLC விபத்து இறந்தவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் நிதியுதவியை வழங்கிட வேண்டும் - முதல்வர்

    நேற்றைய தினம் (1.7.2020)  NLC விபத்து பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விசாரித்த போது ,  மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.   .

    15:49 (IST)02 Jul 2020

    கிஷான் கடன் அட்டை திட்டம்: 62 ஆயிரத்து 870 ‍கோடி ரூபாய் கடன் வழங்க மத்தியஅரசு  ஒப்புதல்.  

    தன்னிறைவு இந்தியா திட்டத்தின் மூலம் 72 லட்சம் கிஷான் கடன் அட்டைகளுக்கு 62 ஆயிரத்து 870 ‍கோடி ரூபாய் கடன் வழங்க மத்தியஅரசு  ஒப்புதல்.  

    15:17 (IST)02 Jul 2020

    ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேலும் ஒரு புதிய வழக்கு

    மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய  மனுவை தாக்கல் செய்தது.    

    15:14 (IST)02 Jul 2020

    தூத்துக்குடி செக்காரக்குடியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு

    தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

    15:11 (IST)02 Jul 2020

    109 இணையான பயணப்பாதைகளில் தனியார் பங்களிப்பு : கோரிக்கைகள் வரவேற்பு

    குறிப்பிட்ட 109 இணையான பயணப்பாதைகளில் பயணிகள் ரயில் சேவையை மேற்கொள்ள தனியார் பங்கேற்பிற்கு ரயில்வே அமைச்சகம் தகுதிக்கான கோரிக்கைகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் சுமார் ரூ.30,000 கோடி தனியார் துறை முதலீடு பெறப்படும் என்று தெரிவிக்கக்பட்டது. குறைந்த பராமரிப்பு தேவைப்படுகின்ற, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, குறைந்த பயண நேரம் பிடிக்கின்ற, வேலைவாய்ப்பினை அதிகரிக்கின்ற, கூடுதலான பாதுகாப்பை வழங்குகின்ற, உலகத் தரத்திலான பயண வசதியை வழங்குகின்ற வண்டிகளை அறிமுகப்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும். 

    14:42 (IST)02 Jul 2020

    மத்தியப்பிரதேசத்தில் இன்று 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்

    மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங்செளகான் தலைமையிலான அரசின் அமைச்சரவை 2-ஆவது முறையாக  இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது . புதிதாக இன்று 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

    14:40 (IST)02 Jul 2020

    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவையை 4-ஜி-க்கு தரம் உயர்த்தும் ஒப்பந்தப்புள்ளி ரத்து

    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவையை 4-ஜி-க்கு தரம் உயர்த்தும் ஒப்பந்தப்புள்ளி ரத்து. சுய சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தும் வகையில், புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    14:39 (IST)02 Jul 2020

    திமுக எம்எல்ஏ மூர்த்திக்கு முன்ஜாமீன், அடையாறு மருத்துவமனைக்கு ரூ 50,000 செலுத்த உத்தரவு

    மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் வாழ்ந்து வந்த மதுரை பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியனை, தாக்க முயன்ற வழக்கில்,  மதுரை கிழக்குச் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது.

    14:02 (IST)02 Jul 2020

    மதுரையில் கோவிட்- 19 மருத்துவ முகாம்: அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்

    இன்று மதுரைமாநகராட்சி சார்பில் நடமாடும் கோவிட்- 19 மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    மதுரை மக்கள் இந்த அருமையான வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை பரிசோதித்து, பயனடையும்படி எஸ். பி வேலுமணி வேண்டுகோள் விடுத்தார்.

    13:29 (IST)02 Jul 2020

    மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 பேர் பலி

    மியான்மர் நாட்டில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மியான்மர் நாட்டில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு வேலைப்பார்த்து வந்த 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    13:17 (IST)02 Jul 2020

    கொரோனா மையம் திறப்பு

    சென்னை சானடோரியத்தில் அமைந்துள்ள நெஞ்சக மருத்துவமனையில் கொரோனா வகைப்படுத்துதல் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.

    12:50 (IST)02 Jul 2020

    கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்

    போலியான முகவரியில் குழப்பம் ஏற்படுவதால், இனி கொரோனா பரிசோதனைக்கு ஆதார் அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரோனா அறிகுறியோடு சளி மாதிரி சோதனைக்கு வரும் சிலர் தொடர் சிகிச்சை, தனிமைப்படுத்தலுக்கு பயந்து போலியான முகவரிகளை கொடுத்துள்ளனர். அப்படி போலியான முகவரி,  செல்போன் எண் கொடுத்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை காவல் துறையின் உதவியோடு தேடி வருகின்றனர்.

    12:32 (IST)02 Jul 2020

    திருவள்ளூரில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,139 ஆக உயர்ந்துள்ளது. 

    12:07 (IST)02 Jul 2020

    பரமக்குடி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

    பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகர் மற்றும் அவரது உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    11:35 (IST)02 Jul 2020

    சென்னை மக்கள் வீடியோ கால்மூலம் குறைகளை கூற ஏற்பாடு- கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

    சென்னை மக்கள் வீடியோ கால்மூலம் குறைகளை கூற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். அத்தியாவசியம் இல்லாமல் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக் கூடாது என்று மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    11:06 (IST)02 Jul 2020

    24 பேர் உயிரிழப்பு

    சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

    10:49 (IST)02 Jul 2020

    சென்னையில் கொரோனா பாதிப்பு பட்டியல்

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

    10:26 (IST)02 Jul 2020

    திருச்சியில் வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா அறிகுறி

    திருச்சியில் கோட்டை மதுரம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் 50 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    10:01 (IST)02 Jul 2020

    6,04,641 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,04,641 ஆக உயர்ந்துள்ளது. 3,59,860 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் 17,834 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:31 (IST)02 Jul 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று (ஜூலை 02), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், 4வது நாளாக இன்றும், விலையில் மாற்றமின்றி, அதே விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

    09:26 (IST)02 Jul 2020

    அனைத்து வீடுகளிலும் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்

    சென்னையில் நாளுக்குள் நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றின் முக்கியத்துவத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் உதவி எண்கள் அடங்கிய சுவரொட்டி, சென்னையின், அனைத்து மண்டலங்களில் உள்ள வீடுகளின் முன்பும் ஒட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் மண்டல வாரியாக அவசரகால உதவி எண்கள் மற்றும் ரிப்பன் மாளிகையின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களும் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    Tamil nadu news today updates : தென் மேற்கு பருவகாற்று தீவிரமடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நாட்டின் பாதுகாப்பு கருதி, 'டிக்டாக், ஷேர்இட், ஹலோ' உள்ளிட்ட, சீன நிறுவனங்களின், 59 மொபைல் போன், 'அப்ளிகேஷன்ஸ்' என்ற செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்காவில் ஆதரவு அதிகரித்துள்ளது.

    Corona Virus Greater Chennai Corporation
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment