Advertisment

News Highlights: பிளஸ் 2 மறு கூட்டல், ஜூலை 24 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: பிளஸ் 2 மறு கூட்டல், ஜூலை 24 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Tamil News Today Updates: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியான நிலையில் மறுகூட்டல் மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள்களை பெறுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பாடங்கள், விடைத்தாள் நகல் வேண்டும் பாடங்களின் விவரம் ஆகியவற்றை மாணவர்கள் பூர்த்தி செய்து தர வேண்டும். அந்த விவரங்களைக் கொண்டு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கர்நாடகாவில் இன்று முதல் பொது முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பொது முடக்கத்தால் மட்டுமே பயனில்லை எனவும், முக கவசம் அணிவது, தனி மனித இடைவெளி விடுவதால் மட்டுமே தடுக்க முடியும் என பொது மக்களுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உரையாற்றியுள்ளார். குடியாத்தம் நகராட்சியில் வரும் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் 8 நாட்களுக்கு முழு முடக்கம்.

 

 

தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1.80 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 4894 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் விகிதம் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:38 (IST)22 Jul 2020

    சிறைவிதிகளை மீறியதாக புகார்; நளினிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து

    சிறைவிதிகளை மீறிய புகாரில் வேலூர் சிறையில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. பார்வையாளர்கள் நளினிக்கு பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இந்த நடவடிக்கை என தெரியவந்துள்ளது.

    21:29 (IST)22 Jul 2020

    அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை; பிரதமர் மோடி பங்கேற்பு

    அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கு நடைபெறும் பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    20:50 (IST)22 Jul 2020

    பிளஸ்-2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம்

    பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம்

    என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    19:50 (IST)22 Jul 2020

    தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 4,910 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று 4,910 குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதன் மூலம், மாநிலத்தில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,31,583 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:35 (IST)22 Jul 2020

    தமிழகத்தில் புதிய உச்சம்; இன்று 5849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:12 (IST)22 Jul 2020

    தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வெற்றி - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    17:25 (IST)22 Jul 2020

    மீண்டும் திமுகவில் இணைந்தார்

    வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார்

    * காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்

    17:24 (IST)22 Jul 2020

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - 7 பேரின் விடுதலை தீர்மானம் - ஆளுநர் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். புழல் சிறையில் 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதற்கு நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்தார். மேலும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள், வழக்கை ஜூலை 29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    17:12 (IST)22 Jul 2020

    இடி மின்னலுடன் கனமழை

    தேனி : உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர், ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை

    17:10 (IST)22 Jul 2020

    பிளாஸ்மா தானம் வழங்கலாம்

    கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்கலாம்;

    18 - 60 வயதுகுட்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்கலாம்;

    கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவர் 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் வழங்கலாம்!

    17:05 (IST)22 Jul 2020

    ரேஷன் கடைகளில் அடுத்த வாரம் முதல் இலவச முக கவசங்கள்

    தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முக கவசம் வழங்க அரசு செய்துள்ளது. அதன்படி, 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர்களுக்கு தலா இரண்டு முக கவசங்கள் வழங்கப்பட உள்ளது. அவை, மறு பயன்பாடு செய்யக் கூடிய துணி முக கவசங்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 கோடி முக கவசங்கள் தயாராக உள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலவச முக கவசங்களை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் துவக்கி வைக்க உள்ளார்.

    16:39 (IST)22 Jul 2020

    210 பேருக்கு கொரோனா

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    * பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,443ஆக அதிகரிப்பு

    16:17 (IST)22 Jul 2020

    மின் கட்டண சலுகை கோரி திமுக நடத்திய போராட்டம் - சென்னையில் 150 திமுகவினர் மீது போலீசார் வழக்குபதிவு

    மின் கட்டண சலுகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்த திமுகவினர் 150 மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க கோரி திமுகவினர் அவரவர் வீடுமுன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னையில் ஊரடங்கை மீறி சட்ட விரோதமாக திமுகவினர் கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராயப்பேட்டை, அபிராமபுரம்,கோடம்பாக்கம் உட்பட 6 காவல் நிலையங்களில் 150 திமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், தொற்று நோய் பரவல் தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    15:50 (IST)22 Jul 2020

    58 விமானங்கள் இயக்கம்

    வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கம்

    சிறப்பு விமானங்கள் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரை இயக்கம்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

    15:50 (IST)22 Jul 2020

    ஆக.5 வரை நீதிமன்ற காவல்

    சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு - 3 காவலர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது சிபிஐ

    3 பேரையும் 3 நாள் விசாரணைக்கு எடுத்த சிபிஐ 1 நாள் முன்னதாகவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது

    விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

    சாத்தான்குளம் வழக்கில் 3 காவலர்களுக்கு ஆக.5 வரை நீதிமன்ற காவல்

    15:12 (IST)22 Jul 2020

    ரூ.367 கோடி நன்கொடை

    கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.367 கோடி நன்கொடை வந்துள்ளது

    * மே 15ஆம் தேதி முதல் நேற்றுவரை 10 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் விவரமும் வெளியீடு

    - தமிழக அரசு

    15:07 (IST)22 Jul 2020

    ரூ.1.59 கோடி செலவில் நிவாரணம்

    சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஐடிசி நிறுவனம் ரூ.1.59 கோடி செலவில் நிவாரணம் வழங்கியுள்ளது.

    * நிவாரண நிதி அளித்த அனைவருக்கும் முதலமைச்சர் நன்றி

    15:06 (IST)22 Jul 2020

    பொதுமக்களிடமிருந்து நிதியுதவி

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 394 கோடி வரப்பெற்றுள்ளது

    * கொரோனா - பொது நிவாரண நிதி குறித்து தமிழக அரசு விளக்கம்

    * தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், வாரியங்கள், பொதுமக்களிடமிருந்து நிதியுதவி வந்துள்ளது - தமிழக அரசு

    15:03 (IST)22 Jul 2020

    301 பேருக்கு கொரோனா தொற்று

    விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 301 பேருக்கு கொரோனா தொற்று

    * 2 மருத்துவர்கள், 3 காவல்துறையினர், சிவகாசியில் 61, ஸ்ரீவில்லிபுத்தூரில் 70 பேர் உட்பட 301 பேருக்கு கொரோனா

    * விருதுநகரில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4000 ஐ கடந்தது

    15:01 (IST)22 Jul 2020

    மிதமான மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    * நாளை வடகடலோர தமிழகம், சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம்

    14:34 (IST)22 Jul 2020

    அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று

    * அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், சிபிஐ விசாரணை ஒருநாள் முன்னதாகவே நிறைவு

    14:29 (IST)22 Jul 2020

    10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் முதல்வாரத்தில் வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்

    10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிட நடவடிக்கை-11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    14:26 (IST)22 Jul 2020

    கொரோனா உதவிகளை முதல்வர் சமமாக செய்து வருகிறார் - வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்

    கொரோனா நோய் தடுப்பு பணி ஒருபுறம் பொருளாதார சிக்கல் இல்லாமை, மக்களுக்கு தேவையான பொருள்கள் கிடைப்பது, மாணவர்கள் கல்வி, விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்வது போன்றவற்றை தமிழக முதல்வர் சமமாக செய்து வருகிறார் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    13:56 (IST)22 Jul 2020

    கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா? மாநகராட்சி ஆணையர் விளக்கம்

    சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்ல, கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை வர  நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்துதான் கூற முடியும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.  

    முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கேளம்பாக்கம் பண்ணைவீட்டில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

    13:11 (IST)22 Jul 2020

    சென்னையில் கொரோனா பரிசோதனை

    சென்னையில் 5 லட்சம் பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு விரைவில் சோதனை நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

    12:14 (IST)22 Jul 2020

    ரஜினிகாந்த் பாராட்டு

    11:40 (IST)22 Jul 2020

    கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

    கேரளாவில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காணொலி மூலம் பங்கேற்க முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறவிருக்கிறது. கேரளாவில் இதுவரை 13,994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    11:26 (IST)22 Jul 2020

    தங்கம் மற்றும் வெள்ளி விலை

    சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.68 உயர்ந்து, ரூ.4785 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,280. வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    10:58 (IST)22 Jul 2020

    சென்னையில் கொரோனா பலி

    சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 13 பேர் கொரோனோ தொற்றால் உயிரிழப்பு. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை - 3, ஸ்டான்லி அரசு மருத்துவமனை - 3 பேர் கொரோனாவுக்கு பலி. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழப்பு

    10:32 (IST)22 Jul 2020

    புதுக்கோட்டை துப்பாக்கி சூடு சம்பவம்

    புதுக்கோட்டை மாவட்டம் போச்சம்பள்ளியில் மோதலை தவிர்க்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

    10:18 (IST)22 Jul 2020

    ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா

    ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உள்பட 17 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று

    10:06 (IST)22 Jul 2020

    இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் இல்லை - மத்திய அரசு விளக்கம்

    மக்கள் தொகையில் 20% மட்டுமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அது சமூகப் பரவலாக இருக்க முடியாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

    இந்தியாவின் இரண்டு நிறுவனங்கள் கொரோனாவைரஸ் பரவலை தடுக்க தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முனைப்பில் உள்ளது. ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் பாரத் பயொடெக் நிறுவனம் கோவாக்ஸின் என்ற மருந்தை கண்டறிந்துள்ளது. மனிதர்கள் மீதான முதற்கட்ட சோதனை நல்ல முடிவுகளை தர இரண்டாம் கட்ட சோதனை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஹரியானாவில் முதலில் மனிதர்களுக்கு பரிசோதனை துவங்கியது. பக்கவிளைவுகள் ஏதும் இதுவரை இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட் செய்திருந்தார்.
    Coronavirus Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment