Advertisment

Tamil Nadu news today updates: லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை இனி தமிழகத்தில் - முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம்

இது போன்ற மற்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த பிளாக்கை பின் தொடருங்கள்.  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates: லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை இனி தமிழகத்தில் - முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம்

Tamil Nadu news today updates : பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வளரிவான் , 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Advertisment

ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி நளினி  தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு "பிட் இந்தியா" இயக்கத்தை துவங்கி வைத்தார் நரேந்திர மோதி.

இது போன்ற மற்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த பிளாக்கை பின் தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines :  தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், வானிலை செய்திகள், தங்க விலைகள், பெட்ரோல்/டீசல் நிலவரங்களை கீழே காணலாம்.      



























Highlights

    20:58 (IST)29 Aug 2019

    என்ஐஏ விசாரணை நிறைவு

    கோவையில் 5 பேரிடம் நடந்த என்ஐஏ விசாரணை நிறைவு - சதாம் ஹூசேன், முகமது யாசீர் ஆகியோர் நாளை கொச்சி அலுவலகத்தில் ஆஜராக சம்மன்.

    20:58 (IST)29 Aug 2019

    முதிய தம்பதிகள் வீட்டில் கொள்ளை சம்பவம் - டிஎஸ்பி மாற்றம்

    நெல்லையில் முதிய தம்பதிகள் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தை விசாரித்து வந்த அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சாஹீர் ஹூசைன், ஆலங்குளம் காவல் சரகத்திற்கு மாற்றம்.

    20:57 (IST)29 Aug 2019

    36 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

    தமிழகம் முழுவதும் 36 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக சிவகங்கை மாவட்டத்திற்கு ராமகிருஷ்ணன், தேனி மாவட்டத்திற்கு பாண்டிசெல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    20:10 (IST)29 Aug 2019

    லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை இனி தமிழகத்தில் - ஒப்பந்தம் கையெழுத்து

    லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவ முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. டெங்கு, மலேரியா நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல் & அந்நோய்களை கையாளும் முறைகள் தொடர்பாக நோக்க அறிக்கை லண்டனில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

    20:09 (IST)29 Aug 2019

    காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் விமர்சிக்கிறார் - அமைச்சர் ஜெயக்குமார்

    காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். மற்ற மாநிலங்களில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் செயல்படுத்தப்பட்ட புதிய தொழில் திட்டங்களை காட்டிலும், தமிழகத்தில் பல மடங்கு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    19:44 (IST)29 Aug 2019

    10 ஆண்டு சிறை தண்டனை

    சென்னை ராயப்பேட்டையில் 11 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில், வெங்கடேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு.

    19:04 (IST)29 Aug 2019

    7 பேர் விடுதலை குறித்து தீவிர பரிசீலனை

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்,

    19:03 (IST)29 Aug 2019

    9 லட்சம் கொள்ளை

    ஓசூரில் மாதேஷ் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ரூ.9 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கீழே செல்போன் கிடப்பதாக ஏமாற்றி, ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடி உள்ளனர்.

    18:38 (IST)29 Aug 2019

    முட்டை கொள்முதலில் பழைய முறைப்படி டெண்டர்

    சத்துணவு முட்டை கொள்முதல் செய்ய பழைய முறைப்படி டெண்டர் கோர கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

    18:30 (IST)29 Aug 2019

    வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா

    உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.

    17:55 (IST)29 Aug 2019

    பாஜகவில் 7 கோடி பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் - பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா

    புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் பாஜகவில் 7 கோடி பேர் புதிதாக இணைந்துள்ளதாக பாஜக தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

    17:41 (IST)29 Aug 2019

    பிரதமர் மோடியின் பிறந்த நாளை மக்கள் சேவை வாரமாக கடைபிடிக்க பாஜக முடிவு

    பிரதமர் மோடியின் பிறந்த நாள் செப்டம்பர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 14ஆம் தேதி முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை மக்கள் சேவை வாரமாக கடைபிடிக்க உள்ளது பாஜக முடிவு செய்துள்ளது.

    17:29 (IST)29 Aug 2019

    இங்கிலாந்தில் கோட் சூட்டில் சென்று என்.எச்.எஸ் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட் சூட்டில் இங்கிலாந்தில் உள்ள என்.எச்.எஸ் நிறுவனத்துக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    17:22 (IST)29 Aug 2019

    மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

    மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கினார்.

    17:16 (IST)29 Aug 2019

    பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

    சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கினார்.

    17:10 (IST)29 Aug 2019

    லண்டனில் கோட்சூட்டில் கலக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி, லண்டனில் கோட்சூட்டில் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து வருகிறார். தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் வேட்டி சட்டை அணிந்தே பொது நிகழ்ச்சிகளில் காணப்பட்ட அவர், லண்டனில் கோட்சூட்டில் அதிகாரிகளை சந்தித்து கலக்கி வருகிறார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அயல்நாடுகளில் மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணித்தரத்தின் மேம்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது. #ISDC #TNGovt pic.twitter.com/KFDcVJd4S9

    17:07 (IST)29 Aug 2019

    தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படம், வசனத்தை சிக்ஸர் படத்தில் பயன்படுத்தியதாக நடிகர் கவுண்டமணி குற்றச்சாட்டு

    இயக்குனர் சாச்சி இயக்கத்தில் நடிகர் வைபவ் ரெட்டி, சதிஷ், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சிக்சர். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படம், வசனத்தை சிக்ஸர் படத்தில் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    15:46 (IST)29 Aug 2019

    அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு பற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் கூடுதல் அறிவிப்பு

    பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தின்படி, விடுமுறை நாளில், நீர் நிலைகளில் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் வழங்கப்படும். பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கினாலும் நிவாரணம் வழங்கப்படும். மேலும், விஷ பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.

    15:31 (IST)29 Aug 2019

    தமிழகத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

    அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் துவக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    15:21 (IST)29 Aug 2019

    மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து தகராறு; காரில் வந்தவர்கள் துப்பாக்கிச்சூடு

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் காரில் வந்தவர்கள் கட்டணம் செலுத்த மறுத்து தகராறில் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியால் சுட்டவரை சுங்கச்சாவடி ஊழியர்களே மடக்கிப் பிடித்தனர். காரில் வந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 4 பேர் தப்பி ஓடினர்.

    15:17 (IST)29 Aug 2019

    உள்நாட்டு பாதுகாப்பில் தமிழக காவல்துறைக்கு அக்கறை உள்ளதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

    உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், உள்நாட்டு பாதுகாப்பில் தமிழக காவல்துறைக்கு அக்கறை உள்ளதா? என்றும் எத்தனையோ உளவு அமைப்புகள் இருந்தாலும் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் அவர்களின் பணி என்ன..? உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    15:05 (IST)29 Aug 2019

    தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு லண்டனில் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு

    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமிக்கு லண்டனில் லண்டன் வாழ் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் “மருத்துவத்துறை மற்றும் பிற துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும் வெளிநாடு சென்ற மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு லண்டனில் லண்டன்வாழ் தமிழர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.” என்று தெரிவித்துள்ளார்.

    14:59 (IST)29 Aug 2019

    அரசுமுறைப் பயணமாக ஃபின்லாந்து சென்றார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

    கல்வியில் சிறந்து விளங்கும் ஃபின்லாந்து நாட்டுக்கு சென்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அங்குள்ள இந்திய தூதரகத்தில், இந்திய அரசு தூதுவர் வாணி ராவை சந்தித்து உரையாடினார்.

    14:50 (IST)29 Aug 2019

    சாதனைகளையும் சோதனைகளையும் எடைபோட்டு பார்ப்பதில்லை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    சென்னை அண்ணா அறிவாலையத்தில் திமுக எம்.பி.-க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்: “தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையடுத்து, என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சாதனைகளையும் சோதனைகளையும் நன் எடைபோட்டு பார்ப்பதில்லை. சிலர் என்னை விமர்சித்து எழுதியுள்ளனர் அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

    14:42 (IST)29 Aug 2019

    மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

    வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    14:34 (IST)29 Aug 2019

    முக்கிய விமான நிலையங்களில் உடலை ஸ்கேன் செய்யும் கருவி ஓராண்டில் நிறுவப்படும் - மத்திய அரசு

    இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் உடலை ஸ்கேன் செய்யும் கருவி ஓராண்டில் நிறுவப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உடலை ஸ்கேன் செய்யும் கருவி 2 ஆண்டுகளில் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    14:30 (IST)29 Aug 2019

    ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கிவைத்தார் - பிரதமர் மோடி

    டெல்லியில், ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உடற்பயிற்சி செய்வோம் என்று உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    14:26 (IST)29 Aug 2019

    காஞ்சிபுரம் அருகே ஏரியில் வெடிகுண்டு, ராக்கெட் உதிரி பாகங்கள் கண்டெடுப்பு

    காஞ்சிபுரம் அருகே அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ஏரியில் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் உதிரி பாகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டவை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    14:20 (IST)29 Aug 2019

    முதல்போக சாகுபடிக்கு முல்லைப் பெரியாறில் இருந்து தண்ணீர் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

    மூல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று விவசாய பாசனத்துக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்துவைத்தார். இது குறித்து துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்று (29.8.2019) முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீரை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.. #TNGovt #PeriyarDam” என்று குறிப்பிட்டுள்ளார்.

    14:09 (IST)29 Aug 2019

    சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் - முதல்வர் முன்னிலையில் கையெழுத்து

    தமிழக முதலமைச்சர் பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ளார். இன்று இங்கிலாந்தில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட 2 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலமைசர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

    மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி தரத்தினை மேம்படுத்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    14:05 (IST)29 Aug 2019

    ஓமன் நாட்டில் சிக்கிய தமிழ்ப்பெண் மீட்பு

    ஓமன் நாட்டில் ரூ.2.5 லட்சத்திற்கு விற்கப்பட்டு அங்கே கொத்தடிமையாக இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.

    12:37 (IST)29 Aug 2019

    பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர்

    பாக்கிஸ்தான் நிர்வகிக்கும்  காஷ்மீர் என்பது இன்றைய ஜம்மு-காஷ்மீரின் ஒரு  பகுதியாகும். 1947 இல் பாகிஸ்தானால் படையெடுக்கப்பட்டு அந்நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.   

    கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஜம்மு-கஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 

    இந்நிலையில், பாக்கிஸ்தான் நிர்வகிக்கும்  காஷ்மீர் பகுதியில் தனி நாடாய் அமைக்கக் கோரி அங்கு மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.   

    10:57 (IST)29 Aug 2019

    தேசிய விளையாட்டுத் தினம்

    ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளைக் கொண்டாடும்  விதமாக ஆகஸ்ட் 29-ஐ தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடி வருகிறது இந்தியா.   

    10:45 (IST)29 Aug 2019

    நளினி மனு தள்ளுபடி

    ராஜீவ் கொலை வழக்கில், ஆயுள் கைதிகள் என்று தீர்பளிக்கப்பட்ட தங்கள் ஏழு பேரையும் முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

    10:38 (IST)29 Aug 2019

    பிட் இந்திய இயக்கம்

    பிரதம மந்திரி  இன்று  இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் பிட் இந்திய இயக்கத்தை தொடங்கி வைத்தார் நரேந்திர மோதி  

    10:26 (IST)29 Aug 2019

    மைக்கல் ஜாக்சனுக்கு பிறந்த நாள்

    பல  முகங்கள் கொண்ட மைக்கல் ஜாக்சனுக்கு இன்று பிறந்த நாள். அதை  முன்னிட்டு  உலகம் முழுவதும் ரசிகர்கள் இன்று மைக்கல் ஜாக்சனை நினைவு கூர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றனர் 

    1958ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் வாழ்ந்த குடும்பத்தில் 8-வது குழந்தையாக பிறந்தவர் மைக்கேல் ஜாக்சன் என்பது குறிப்பிடத் தக்கது 

    10:17 (IST)29 Aug 2019

    கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை:

    கோவையில் இன்று அதிகாலையில் இருந்து தேசிய புலனாய்வு முகமாய் அதிகாரிகள் (என்ஐஏ)  அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.  உக்கடம், கோட்டைமேடு, பிலால் எஸ்டேட், ஜிஎம் நகர் உள்ளிட்ட பகுதிகளில்  என்ஐஏ சோதனை நடத்தப் பட்டு வருகிறது.  

    10:05 (IST)29 Aug 2019

    தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்

    ரியோ டி ஜெனெரியோவில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் உலகக் கோப்பை போட்டியில்  தமிழகத்தின் கடலூரைச்  இளவேனில் வளரிவான் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்

    Tamil Nadu news today updates: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைதுக்கு எதிராக ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில்  நேற்று வழக்காடப்பட்டது. வாதத்தின் முடிவில் ஆக.29(அதாவது இன்று வரை ) ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நேற்று, லஞ்ச ஒழிப்புத்துறை  ஐ.ஜி. முருகனுக்கு எதிரான  பாலியல் வழக்கை தெலங்கானா காவல் துறைக்கு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment