Advertisment

Tamil Nadu news today updates : தர்பார் ரிலீஸ்: 4 நாட்கள் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் ரூ.78.69-க்கும், டீசல் ரூ.72.69-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates : மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறுகின்றன. இதில் அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் இயக்கமும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணிகள் பாதிக்கப்படும். இதனிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

பொங்கல் சிறப்பு பஸ்கள்: சென்னையில் இருந்து புறப்படும் இடங்கள் அறிவிப்பு

ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது. நிர்பயா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வர 30000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஜே.என்.யூ போராட்டத்தில் தீபிகா படுகோன் நேரில் பங்கேற்றார்

Live Blog

Tamil Nadu news today updates, Chennai weather, TN News, TN politics

இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:27 (IST)08 Jan 2020

    மெரிக்கா அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது

    நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன்

    ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாமல் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது

    ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரான் தாக்குதலில், அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவே பாதிப்பு ஏற்பட்டது. ஈரானின் அத்துமீறல் செயல்களை சகிக்க முடியாது. சுலைமானி எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்க முடியாது. அந்நாட்டின் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதார்த்தத்தை புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

    அமெரிக்க மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில், உலகம் முழுவதும் அமெரிக்கா அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது

    -அமெரிக்க அதிபர் டிரம்ப்

    21:55 (IST)08 Jan 2020

    மலேசியாவில் தர்பார் ரிலீஸ்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம், திட்டமிட்டப்படி நாளை மலேசியாவில் எந்த சிக்கலுமின்றி ரிலீசாகிறது. லைக்கா நிறுவனம் சார்பில் ரூ.4 கோடி டெபாசிட் தொகை வைக்கப்பட்டதால் சிக்கல் தீர்ந்தது.

    21:38 (IST)08 Jan 2020

    மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தி.மு.க உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கேள்விக்கு பதிலளித்த அவர், உடல் ஆரோக்கியம், முகப்பொழிவு பெற மற்றும் கோபத்தை குறைக்க யோகா மிகவும் அவசியம் என்றார். இது குறித்து உள்துறை அமைச்சர் வேலுமணியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    21:08 (IST)08 Jan 2020

    எத்தனை மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

    மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதாக எத்தனை மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    மத்திய சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    20:31 (IST)08 Jan 2020

    அமைச்சர் ஜெயக்குமார் பெயரையும், இலாக்காவையும் மாற்றிக் கூறிய அமைச்சர்

    கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் சரோஜா, மின்சாரம் மதுவிலக்கு துறை அமைச்சர் ஜெயக்குமார் என தவறுதலாக கூறிவிட்டு பின்னர் சுதாரித்துக்கொண்டு சொல்லத் தொடங்கினார்.

    ஆனால், அப்போது, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயராமன் என மீண்டும் தவறுதலாக கூற மேடையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார் பசி மயக்கமா என கேட்க அமைச்சர் சரோஜாவும் ஆம் பசி பசி என பதிலளிக்க அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

    20:22 (IST)08 Jan 2020

    1 கிலோ தங்கம் பறிமுதல்

    கொழும்பு, துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 59 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

    19:58 (IST)08 Jan 2020

    பொறுப்பு அரசுக்கு உள்ளது

    நிர்பயா வழக்கில் ஏற்பட்ட தாமதம் இனி எந்த வழக்கிலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அரசுக்கு உள்ளது - மக்கள் நீதி மய்யம்

    19:36 (IST)08 Jan 2020

    எந்த கட்சிக்கு வளர்பிறை? எந்த கட்சிக்கு தேய்பிறை?

    உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், எந்த கட்சிக்கு வளர்பிறை? எந்த கட்சிக்கு தேய்பிறை என்பது குறித்து விவாதம் நடந்து வருவதாகவும், இதன் முடிவு, வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் தெரிந்துவிடும் என ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை கடந்த கால தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு பெருமிதம் தெரிவித்தார் .. .

    19:33 (IST)08 Jan 2020

    பிரதமர் மோடி நாளை ஆலோசனை

    நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்

    அடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    19:33 (IST)08 Jan 2020

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த திட்டம்

    ஜனவரி 13ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த திட்டம்

    ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல், அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை

    19:05 (IST)08 Jan 2020

    2 மசோதாக்கள் என்னாயின?

    நீட் விலக்கு கோரி நிறைவேற்றிய 2 மசோதாக்கள் என்னாயின? புதிய மசோதா நிறைவேற்றக் கோரினேன். எதையும் செய்யாது வழக்கு தொடரும் நாடகம் ஏன்? என பேரவையில் அதிமுக அரசை கேள்வி எழுப்பினேன்.

    இது சமூகநீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகம் எனக் கூறினேன்

    என்று முக.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    18:43 (IST)08 Jan 2020

    சூதாட்ட கிளப்பால் இளைஞர்கள் வாழ்க்கைக்கு பாதிப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம்

    ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி, தமிழகத்தில் மதுக்கடைகளை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மொத்தமாக 6674 கடைகள் இருந்ததாகவும் தற்போது 5500 கடைகள் மட்டுமே இருப்பதாகவும், தமிழக அரசின் கொள்கையின்படி படிப்படியாக மதுவிலக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் மூலமாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாநிலத்திற்கு ஒரு கொள்கையை காங்கிரஸ் வைத்திருப்பதாகவும், புதுச்சேரியில் மதுவிற்பனைக்கு தடை கோராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். புதுச்சேரியில் வர உள்ள சூதாட்ட கிளப்பால் அந்த மாநில இளைஞர்கள் மட்டுமல்லாது தமிழக இளைஞர்களும் பாதிக்கப்படுவார்கள் என ஆவேசமாக பேசினார்.

    18:40 (IST)08 Jan 2020

    144 தடை உத்தரவு

    தூத்துக்குடி : அலங்காரதட்டு பகுதியில் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மாலை 6 மணி முதல் 11ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு - மாவட்ட ஆட்சியர்

    18:10 (IST)08 Jan 2020

    மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று வேலைநிறுத்தம் நடைபெறும் நிலையில், பெல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது

    17:57 (IST)08 Jan 2020

    நாங்கள் போரை விரும்பவில்லை - ஈரான்

    நாங்கள் போரை விரும்பவில்லை; இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறோம்

    ஈரான் விவகாரத்தில் இந்தியா முன்னெடுக்கும் எந்த ஒரு முயற்சியையும் வரவேற்கத் தயார்

    நாட்டு மக்கள் கேட்டதாலேயே சுலைமானி கொலைக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தினோம்

    - ஈரான் தூதர் அலி செகேனி

    17:48 (IST)08 Jan 2020

    ஸ்டெர்லைட் - தீர்ப்பு ஒத்திவைப்பு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

    * 39 நாட்கள் நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்ததால் தீர்ப்பு ஒத்திவைப்பு

    17:28 (IST)08 Jan 2020

    மேலும் அவகாசம் தர இயலாது

    சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் தர இயலாது என்று மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

    தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    17:09 (IST)08 Jan 2020

    3 பேர் கைது

    தீவிரவாதிகளுக்கு உதவியதாக 3 பேர் கைது -துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல்.

    பெங்களூரைச் சேர்ந்த முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது மூவரையும் தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    17:08 (IST)08 Jan 2020

    தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்

    தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.

    தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகியோர் வெளிநாடு தப்ப உதவியதாக தகவல்.

    கைது செய்த மூவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்.

    17:07 (IST)08 Jan 2020

    தர்பார் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் சிறப்புக் காட்சியை திரையிட அனுமதித்தது தமிழக அரசு.

    ஜனவரி 9, 10, 13, 14 ஆகிய 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி.

    14:53 (IST)08 Jan 2020

    பெல் நிறுவன பங்குகளை விற்க அமைச்சரவை ஒப்புதல்

    பெல் நிறுவன பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல்.

    14:19 (IST)08 Jan 2020

    ஜே.என்.யூ மாணவர்களுடன் திமுக எம்.பி.கனிமொழி சந்திப்பு

    ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக எம்.பி கனிமொழி அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு திமுக ஆதரவு என்பதை தெரிவித்தார். 

    14:06 (IST)08 Jan 2020

    ரஜினி பொங்கல் வாழ்த்து

    ஐதராபாத்தில் சினிமா படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு, இன்று விமானம் மூலம் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்த போது பொங்கல் வாழ்த்து தெரிவித்து விட்டு காரில் சென்றார்.

    13:08 (IST)08 Jan 2020

    கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    கேரளாவின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வாகனங்கள் ஓடவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவனந்தபுரம் ரயில் நிலைய சந்திப்பு தம்பானூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளும் சாலைகளும்  வெறிச்சோடி காணப்படுகின்றன. சில ஆட்டோக்களும் தனியார் வாகனங்களும் மட்டுமே இயங்கி வருகின்றன.

    12:42 (IST)08 Jan 2020

    சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்

    12:08 (IST)08 Jan 2020

    உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தடயவியல் ஆய்வகங்கள் அமைத்து அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும்,  அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    11:52 (IST)08 Jan 2020

    புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    புதுச்சேரி திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் பெரிய மார்க்கெட், நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் வீதி ஆகிய பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டன. புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    11:43 (IST)08 Jan 2020

    கோலியின் சர்ப்ரைஸ்

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சர்ப்ரைஸாக ஒருவர் சேர்க்கப்படவுள்ளார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்

    11:16 (IST)08 Jan 2020

    கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    தமிழகத்தை சுற்றி எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆதரவால் அரசுபேருந்துகள் நள்ளிரவு 12 மணி முதல் இயங்கவில்லை. தமிழகத்தில் பேருந்துகள் இயங்கி வருகிறது. ஆனால் கேரளா செல்லும் பேருந்துகள் மட்டும் எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    11:09 (IST)08 Jan 2020

    சென்னையில் தொழிற்சங்க தலைவர்கள் கைது

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேருந்தில் ஏற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால், பரபரப்பு நிலவியுள்ளது. 

    10:43 (IST)08 Jan 2020

    மத்திய அரசு எச்சரிக்கை

    ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஈராக்கினுள் பயணம் செய்வதை தவிருங்கள். அங்குள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை பாக்தாத், எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் செய்கின்றன  எனவும், இந்திய விமானங்கள் ஈரான், ஈராக வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

    10:14 (IST)08 Jan 2020

    20 கோடி பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபாடு

    நாடு முழுவதும் அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் தமிழகத்தில் வங்கி பணிகள் மொத்தமாக முடங்கி உள்ளது. அரசு சார் நிறுவனங்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

    09:52 (IST)08 Jan 2020

    விமானம் விபத்து

    ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம், புறப்பட்டு சென்ற சற்று நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. ஈரான் -அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இந்த விமான விபத்து மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 180 பேரின் கதி என்ன? என்பதை அறிந்துக் கொள்ள அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

    09:40 (IST)08 Jan 2020

    மத்திய அரசு எச்சரிக்கை

    தொழிற்சங்கங்கள் இன்று நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் எனவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு இன்று எந்த வித விடுப்பும் அளிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

    09:13 (IST)08 Jan 2020

    புதுச்சேரியில் போக்குவரத்து பாதிப்பு

    தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்ததால் புதுச்சேரியில் பெரும்பாலான பஸ்கள், டெம்போக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் பல தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த அளவிலான தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் - புதுச்சேரி இடையேயான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    08:50 (IST)08 Jan 2020

    தமிழகம் - கேரளாவுக்கு இடையேயான போக்குவரத்து பாதிப்பு

    மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றன. கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதால் குமரியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேனி வழியாக கேரளாவிற்கு செல்லும் பஸ்களும் குமுளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    08:31 (IST)08 Jan 2020

    பேருந்துகள் இயக்கப்படவில்லை

    மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், தமிழகத்தில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. 

    JNU Students Protest : விவாதங்ககளின் மூலம் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பெயர் பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில், வன்முறை ஒரு தீர்வாகாது என்று ஜே.என்.யூ துணை வேந்தர் மாமிடலா ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது , பல்கலைக்கழகத்திற்கு இயல்புநிலை திரும்புவதை உறுதி செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் உற்று நோக்குகிறோம் என்றார். குளிர்கால செமஸ்டருக்கான பதிவு செயல்முறை மீண்டும் தொடங்கப்படும் என்றார். கடந்த காலத்தை மறந்து ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.
    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment