Advertisment

குடியுரிமை மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றம்: சோனியா, மு.க. ஸ்டாலின் கருத்து

Chennai petrol diesel price : ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.97-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ. 69.81 ஆகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

 குடியுரிமை திருத்த மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றம் (CAB) : மக்களவையில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு நள்ளிரவு அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு  குடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மசோதா நிறைவேற்றப்பட்டது.

Advertisment

 

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான நேற்று அவரை நினைவுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில் சமூக சீர்திருத்தம், தேசப்பற்று, கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் என்று நினைவு கூறியுள்ளார் மோடி.

மேலும் படிக்க : குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எங்கே செல்லுபடியாகாது?

Live Blog

Tamil Nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பினை நீங்கள் இந்த இணைப்பில் காணலாம்.



























Highlights

    21:45 (IST)11 Dec 2019

    அதிமுக அரசை கோடரிக்காம்பு என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும்

    குடியுரிமை மசோதா மூலம் மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் மீது நேரடித் தாக்குதல். குடியுரிமையை மதத்துடன் இணைப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத அதிமுக அரசை கோடரிக்காம்பு என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும். பாஜகவின் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை என்றால், அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? - மு.க.ஸ்டாலின்

    21:29 (IST)11 Dec 2019

    இந்திய அரசியலமைப்பில் இன்று கருப்பு தினம்

    இந்திய அரசியலமைப்பில் இன்று கருப்பு தினம் என்று குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் குறித்து சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    21:28 (IST)11 Dec 2019

    ஊழல் ஆட்சி - கொலைகார ஆட்சி - கொள்ளைக்கார ஆட்சி

    இதுவரை 'ஊழல் ஆட்சி' - 'கொலைகார ஆட்சி' - 'கொள்ளைக்கார ஆட்சி' என்று நாம் சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி ஆட்சி, இப்போது 'தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாக' மாறியிருக்கிறது!

    அதிமுக - பாஜக கூட்டணியின் உண்மை முகத்தை திமுக-வினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து உணர்த்திட வேண்டும்.

    20:59 (IST)11 Dec 2019

    குடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

    குடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மசோதா நிறைவேற்றப்பட்டது.

    20:57 (IST)11 Dec 2019

    241 ரன்கள் இலக்கு

    3-வது டி20 கிரிக்கெட் போட்டி : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

    அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 91, ரோகித் சர்மா 71, விராட் கோலி 70 ரன்கள் குவித்தனர்

    20:35 (IST)11 Dec 2019

    43 திருத்தங்களின் மீது வாக்கெடுப்பு

    குடியுரிமை மசோதாவில் கொண்டுவரக் கோரிய 43 திருத்தங்களின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது

    நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் தோல்வி

    20:33 (IST)11 Dec 2019

    தீர்மானத்திற்கு எதிராக 124 உறுப்பினர்கள்

    குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு எதிராக 124 உறுப்பினர்கள், ஆதரவாக 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

    20:32 (IST)11 Dec 2019

    தீர்மானம் தோல்வி

    குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது

    குடியுரிமை மசோதா வாக்கெடுப்பை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து சிவசேனா வெளிநடப்பு

    20:10 (IST)11 Dec 2019

    மாநிலங்களவையில் வாக்கெடுப்பு...

    குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு

    மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை.

    19:41 (IST)11 Dec 2019

    இடி விழுந்தது போல்...

    தலையில் இடி விழுந்தது போல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு திமுக கூட்டணி மேல் விழுந்துள்ளது

    நீதிமன்றத்தை மேலும் மேலும் அணுகாமல் மக்களை சந்திப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்

    உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஆலோசனை வழங்கினார்

    - அமைச்சர் ஜெயக்குமார்

    19:41 (IST)11 Dec 2019

    தீர்ப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகின்றன

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை, தீர்ப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகின்றன - திமுக தலைவர் ஸ்டாலின்

    19:27 (IST)11 Dec 2019

    இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினரை எந்த விதத்திலும் பாதிக்காது

    இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கடந்த காலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது, தற்போது மற்ற 3 நாடுகளில் இருந்து வரும் பிரச்சனைகள் தொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினரை எந்த விதத்திலும் பாதிக்காது - அமித்ஷா - உள்துறை அமைச்சர் அமித்ஷா

    19:27 (IST)11 Dec 2019

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் தேர்தல்

    உச்ச நீதிமன்ற ஆணைப்படியே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் வார்டு மறுவரையறை எனவே, டிச.9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்

    19:08 (IST)11 Dec 2019

    ஜனவரி 23க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் : எம்.பி. ரவீந்திரநாத்துக்கு இறுதி கெடு

    தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் எம்பியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி அத்தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மிலானி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும்,பதில் மனு அளிக்கும் வரை அவர் எம்.பி. பதவி வகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதையடுத்து, வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ரவீந்திரநாத் குமாருக்கு இறுதி கெடு விதித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வழக்கின் விசாரணையையும் அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    18:58 (IST)11 Dec 2019

    மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

    இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோரை நீக்கிய குடியுரிமை திருத்த மசோதாவை வங்க கடலில் தூக்கி எரியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

    18:57 (IST)11 Dec 2019

    மேயர் பதவி - இடஒதுக்கீடு

    வேலூர் மாநகராட்சி மேயர் பதவி - பட்டியலின பிரிவு (பெண்), தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி - பட்டியலின பிரிவு (பொது) ஒதுக்கீடு

    திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி - பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு

    18:55 (IST)11 Dec 2019

    முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது

    18:55 (IST)11 Dec 2019

    இந்தியா பேட்டிங்

    இந்தியா மற்றும் மே.தீவுகள் அணிகள் மோதும் 3வது டி-20 போட்டியில் மே.தீவுகள் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

    18:48 (IST)11 Dec 2019

    தமிழ் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி

    2020 தமிழ் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார். ரஜினி கட்சி தொடங்கினால் திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்

    - சத்யநாராயண ராவ் 

    18:44 (IST)11 Dec 2019

    உள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு

    தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் மாநகராட்சி குறித்த அறிவிப்பை, நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

    அதன் படி, வேலூர் மாநகராட்சி எஸ்.சி பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சியில் எஸ்.சி பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோயில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    17:14 (IST)11 Dec 2019

    ஸ்டாலினை சந்தித்த ரோமானிய நாட்டு தூதர்

    இந்தியாவிற்கான ரோமானிய நாட்டின் தூதர், ருமானியா  நாட்டின் கவுரவ தூதர், ஸ்காட்லாந்து நாட்டு தொழிலதிபர், டெல்லியை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர், ருமானிய நாட்டு தூதரகத்தின் வர்த்தக ஆலோசகர் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உடன் இருந்தார்.

    17:03 (IST)11 Dec 2019

    ராணுவ வீரர்கள் குவிப்பு

    குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு. திரிபுராவில் 2 ராணுவக் குழுக்களும், அசாமில் ஒரு ராணுவக் குழுவும் தயார் நிலையில் நிறுத்தம்

    16:51 (IST)11 Dec 2019

    கனிமொழி வழக்கு

    தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு : எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய கனிமொழி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    16:25 (IST)11 Dec 2019

    விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 75வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று, பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 50வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி-48 10 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்

    15:40 (IST)11 Dec 2019

    விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48

    10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது இந்த ராக்கெட். இந்தியாவின் ரீசாட் 2பிஆர்1 செயற்கைகோள் உட்பட 10 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது. 

    15:35 (IST)11 Dec 2019

    தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு இறுதிக் கெடு

    தேர்தல் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு இறுதிக் கெடு. வாக்காளர் மிலானி தொடர்ந்த வழக்கில் ஜன.23க்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யாததால் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி நிலானி புது மனு தாக்கல் செய்துள்ளார். 

    15:18 (IST)11 Dec 2019

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை

    அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது, ஆனால் பிழை இல்லா நல் அமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம். இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை என குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

    15:04 (IST)11 Dec 2019

    ப.சிதம்பரம் கேள்வி

    சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல் என்றும்,  எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

    14:38 (IST)11 Dec 2019

    ஏ.எல்.விஜய் தரப்பு வாதம்

    ஜெ.தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை ஏற்கெனவே வெளிவந்த புத்தகத்தை தழுவியே தலைவி திரைப்படம் எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை என ஏ.எல்.விஜய் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. 

    14:14 (IST)11 Dec 2019

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவளிக்கும் என்றும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க ஏதுவாக திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் அதிமுக எம்பி பாலசுப்பிரமணியன் பேச்சு. 

    14:04 (IST)11 Dec 2019

    ஜெ.தீபா வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை கோரிய மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு.  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

    13:36 (IST)11 Dec 2019

    தெலுங்கானா என்கவுண்டர் விவகாரம்

    தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தை டெல்லியில் இருந்தபடி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரணை நடத்துவார் என  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    12:46 (IST)11 Dec 2019

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது - அமித் ஷா

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று தவறான தகவல்கள் பரபரப்படுகிறது. இந்திய முஸ்லீம்களுக்கும் இந்த மசோதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதை எதிர்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    12:33 (IST)11 Dec 2019

    அசாம் மாநிலத்தில் போலீசார் குவிப்பு

    தற்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    12:32 (IST)11 Dec 2019

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

    மக்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேறிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இன்றே வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

    12:03 (IST)11 Dec 2019

    இலங்கை தமிழ் அகதிகள் குறித்து குடியுரிமை மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை - சஞ்சய் ராவத்

    இலங்கை தமிழ் அகதிகள் குறித்து குடியுரிமை மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் அறிவிப்பு. குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவது சரியல்ல என்றும் அவர் பேச்சு

    12:01 (IST)11 Dec 2019

    நடிகர் ரஜினி காந்த் அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

    நடிகர் ரஜினி காந்த் அடுத்த ஆண்டு கட்சி துவங்குவார் என்றும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் என்றும் அவருடைய சகோதரர் சத்திய நாராயணராவ் பேட்டி அளித்துள்ளார். 2021ம் ஆண்டில் ரஜினி கூறிய அதிசயம் அற்புதம் நிகழும் என்றும் பேச்சு

    11:33 (IST)11 Dec 2019

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து மோடி பேச்சு

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து. குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் சில கட்சியினர் பாகிஸ்தானின் குரலில் பேசுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு.

    11:14 (IST)11 Dec 2019

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தில் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ. 48 குறைந்து தற்போது ரூ. 28,728க்கு விற்பனையாகி வருகிறது.

    11:00 (IST)11 Dec 2019

    ஒரு கிலோ வெங்காயம் ரூ. 10க்கு விற்பனை

    கடலூரில் சில நாட்களாக வெங்காயம் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை 5 கிலோ வெங்காயம் ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் விலை மிக குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கி சென்றனர்.

    10:52 (IST)11 Dec 2019

    பாரதியார் பிறந்த தினம் : அமைச்சர்கள் மரியாதை

    பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    10:41 (IST)11 Dec 2019

    பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் துவங்கியது

    குடியுரிமை மசோதா மாநிலங்களைவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பாஜக எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் பங்கேற்பு.

    10:29 (IST)11 Dec 2019

    குரூப் 1 தேர்வு - வைகோ கருத்து

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வின் நேர்காணலின் போது, மதிப்பெண்களை பென்சிலால் மட்டும் எழுத வேண்டும் என்று தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறித்து வைகோ கருத்து. கிராமப்புறங்களை சேர்ந்த, பெரிய பின்புலம் ஏதும் இல்லாத தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடும் கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள்.

    10:28 (IST)11 Dec 2019

    CAB - எதிர்த்து போராட்டம்

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுரா பகுதியில் பொதுமக்கள் போராட்டம்.

    10:16 (IST)11 Dec 2019

    அசாரூதின் மகனுக்கும் சனியா மிர்சாவின் தங்கைக்கும் திருமணம்

    அசாரூதின் மகனுக்கும் சனியா மிர்சாவின் தங்கைக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பவனிற்கு சனியா மிர்சாவும் அசாரூதீனும் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு கொடுத்தனர்.

    10:06 (IST)11 Dec 2019

    சேலத்தில் நடைபெற்ற வருமான வரிசோதனை நிறைவு

    சேலம் தனியார் உணவகத்திற்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை தற்போது முடிவு பெற்றதாகவும், முக்கிய ஆவணங்கள் அந்த இடங்களில் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Tamil Nadu news today updates : இந்தியாவில் இன்னொரு பாரதி உருவாவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்றும் பாரதியாக மாறுவதற்கு ஆணாக பிறந்து தலைப்பாகை, மீசை வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் அறிவித்துள்ளார்.

    இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment