Advertisment

Tamil Nadu news today updates: நாடு முழுவதும் நடைபெறவிருந்த வங்கி அதிகாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates:  இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து மீட்டேடுக்க  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக , மும்பை பங்குச் சந்தையில்  சென்செக்ஸ் புள்ளிகள் இன்று உயர்ந்த நிலையில் வணிகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று காலைநேர நிலவரப்படி, சென்செக்ஸ் 978 புள்ளிகளும்,  நிஃப்டி 291 புள்ளிகளும்  உயர்ந்து காணப்பட்டன.

Advertisment

விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்லி திகார் சிறையில் உள்ள ப. சிதம்பரத்தை இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இடைக்கால காங்.தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்திக்க உள்ளனர்.  இதுபோன்ற, முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கைப் பின் தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், அரசியல் சூழ்நிலைகள், அரசின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் இங்கே உடனுக்குடன் காணலாம்.   



























Highlights

    22:02 (IST)23 Sep 2019

    அமைச்சர் மட்டும் தவறிழைக்க முடியுமா?

    ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்றே ப.சிதம்பரம் ஒப்புதல் வழங்கினார்

    அதிகாரிகள் தவறிழைக்கவில்லை எனில் அமைச்சர் மட்டும் தவறிழைக்க முடியுமா?

    ஐஎன்எக்ஸ் வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் - மன்மோகன் சிங்

    22:01 (IST)23 Sep 2019

    வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

    செப்.26,27 நடைபெறவிருந்த வங்கி அதிகாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

    கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.

    21:59 (IST)23 Sep 2019

    பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது - பிரதமர் மோடி

    பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது; இனி செயல்பட வேண்டும்

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும். நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை தொடங்கியுள்ளோம்

    இந்தாண்டு இந்திய சுதந்திர தினத்திற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கத்தை தொடங்கியுள்ளோம். உலகளவில் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

    - ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை

    21:31 (IST)23 Sep 2019

    தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

    தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு செப். 25ம் தேதி மாலை 6 மணி முதல் செப். 27ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

    20:53 (IST)23 Sep 2019

    அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்கிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்கிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வரும் 26-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    20:43 (IST)23 Sep 2019

    மழை மீட்பு பணி - ரூ.38.52 கோடி ஒதுக்கீடு

    மழை மீட்பு பணி - ரூ.38.52 கோடி ஒதுக்கீடு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து அரசு வெளியிட்ட அறிக்கையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து முப்படை

    அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்ய உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற தயார் நிலையில் மின் மோட்டார்கள் மற்றும் போதுமான அளவு மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் கையிருப்பு இருப்பதாகவும் நியாய விலைக் கடைகளில் 2 மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மழை மீட்பு பணிக்கு 38 கோடியே 52 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    20:38 (IST)23 Sep 2019

    விஜய் அரசியல் கருத்தை கூறக்கூடாது என யாரும் கூற முடியாது - பொன்.ராதா

    இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவது குறித்து கட்சி தலைமை விரைவில் முடிவெடுக்கும். விஜய் அரசியல் கருத்தை கூறக்கூடாது என யாரும் கூற முடியாது; உண்மையான அரசியல் கருத்துகளை சொன்னால் யாருக்கும் வருத்தம் கிடையாது, அனைவருக்கும் மகிழ்ச்சியே - பொன்.ராதாகிருஷ்ணன்

    20:36 (IST)23 Sep 2019

    ரஜினிகாந்த் படத்தில் தான் பஞ்ச் பேசுவார் - ஆர்.வி.உதயகுமார்

    பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்துகள். ரஜினிகாந்த் படத்தில் தான் பஞ்ச் டயலாக் பேசுவார், மேடைகளில் எதார்த்தமாக பேசுவார். மற்ற நடிகர்களும் அதனை பின்பற்ற வேண்டும், எதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும் - இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

    19:42 (IST)23 Sep 2019

    அதிமுக-வை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம்

    "அதிமுக-வை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம்": அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி பதில்

    19:37 (IST)23 Sep 2019

    திரைப்படத்தில் நடிக்கிறார் ஆந்திர துணை முதல்வர்

    ஆந்திர மாநிலத்தின் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், துணைமுதல்வராகவும் பதவி வகித்து வர் உபவர் புஷ்பா ஸ்ரீவானி. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை மையப்பட்டுத்தி எடுக்கப்பட்டுவரும் ‘அம்ருத பூமி’ திரைப்படத்தில் ஆசிரியராக நடிக்கிறார்.

    19:35 (IST)23 Sep 2019

    4 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன

    பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக 4 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன

    மோசமான வானிலையால் பெங்களூருவில் இருந்து சென்னை வந்து செல்லும் 5 விமானங்கள் தாமதம்.

    19:34 (IST)23 Sep 2019

    காங்கிரஸ் சார்பில் 11 பேர் விருப்ப மனு

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் 11 பேர் விருப்ப மனு; பாஜக சார்பில் 6 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

    புதுச்சேரி காமராஜ் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி முடிவு செய்வார்

    செப்.25ஆம் தேதி முதல்வர் நாராயணசாமியுடன் டெல்லி சென்று வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும்

    அதிமுக, பாஜக சார்பில் யார் நின்றாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - நமச்சிவாயம் 

    19:32 (IST)23 Sep 2019

    கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி

    கப்பலூர் சுங்கச்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திகேயனுக்கு பதில் அவரது தந்தை சட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி

    கார்த்திகேயன் சிறையில் உள்ளதால், அவருக்கு பதில் அவரது தந்தை கலந்தாய்வில் பங்கேற்க ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி.

    19:31 (IST)23 Sep 2019

    2 அல்லது 3 நாட்களில் வெங்காய விலை குறையும் - தமிழக அரசு

    வெங்காயம் வெளி சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பொருள் சார்ந்த பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். மழையின் காரணமாக நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்த‌தன் காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் அதிக அளவில் லாரிகளில் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    18:40 (IST)23 Sep 2019

    மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு

    அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை அபகரித்ததாக திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    18:39 (IST)23 Sep 2019

    13ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு

    13ஆம் நூற்றாண்டுகளில் வடமாநிலங்களில் இருந்து இந்தி மொழி நுழைவிற்கு இப்போது போன்றே எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள 13ஆம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் குறித்து சாந்தலிங்கம் தலைமையிலான 3பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.மேலும், கோயிலில், 800 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்து, கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை ஆவண படுத்தி ஆறு மாதங்களுக்குள் புத்தகமாக வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    18:04 (IST)23 Sep 2019

    சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

    கோவை: ஆழியாறு குரங்கு அருவியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

    பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் மழை காரணமாக குரங்கு அருவியில் காட்டாற்று வெள்ளம்

    18:00 (IST)23 Sep 2019

    ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    மதுரை - தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பாதை அமைக்கும் பணியில், சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்கள் மணல் அள்ளுவதாக வழக்கு.

    மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    17:59 (IST)23 Sep 2019

    தமிழக அரசுக்கு ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது?

    மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது? என ஐகோர்ட் கேள்வி

    செவிலியர்களின் ஊதிய விவகாரம் தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என செவிலியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

    செவிலியர் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண ஏன் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை - ஐகோர்ட் கேள்வி

    அக்.15ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக சுகாதாரத் துறைக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவு

    17:59 (IST)23 Sep 2019

    தமிழக அரசுக்கு ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது?

    மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது? என ஐகோர்ட் கேள்வி

    செவிலியர்களின் ஊதிய விவகாரம் தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என செவிலியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

    செவிலியர் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண ஏன் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை - ஐகோர்ட் கேள்வி

    அக்.15ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக சுகாதாரத் துறைக்கு சென்னை ஐகோர்ட்  உத்தரவு

    17:30 (IST)23 Sep 2019

    அதிமுக - நேர்க்காணல்

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் தற்போது தொடங்கியுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ள 90 பேரிடம் அதிமுகவின் ஆட்சிமன்ற குழுவினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

    17:26 (IST)23 Sep 2019

    நீட் ஆள் மாறாட்டம்

    நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யாவின் வழக்கு, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது கடந்த சில தினங்களாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    17:09 (IST)23 Sep 2019

    மழைகால ஆயத்தம்

    வடகிழக்கு பருவமழைக் காலத்தையொட்டி ரேஷன் கடைகளில் போதிய பொருட்களை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உபகரணங்களுடன் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், கூடுதல் உபகரணங்களை வாங்க ரூ.38.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பருவமழை முன்னேற்பாடு குறித்து தலைமைச்செயலர் தலைமையில் முப்படை ஆய்வுக்கூட்டம் நடத்தவேண்டும். அக்டோபர் முதல் வாரத்திலிருந்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், மழைக்காலத்தில் உயிர்சேதத்தை தவிர்க்க அனைத்துத்துறை செயலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். 

    16:59 (IST)23 Sep 2019

    ஐஎன்எக்ஸ் வழக்கு

    ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    நீதிபதி: பதில்மனு, விளக்கமனு தாக்கல் செய்யப்பட்டதா?

    சிபிஐ தரப்பு:விசாரணை அறிக்கை, பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    ப.சி தரப்பு: விளக்கமனுவை தாக்கல் செய்தோம், தற்போது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்கிறோம்.

    16:32 (IST)23 Sep 2019

    புதுச்சேரி தொகுதிக்கு விருப்ப மனு

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் விருப்ப மனு அளித்துள்ளார். 

    16:18 (IST)23 Sep 2019

    குறைந்த விலைக்கு வெங்காயம்

    நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து 3 நாட்களுக்குள் வெங்காயம் சென்னை வந்து சேரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெங்காயம் பதுக்கல் செய்யப்படாமல் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் சிறப்பு நடவடிக்கையால், குறைவான விலைக்கு வெங்காயம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    15:56 (IST)23 Sep 2019

    பங்கு சந்தை நிலவரம்

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,075 பள்ளிகள் உயர்ந்து 39,090-ல் வர்த்தகம் நிறைவுப் பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 329 புள்ளிகள் குறைந்து 11,603-ல் வணிகம் நிறைவடைந்துள்ளது. 

    15:42 (IST)23 Sep 2019

    காங்கிரஸ் பொதுக்குழு அறிவிப்பு

    தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 30-ம் தேதி கோவையில் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

    14:59 (IST)23 Sep 2019

    காதர் பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு

    2008ம் ஆண்டு அருப்புக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட 6 சிலைகளை ரூ.6 கோடிக்கு விற்றதாக டி.எஸ்.பி காதர் பாட்ஷா மீது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் 2017ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை எதிர்த்து மனு கொடுத்தார் காதர் பாட்ஷா. ஆனால் அவ்வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

    14:46 (IST)23 Sep 2019

    விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?

    திமுக இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுக எம்.பி. கவுதம சிகாமணி விருப்ப மனு அளித்துள்ளார். தன்னுடைய சொந்த செலவில் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    14:43 (IST)23 Sep 2019

    சுபஸ்ரீ விபத்து விவகாரம் : அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் என்று கேள்வி

    12ம் தேதி அன்று, பள்ளிக்கரணையில் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சுபஸ்ரீ என்ற பெண்ணின் மீது பேனர் விழுந்தது. நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் மீது லாரி ஏறியதால் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி.

    14:40 (IST)23 Sep 2019

    விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்

    விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் : திமுக எம்.பி. விருப்ப மனு. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெற்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன்.

    14:21 (IST)23 Sep 2019

    நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரம்

    ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை விசாரணை அதிகாரி உஷா மதுரை உயர்நீதிமன்றக்கிளை அரசு வழக்கறிஞரிடம் வழங்கினார்.

    14:15 (IST)23 Sep 2019

    மழைக்காலத்தை எதிர்கொள்ள அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் - தினகரன்

    மழைகாலத்தை எதிர் கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை மாவட்டங்கள் தோறும் அமைத்திட வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    14:00 (IST)23 Sep 2019

    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அமித் ஷா

    அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே அடையாள அட்டை தேவைப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்புகளுக்கு மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும் என்றும் டிஜில் கணக்கெடுப்புக்கான மாற்றமாக இது இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பாஸ்போர்ட், வங்கி கணக்குகள், ட்ரைவிங் லைசென்ஸ், ஆதார் அடையாள அட்டை என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் விதமாக டிஜிட்டல் கணக்கெடுப்பு அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

    12:48 (IST)23 Sep 2019

    பொருளாளர் பிரேம லதா கருத்து:

    விஜகாந்தின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடியில் நடந்த பொதுக் கூடத்தில்  பேசிய தேமுதிக கட்சியின் பொருளாளர்  பிரேமலதா, " பேனர்  வைக்க கூடாது என்று சொன்ன முதல் கட்சி தேமுதிக தான். சுப ஸ்ரீ மரணம் விதியால் நடந்தது. பேனர் விழுந்ததும், அதே நேரத்தில் லாரி வந்ததும் எதிர் பாராத விஷயம். ஆனால், இதை எதர்க் கட்சியினர் பெரிது படுத்துகின்றனர். ஆளும் கட்சியின் பேனர் என்பதால் தான் இவ்வவளவு சர்ச்சைகள்" என்று தெரிவித்துள்ளார்.  

    12:37 (IST)23 Sep 2019

    வட்டி விகிதம் குறைப்பு:

    நாட்டில் பண நடமாட்டத்தை அதிகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பல முயற்சிகளை எடுத்து வந்திருந்தது. உதாரணமாக, ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தையும் படிப்படியாக குறைத்தது.  ரெப்போ  விகிதம் குறைந்தாலும், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்காமலே இருந்து வந்தனர்.    

    இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா -  வீடு, வாகனம், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ,  வரும் அக். 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.  

    11:54 (IST)23 Sep 2019

    தமிழிசை வாபஸ் பெற்றார்

    நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக கட்சியில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். பாஜக கட்சியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் தோல்வியைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, கனிமொழியின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை மனுத் தாக்கல் செய்திருந்தார்.  சில , நாட்களுக்கு முன்பு தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கான மாநிலத்தின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார் . இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மனுவை வாபஸ் செய்வதாக தமிழிசை தற்போது அறிவித்துள்ளார். 

    11:06 (IST)23 Sep 2019

    கட்சி தைரியமாக இருந்தால், நானும் தைரியமாக இருப்பேன்- ப.சிதம்பரம்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இடைக்கால காங்.தலைவர் சோனியா காந்தி இருவரும் திகார் ஜெயில் சென்று சிதம்பரத்தை சந்தித்து தற்போது கிளம்பியுள்ளனர்.  பின்னர், ட்விட்டரில் ப.சிதம்பரம், " சோனியா காந்தி, மன்மோகன் சிங் இருவரும் என்னை வந்து சந்தித்தை நான் பெருமையாகவே உணர்கிறேன். காங்கிரஸ் கட்சி  தைரியமாகவும், வலுவாகவும் இருக்கும் வரை நானும் தைரியாமாக இருப்பேன்" தெரிவித்துள்ளார். 

    ப.சிதம்பரத்தின் பதிலாக அவரது குடும்பத்தினர் இந்த ட்வீட் செய்வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது   

    10:36 (IST)23 Sep 2019

    திகார் ஜெயிலில் சந்திப்பு:

    கடந்த 5ம் தேதி முதல் ஐஎன்எக்ஸ் நிதி மோசடி வழக்கில் நிதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம். டெல்லி திகார் சிறையில் இருந்தாலும், அவ்வபோது தனது கருத்துகளை ட்விட்டரில் தனது குடும்ப உதவியுடன் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இடைக்கால காங்.தலைவர் சோனியா காந்தி திகார் ஜெயில் சென்று சிதம்பரத்தை சந்தித்தனர். 

    சிதம்பரத்தை சந்தித்து விட்டு இருவரும் வெளியேறும் காட்சிகள் தற்போது கிடைத்துள்ளன. 

    soniya gandhi leaves tihar jail 

    manmohan singh leaves tihar jail

    manmohan singh leaves tihar jail

    publive-image

    10:28 (IST)23 Sep 2019

    சென்சக்ஸ் உயர்வு-

    மும்பை பங்குச் சந்தையில்  சென்செக்ஸ் புள்ளிகள் இன்று உயர்ந்த நிலையில் வணிகம் செய்யப்பட்டு வருகிறது. சென்சக்ஸ் 978 புள்ளிகள் உயர்ந்து 38,993 என்ற எண்ணிகையில் வணிகம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல், நிஃப்டியிலும் 291 புள்ளிகள் உயர்ந்து 11,565 என்ற எண்ணிக்கையில் வணிகம் செய்யப்பட்டு வருகிறது.   

    10:18 (IST)23 Sep 2019

    விஜய் பிகில் ஆடியோ லாஞ்ச

    விஜய்- நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் படத்தின் ஆடியோ லாஞ்ச், கடந்த செப்.19 ம் தேதியன்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த ஆடியோ லாஞ்சில் விஜய் சுபஸ்ரீ விவகாரத்தைப் பற்றி பேசும் போது,   " யார் மீது பழிபோடுறதுன்னு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடிச்சவங்க மேலயும் பழிபோடுறாங்க" . யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அவங்களை அங்க உட்கார வச்சா நல்லா இருக்கும்” என்று சொல்லியிருந்தார்.  ஆளும் கட்சியில் இருக்கும் முன்னணி அமைச்சர்கள் இந்த பேச்சுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்," படம் ஓட வேண்டும், அதற்கு விளம்பரம் வேண்டும், அதற்காக தான் ஒவ்வொரு ஆடியோ லாஞ்சிலும் இவ்வாறு விஜய் பேசி வருகிறார்" என்று தெரிவித்தார். 

    Tamil Nadu news today updates: அரசு முறைப்பயணமாக 1 வாரம் அமெரிக்க சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, நேற்று இந்தியர்கள் குழுமியிருந்த ஹௌடி மோடி என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் மற்றும் அந்நாட்டு அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த  அதிமுக-பாஜக இந்த இடைத் தேர்தலிலும் போட்டியிடுமா? நாங்குநேரி தொகுதியை அதிமுக, பாரதிய ஜனதாவிற்கு ஒதுக்குமா?  என்ற கேள்விக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பதில் தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.

     

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment