Tamil Nadu news updates: 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

Tamil Nadu news today live updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கை பின் தொடருங்கள்.

By: Sep 20, 2019, 10:39:28 PM

Tamil Nadu news today live updates: கோவாவில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். இதில், ஜி.எஸ்.டி வரி ஒழுங்குமுறை பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் வின்கலத்திலிருந்து நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு இல்லாமல். போனது. விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் இஸ்ரோவின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா?

நடிகர் விஜய் தனது பிகில் பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில், பேனர் விழுந்ததால் லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில்,பேனர் வைத்தவர்களை விட்டுவிட்டு பேனர் அச்சடித்தவர்களையும், லாரி டிரைவரையும் குற்றம் சொல்வது சரியல்ல என்று கூறினார். விஜயின் இந்த கருத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்களையும் நெல்லையில் 2 காவல் ஆய்வாளர்களையும் பணி இடமாற்றம் செய்து டிஐஜி பிரவீன் குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.

இது போன்ற, தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல், விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.

Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இங்கே காணலாம்.
22:39 (IST)20 Sep 2019
40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பூர் ஆட்சியர் பழனிசாமி மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக விஜய கார்த்திகேயன் நியமனம். 

நாமக்கல் ஆட்சியராக இருந்த ஆசியா மரியம் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக மேகராஜ் நியமனம்

20:53 (IST)20 Sep 2019
தாம்பரம் – நெல்லைக்கு சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அறிவிப்பு

திருச்சி - தாம்பரம் சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இயக்கம், மறுமார்க்கத்தில் அக். 9ம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து ரயில் புறப்படும்.

தாம்பரம் - நெல்லைக்கு சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக். 5ம் தேதி இரவு 8.50 மணிக்கு இயக்கம், மறுமார்க்கத்தில் அக். 8ம் தேதி இரவு 9.40 மணிக்கு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

20:26 (IST)20 Sep 2019
சேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ரயில் நிலையத்திற்கு கடிதம் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.  வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

20:23 (IST)20 Sep 2019
லதா ரஜினிகாந்த்துக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் அமைதியையும், பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான கல்வியாளராக லதா ரஜினிகாந்த் பாராட்டத்தக்க வேலையைச் செய்கிறார் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பாராட்டியுள்ளார். டில்லியில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்கை, லதா ரஜினிகாந்த் சந்தித்துப்பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

19:45 (IST)20 Sep 2019
மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற நடவடிக்கை – மோடி டுவீட்

தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் ஐநாவில் இந்தியா நடத்தும் காந்தியின் பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என்று பிரதமர் மோடி, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This year the world is marking the 150th birth anniversary of Mahatma Gandhi. At the <a href="https://twitter.com/UN?ref_src=twsrc^tfw">@UN</a>, India will host a programme to mark this special occasion. The event, which would be graced by world leaders, will showcase the rich thoughts of Gandhi Ji.</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1175037630754381824?ref_src=twsrc^tfw">September 20, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

19:26 (IST)20 Sep 2019
கீழடியில் சர்வதேச அருங்காட்சியகம் – ஸ்டாலின் கோரிக்கை

குஜராத் மாநிலத்தில் சர்வதேச அருங்காட்சியகம் அமைக்கப்படுவதை போன்று, கீழடியிலும் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழர் நாகரிகத்தின் தொன்மையை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

18:34 (IST)20 Sep 2019
வரிச்சலுகைக்கு எதிர்ப்பு : கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகை அளிப்பதன் மூலம் பொருளாதாரம் உயரும் என்ற முடிவு தவறானது.  வரிச்சலுகை அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து அக்.10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

17:55 (IST)20 Sep 2019
சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது – சிபிஐ பதில் மனு தாக்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது  என  டில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் ஜாமின் மனு மீதான விசாரணை 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சிபிஐ பதில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

17:17 (IST)20 Sep 2019
வரிகுறைப்பு அறிவிப்பால் தொழில்துறை முன்னேற்றம் அடையும் – ஜி.கே.வாசன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள கார்பரேட் வரி குறைப்பால்,நாட்டின் தொழில்துறை முன்னேற்றம் அடையும் என்று  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி 30 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

16:36 (IST)20 Sep 2019
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஆடவர் 52கி உடல் எடை பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்; அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் Saken Bibossinov-ஐ 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.

16:12 (IST)20 Sep 2019
அட இந்த உத்தரவு நல்லாயிருக்கே!!

பேருந்து நிலைய வளாகங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

16:11 (IST)20 Sep 2019
மேட்டூர் அணை - நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 12,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

16:06 (IST)20 Sep 2019
மெட்ரோ ரயிலில் பயணம் செய்த கமல்ஹாசன்

மேற்குவங்கத்தில் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து சென்னை வந்துள்ள 40 குழந்தைகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.

தேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை இரு மார்க்கத்திலும் அவர் பயணம் செய்திருக்கிறார். 

15:59 (IST)20 Sep 2019
மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம் மால்லபுரத்திர்க்கு அடுத்த மாதம் 11ம் தேதி பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வருகை தரவுள்ளனர். அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இரு தலைவர்களும், கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், ஆதிவராக மண்டபம், கோவர்த்தன மண்டபம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர்.

பின்னர் இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அந்த பகுதிகளில் சீன பாதுகாப்பு துறை அதிகாரிகள், சுற்றுலா துறை அதிகாரிகள், உள்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

15:52 (IST)20 Sep 2019
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - சிபிஐ அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்தும், காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல். செய்துள்ளது.

15:48 (IST)20 Sep 2019
அதிமுக பொதுக்குழு எப்போது?

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒருமுறை பொதுக் குழுவையும், 2 முறை செயற்குழுக் கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது சட்ட விதி. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இணைப்புக்கு பின்னர், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12 -ஆம் ஆண்டில் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 2018-ல் பொதுக் குழுவை கூட்டாதது தொடர்பான காரணத்தை அ.தி.மு.க. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வாயிலாக தகவல் அனுப்பியது. தி.மு.க. அக்டோபர் 6ஆம் தேதியன்று பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தி முடிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பொதுக் குழுவை கூட்டி, தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுப்போம் என்ற உறுதிமொழியை அதிமுக தலைமை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15:45 (IST)20 Sep 2019
மீன் துகள்களுக்கு முற்றிலும் வரி விலக்கு

மீன் துகள்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

15:44 (IST)20 Sep 2019
விஜய் மீது பொன்.ராதா மறைமுக தாக்கு

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹிந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேடி வருவதாக குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் தமிழ் மொழி பரவ சீரிய முறையில் வேலைகள் செய்யவேண்டும் என்றார்.

பின்னர், நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என குறிப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், அவர்களும் நாட்டின் குடிமக்களே என்றார்.

14:56 (IST)20 Sep 2019
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் நிர்வாகி புகார் மனு. சோனியா, ராகுலை தரக்குறைவாக பேசியதாக சென்னை கிழக்கு மாவட்ட காங். கமிட்டி தலைவர் ராஜசேகரன் மனு

14:50 (IST)20 Sep 2019
சித்தனாதன் விபூதி நிறுவனத்தாரின் வீட்டில் ஐடி ரெய்டு

பழனியில் சித்தனாதன் விபூதி நிறுவனத்தாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.

20 நாட்களுக்கு முன்பு சித்தனாதன் விபூதி கடையில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது..

14:48 (IST)20 Sep 2019
காப்பான் பார்த்தால் மரக்கன்றுகள் இலவசம்

சேலத்தில், காப்பான் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களுக்கு, மரக்கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்தனர். பட வெளியீட்டை கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடிய சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகிகள், திரையரங்கு வாசலில் சுமார் 700 மரக்கன்றுகளை வழங்கினார்கள். சூர்யாவின் கோரிக்கையை ஏற்று, நகரில் எந்த பகுதியில் டிஜிட்டல் பேனர்களை வைக்கவில்லை என்று கூறிய ரசிகர்கள், அடுத்தகட்டமாக இலவச ஹெல்மெட் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

14:35 (IST)20 Sep 2019
வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை

வரிச்சலுகை அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது  என்று கூறியுள்ளார்.

14:19 (IST)20 Sep 2019
2 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:07 (IST)20 Sep 2019
சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது

சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமணம்பட்டி சுங்க சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டபொம்மன் வேடமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுங்க சாவடிக்கு பூட்டு போட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்து சென்றனர்.

13:46 (IST)20 Sep 2019
அரசாங்கத்தின் அலட்சியத்தால் பல ரகுக்கள், பல சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள வீடியோவில், அரசாங்கத்தின் அலட்சியத்தால் பல ரகுக்கள், பல சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக  மாற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

13:19 (IST)20 Sep 2019
தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து மனு தாக்கல்; முடிவு ஒத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பணி இடமாற்றம் செய்த கொலிஜியம் பரிந்துரையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த முடிவை நீதிமன்ற ஒத்திவைத்துள்ளது.

12:24 (IST)20 Sep 2019
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீசார் விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவின், தந்தை வெங்கடேசன் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சீப் மெடிகல் ஆபீசர் ஆக பணிபுரிந்து வருவதால் தேனி தனிப்படை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் விசாரணை

12:02 (IST)20 Sep 2019
பானஜியில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது

கோவா மாநிலத்தில் உள்ள பானஜியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

11:45 (IST)20 Sep 2019
மும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

மும்பையில் உள்ள லோகமான்ய திலகர் சாலையில் உள்ள நான்கு மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பனியியில் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் ஈடுபட்டுள்ளனர்.

11:38 (IST)20 Sep 2019
கெத்து, வச்சு செய்வேன் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: ஒரு மொழிக்கு ஆதாரம் என்பது சொற்கள். கெத்து, வச்சு செய்வேன் என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது. இளைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதனை பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார்.

11:25 (IST)20 Sep 2019
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் - உச்ச நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், தேர்தல் முடிவுகள் உச்சநீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

11:09 (IST)20 Sep 2019
புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவாவில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 23-ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

10:47 (IST)20 Sep 2019
பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது

உத்தரப்பிரதேசம் மாநில சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சின்மயானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

10:40 (IST)20 Sep 2019
சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது சிறுமியை பணிக்கு அமர்த்திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

10:22 (IST)20 Sep 2019
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கோவா சென்ற அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.எஸ்.டி கூட்டத்தில் முக்கியமான பொருட்களுக்கு வரி குறைப்பு இருக்கும். தமிழக ஆளுநரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததன் மூலம் அக்கட்சியின் அணுகுமுறை மாறியுள்ளதாக அறிய முடிகிறது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். நாடுமுழுவதும் தமிழை பொது மொழியாக்கினால் மகிழ்ச்சியாக இருக்கும். ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் திமுகவினர் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை நிறுத்துவதுடன் அது தொடர்பாக அறிக்கை வெளியிடத் தயாரா?” என்று கூறினார்.

10:11 (IST)20 Sep 2019
சென்னை அடையாறில் ராஜஸ்தான் கடற்படை வீரர் நெஞ்சில் பந்துபட்டு உயிரிழப்பு

சென்னை ஐஎன்எஸ் அடையாறில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராஜஸ்தானை சேர்ந்த இந்திய கடற்படை வீரர் ஜோகிந்தர் நெஞ்சில் பந்துபட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

10:08 (IST)20 Sep 2019
மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது

பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உரிய அனுமதியின்றி ரவி என்பவருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - 'சிவில் நீதிபதிகள்' தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி - தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முன்வராவிட்டால் இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை ஆகிய 3 நாட்களும் ஒட்டு மொத்தமாக சென்னையில் இருந்து 10,940 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8,310 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் ஏற்கெனவே தேவஸ்தான பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சேகர் ரெட்டி, தமிழகம் சார்பில் தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை ஆந்திர அரசு மீண்டும் நியமித்துள்ளது.

Web Title:Tamil nadu news today live updates chennai weather crime politics anti hindi bigil vijay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X